Skip to content

Popular

October 27 செவ்வாய்

On this day · October 27

வரலாற்றில் அக்டோபர் 27

அக்டோபர் 27 அன்று நிகழ்ந்த 58 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 31 பிறப்புகள் · 17 இறப்புகள் · 9 சிறப்பு நாட்கள் · 1

அக்டோபர் 27 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 31

10ஆம் நூற்றாண்டு

  1. 939

    இங்கிலாந்தின் மன்னர் ஏத்தெல்சுத்தான் இறந்ததை அடுத்து முதலாம் எட்மண்டு மன்னராக முடிச் சூடினார்.

13ஆம் நூற்றாண்டு

  1. 1275

    ஆம்ஸ்டர்டம் நகரம் அமைக்கப்பட்டது.

17ஆம் நூற்றாண்டு

  1. 1644

    இங்கிலாந்து உள்நாட்டுப் போர்: நியூபெரியில் இரண்டாம் தடவை போர் இடம்பெற்றது.

  2. 1682

    பென்சில்வேனியாவின் பிலடெல்பியா நகரம் அமைக்கப்பட்டது.

18ஆம் நூற்றாண்டு

  1. 1795

    எசுப்பானியக் குடியேற்றங்களுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான எல்லைகளை வரையறுக்கும் உடன்படிக்கை இரு நாடுகளுக்கும் இடையில் மத்ரித் நகரில் செய்துகொள்ளப்பட்டது.

19ஆம் நூற்றாண்டு

  1. 1806

    பிரெஞ்சுப் படையினர் பெர்லின் நகரினுள் நுழைந்தனர்.

  2. 1810

    மேற்கு புளோரிடாவின் முன்னாள் எசுப்பானியக் குடியேற்றங்களை அமெரிக்கா இணைத்துக் கொண்டது.

  3. 1867

    கரிபால்டியின் படைகள் ரோம் நகருள் புகுந்தன.

  4. 1870

    140,000 பிரெஞ்சுப் படை வீரர்கள் மெட்சு நகரில் இடம்பெற்ற போரில் புருசியாவிடம் சரணடைந்தனர்.

20ஆம் நூற்றாண்டு

  1. 1904

    முதலாவது சுரங்க நியூயார்க் நகர சப்வே பாதை திறக்கப்பட்டது. இதுவே ஐக்கிய அமெரிக்காவில் மிகப் பெரியதும், உலகில் மிகப் பெரிய சுரங்கப் பாதைகளில் ஒன்றும் ஆகும்.

  2. 1907

    அங்கேரியில் செர்னோவா என்ற இடத்தில் கிறித்தவக் கோவிலில் வழிபாட்டின் போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் கொல்லப்பட்டனர்.

  3. 1914

    முதலாம் உலகப் போரில் பிரித்தானிக் கடற்படை முதலாவது தோல்வியைச் சந்தித்தது. ஓடாசியசு என்ற போர்க்கப்பல் அயர்லாந்தின் வடமேற்கே செருமனியின் கண்ணிவெடித் தாக்குதலில் மூழ்கியது.

  4. 1922

    தென்னாப்பிரிக்க ஒன்றியத்தில் இணைய ரொடீசியாவில் இடம்பெற்ற பொதுவாக்கெடுப்பு தோல்வியில் முடிந்தது.

  5. 1924

    உஸ்பெக் சோவியத் குடியரசு சோவியத் ஒன்றியத்தில் அமைக்கப்பட்டது.

  6. 1936

    திருமதி வாலிசு சிம்ப்சன் மணமுறிவு பெற்றார். இது அவருக்கு இங்கிலாந்தின் மன்னர் எட்டாம் எட்வர்டைத் திருமணம் புரிய வழிவகுத்தது. இத்திருமணத்தால் எட்டாம் எட்வர்டு முடிதுறக்க நேரிட்டது.

  7. 1958

    பாக்கித்தானின் முதலாவது அரசுத்தலைவர் இஸ்காண்டர் மிர்சா இராணுவப் புரட்சி ஒன்றில் பதவியில் இருந்து இறக்கப்பட்டு இராணுவத் தலைவர் அயூப் கான் ஆட்சியைக் கைப்பற்றினார்.

  8. 1961

    நாசா தனது முதலாவது சட்டர்ன் 1 ஏவூர்தியை விண்ணுக்கு ஏவியது.

  9. 1961

    மூரித்தானியா, மங்கோலியா ஆகியன ஐக்கிய நாடுகள் அவையில் சேர்ந்தன.

  10. 1962

    கியூபா ஏவுகணை நெருக்கடி: கியூபாவில் அமெரிக்காவின் யூ-2 விமானம் சோவியத் தயாரிப்பு நில வான் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது.

  11. 1971

    காங்கோ மக்களாட்சிக் குடியரசு சயீர் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

  12. 1973

    1.4 கிகி விண்வீழ்கல் கொலராடோவின் கேனன் நகரைத் தாக்கியது.

  13. 1979

    செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.

  14. 1981

    பனிப்போர்: சோவியத் நீர்மூழ்கி ஒன்று சுவீடனின் கிழக்குக் கரையில் மூழ்கியது.

  15. 1982

    யாழ்ப்பாணம், சாவகச்சேரி காவல் நிலையம் விடுதலைப் புலிகளால் தாக்கப்பட்டது.

  16. 1990

    வட இலங்கை முஸ்லீம்களின் கட்டாய வெளியேற்றம்: யாழ்ப்பாண மாவட்டத்தைத் தாயகமாக கொண்ட முசுலிம்கள் அனைவரும் விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டனர்.

  17. 1991

    துருக்மெனிஸ்தான், சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலை அடைந்தது.

  18. 1999

    ஆர்மீனிய நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் பிரதமர், அவைத் தலைவர் உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.

21ஆம் நூற்றாண்டு

  1. 2005

    பாரிசில் இரண்டு முசுலிம் இளைஞர்கள் கொல்லப்பட்டதை அடுத்து அங்கு கலவரம் ஏற்பட்டது.

  2. 2007

    காங்கோவில் இடம்பெற்ற பெரு வெள்ளம் காரணமாக 30 பேர் உயிரிழந்து, 100 பேர் காயமடைந்தனர்.

  3. 2014

    2002, சூன் 20 இல் ஆரம்பிக்கப்பட்ட எரிக் இராணுவ நடவடிக்கையை முடித்துக் கொண்டு பிரித்தானிய இராணுவம் ஆப்கானித்தானில் இருந்து வெளியேறியது.

  4. 2017

    காத்தலோனியா எசுப்பானியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

பிறப்புகள்

Births · 17

இறப்புகள்

Deaths · 9

இம்மாத நாட்கள் · அக்டோபர்

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — அக்டோபர் 27 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.