Skip to content

Popular

October 24 சனி

On this day · October 24

வரலாற்றில் அக்டோபர் 24

அக்டோபர் 24 அன்று நிகழ்ந்த 68 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 31 பிறப்புகள் · 18 இறப்புகள் · 15 சிறப்பு நாட்கள் · 4

அக்டோபர் 24 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 31

1ஆம் நூற்றாண்டு

  1. 69

    வெசுப்பாசியானுக்கு விசுவாசமான படையினர் உரோமைப் பேரரசர் விட்டேலியசின் படைகளைத் தோற்கடித்தனர்.

13ஆம் நூற்றாண்டு

  1. 1260

    சார்ட்டேர்ஸ் கதீட்ரல் பிரான்சின் ஒன்பதாம் லூயி மன்னனால் திறந்து வைக்கப்பட்டது. இது தற்போது யுனெசுக்கோவினால் உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

17ஆம் நூற்றாண்டு

  1. 1605

    முகலாயப் பேரரசர் ஜகாங்கீரின் முடிசூட்டு விழா இடம்பெற்றது.

  2. 1648

    வெஸ்ட்ஃபாலியா அமைதி ஒப்பந்தம் முப்பதாண்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது.

18ஆம் நூற்றாண்டு

  1. 1795

    போலந்து-லித்துவேனியா பொதுநலவாயம் கலைக்கப்பட்டு, அதனை ஆஸ்திரியா, புருசியா, மற்றும் உருசியா ஆகியன தமக்குள் பங்கிட்டுக் கொண்டன.

19ஆம் நூற்றாண்டு

  1. 1801

    மருது பாண்டிய சகோதரர்களும் அவர்கள் குடும்பத்தைச் சேரந்த 500க்கும் மேற்பட்ட மன்னர் குடும்பத்தாரும் வெள்ளையர்களால் தூக்கிலிடப்பட்டனர்.

  2. 1851

    யுரேனசு கோளைச் சுற்றும் உம்பிரியல், ஏரியல் ஆகிய நிலாக்களை வில்லியம் இலாசல் கண்டுபிடித்தார்.

  3. 1857

    உலகின் முதலாவது காற்பந்தாட்ட அணி செபீல்டு இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்டது.

  4. 1861

    ஐக்கிய அமெரிக்காவில் கண்டங்களுக்கிடையேயான முதலாவது தந்தித் தொடர்பு ஏற்படுத்தப்பட்டது.

  5. 1871

    லாஸ் ஏஞ்சலஸ் நகரில் 20 வரையான சீனக் குடியேறிகள் சித்திரவதை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர்.

20ஆம் நூற்றாண்டு

  1. 1902

    குவாத்தமாலாவின் சாண்டா மரியா எரிமலை வெடிக்க ஆரம்பித்தது. இது 20-ஆம் நூற்றாண்டின் மூன்றாவது மிகப்பெரிய எரிமலை வெடிப்பு ஆகும்.

  2. 1911

    வட கரொலைனாவில் ரைட் சகோதரர்கள் தமது வானூர்தியில் வானில் 9 நிமிடங்கள் 45 செக்கன்கள் பறந்தார்கள்.

  3. 1912

    முதலாவது பால்கான் போர்: குமனோவா என்ற இடத்தில் இடம்பெற்ற உதுமானியப் பேரரசுக்கு எதிரான போரில் செர்பியா வெற்றி பெற்றது.

  4. 1917

    முதலாம் உலகப் போர்: கப்பரெட்டோ சமரில் ஆத்திரியா-அங்கேரி, செருமனியப் படைகளிடம் இத்தாலி பெரும் தோல்வியடைந்தது.

  5. 1917

    போல்செவிக் செம்படையினர் உருசியாவில் அரசக் கட்டடங்களைக் கைப்பற்ற ஆரம்பித்தனர். அக்டோபர் புரட்சியின் முதல் நிகழ்வுகள் இவையாகும்.

  6. 1929

    கறுப்பு வியாழன்: நியூயார்க் பங்குச் சந்தையில் பங்குகள் சரிவு.

  7. 1930

    பிரேசிலில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அரசுத்தலைவர் வாசிங்டன் லூயிசு பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

  8. 1943

    நாடு கடந்த இந்திய அரசு முறைப்படி பிரித்தானியா மீதும் அமெரிக்கா மீதும் போரை அறிவித்தது.

  9. 1944

    இரண்டாம் உலகப் போர்: முசாசி என்ற சப்பானியப் போர்க்கப்பலை அமெரிக்க விமானங்கள் தாக்கி மூழ்கடித்தன.

  10. 1945

    ஐக்கிய நாடுகள் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.

  11. 1946

    வி-2 இல. 13 என்ற ஏவூர்தியில் பொருத்தப்பட்ட புகைப்படக் கருவி மூலம் முதன் முதலாக விண்ணில் இருந்து பூமியின் புகைப்படம் எடுக்கப்பட்டது.

  12. 1949

    ஐக்கிய நாடுகள் தலைமையகத்தின் அடிக்கல் நாட்டப்பட்டது.

  13. 1954

    டுவைட் டி. ஐசனாவர் தெற்கு வியட்நாமிற்கு ஐக்கிய அமெரிக்காவின் ஆதரவைத் தெரிவித்தார்.

  14. 1960

    சோவியத் ஒன்றியத்தின் பைக்கனூர் விண்தளத்தில் ஆர்-16 ஏவுகணை வெடித்ததில் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

  15. 1964

    வடக்கு றொடீசியா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்று சாம்பியா என்னும் பெயரைப் பெற்றது.

  16. 1980

    போலந்து அரசு சொலிடாரிட்டி தொழிற்சங்கத்தை அங்கீகரித்தது.

  17. 1994

    கொழும்பில் தேர்தல் கூட்டத்தில் நடந்த குண்டுவெடிப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசுத்தலைவர் வேட்பாளர் காமினி திசாநாயக்கா உட்பட 52 பேர் கொல்லப்பட்டனர்.

  18. 1998

    டீப் ஸ்பேஸ் 1 என்ற வால்வெள்ளி/சிறுகோள் திட்டம் ஆரம்பமானது.

21ஆம் நூற்றாண்டு

  1. 2003

    கான்கோர்டு விமானம் தனது கடைசி வணிக-நோக்குப் பயணத்தை மேற்கொண்டது.

  2. 2007

    சந்திரனின் சுற்றுப்பாதையில் நிலவைச் சுற்றிவரும் முதல் சீன ஆளற்ற விண்கலம் 'சாங்-ஒன்று' தென்மேற்கு சீனாவின் ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது.

  3. 2008

    இரத்த வெள்ளி அன்று உலகின் பெரும்பாலான பங்குச் சந்தைகள் வரலாறு காணாத வீழ்ச்சியைக் கண்டன.

பிறப்புகள்

Births · 18

இறப்புகள்

Deaths · 15

இம்மாத நாட்கள் · அக்டோபர்

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — அக்டோபர் 24 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.