Skip to content

Popular

October 23 வெள்ளி

On this day · October 23

வரலாற்றில் அக்டோபர் 23

அக்டோபர் 23 அன்று நிகழ்ந்த 70 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 37 பிறப்புகள் · 21 இறப்புகள் · 8 சிறப்பு நாட்கள் · 4

அக்டோபர் 23 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 37

கிமு (பொ.ஊ.மு)

  1. கிமு 42

    உரோமைப் பேரரசன் புரூட்டசின் இராணுவத்தை மார்க் அந்தோனியும், ஒக்டோவியனும் தோற்கடித்தனர். இறுதியில் புரூட்டசு தற்கொலை செய்து கொண்டான்.

5ஆம் நூற்றாண்டு

  1. 425

    மூன்றாம் வலன்டீனியன் தனது ஆறாவது அகவையில் உரோமைப் பேரரசனாக முடி சூடினான்.

12ஆம் நூற்றாண்டு

  1. 1157

    டென்மார்க்கில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. மன்னன் மூன்றாம் சுவெயின் கொல்லப்பட்டு முதலாம் வால்டிமார் அரசனானான்.

13ஆம் நூற்றாண்டு

  1. 1295

    இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒப்பந்தத்தை இசுக்காட்லாந்தும் பிரான்சும் பாரிசில் செய்து கொண்டன.

17ஆம் நூற்றாண்டு

  1. 1694

    வில்லியம் பிப்சு தலைமையிலான பிரித்தானிய/அமெரிக்க குடியேற்றப் படையினர் கியூபெக்கை பிரான்சிடம் இருந்து கைப்பற்றத் தவறினர்.

18ஆம் நூற்றாண்டு

  1. 1707

    பெரிய பிரித்தானியாவின் முதல் நாடாளுமன்றம் கூடியது.

  2. 1739

    பிரித்தானியப் பிரதமர் ராபர்ட் வால்போல் எசுப்பானியா மீது போரை அறிவித்தார்.

19ஆம் நூற்றாண்டு

  1. 1864

    அமெரிக்க உள்நாட்டுப் போர்: வெசுட்போர்ட் சமரில் அமெரிக்கப் படைகள் கூட்டமைப்புப் படைகளை மிசோரி வெசுட்போர்ட் சமரில் தோற்கடித்தன.

  2. 1870

    பிரான்சின் மெட்சு என்ற இடத்தில் இடம்பெற்ற இறுதிப் போரில் புருசியா வெற்றியடைந்தது.

20ஆம் நூற்றாண்டு

  1. 1906

    அல்பேர்ட்டோ சாண்டோஸ்-டூமொண்ட் பாரிசு நகரில் ஐரோப்பாவின் முதலாவது வானூர்தியைப் பறக்க விட்டார்.

  2. 1911

    முதற்தடவையாக வானூர்தி ஒன்று போரில் பயன்படுத்தப்பட்டது. இத்தாலிய வானோடி லிபியாவில் இருந்து புறப்பட்டு துருக்கிய இராணுவ நிலைகளை அவதானித்தான்.

  3. 1912

    முதலாம் பால்க்கன் போர்: செர்பியாவுக்கும் உதுமானியப் பேரரசுக்கும் இடையில் குமனோவோ என்ற இடத்தில் போர் ஆரம்பமானது.

  4. 1915

    நியூயோர்க் நகரில் 25,000-33,000 வரையான பெண்கள் வாக்குரிமை கோரிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  5. 1917

    லெனின் அக்டோபர் புரட்சிக்கு அழைப்பு விடுத்தார்.

  6. 1929

    1929 வால் வீதி வீழ்ச்சி. பங்குச்சந்தை விலைகளில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டதை அடுத்து, நியூயார்க் பங்குச் சந்தை வீழ்ச்சியடையத் தொடங்கியது.

  7. 1941

    இரண்டாம் உலகப் போர்: மாஸ்கோவை நாட்சி செருமனி கைப்பற்றுவதைத் தடுக்கும் பொருட்டு சோவியத் இராணுவத் தளபதி கியோர்கி சூக்கொவ் செஞ்சேனைக்குத் தலைமை ஏற்றார்.

  8. 1942

    இரண்டாம் உலகப் போர்: இரண்டாம் அல்-அலமைன் சண்டை: வடக்கு எகிப்தில், பிரித்தானியாவின் எட்டாவது இராணுப் படைகள் பெர்னார்ட் மோண்ட்கோமரி தலைமையில் எகிப்தில் இருந்து அச்சு இராணுவத்தினரை வெளியேற்ற போர் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

  9. 1942

    அமெரிக்க வான்படையின் தாக்குதலுக்கு அமெரிக்கப் பயணிகள் விமானம் ஒன்று இலக்கானதில் அதில் பயணம் செய்த அனைத்து 12 பேரும் கொல்லப்பட்டனர்.

  10. 1944

    இரண்டாம் உலகப் போர்: வரலாற்றின் மிகப்பெரும் கடற்படைப் போர் பிலிப்பீன்சில் ஆரம்பமாயிற்று.

  11. 1946

    ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் முதலாவது கூட்டத்தொடர் நியூயோர்க் நகரில் ஆரம்பமாயிற்று.

  12. 1955

    பிரதமர் நியோ டின் டியெம் முன்னாள் பேரரசர் பாவோ டையை பொது வாக்கெடுப்பில் தோற்கடித்து தென் வியட்நாமை அமைத்தார்.

  13. 1956

    அங்கேரியப் புரட்சி, 1956: அங்கேரியில் பல்லாயிரக்கணக்கானோர் அரசுக்கு எதிராகவும் சோவியத் ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் போராட்டம் நடத்தினர். அங்கேரியப் புரட்சி நவம்பர் 4-இல் நசுக்கப்பட்டது.

  14. 1958

    நோவா ஸ்கோசியாவில் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 174 நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள் சிக்கினர். இவர்களில் 100 பேர் மட்டும் நவம்பர் 1 வரையில் மீட்கப்பட்டனர்.

  15. 1966

    ஐக்கிய நாடுகள் அவை மைய மண்டபத்தில் எம். எஸ். சுப்புலட்சுமியின் இசை நிகழ்ச்சி இடம்பெற்றது.

  16. 1983

    லெபனான் உள்நாட்டுப் போர்: லெபனானில் பெய்ரூட் நகரில் அமெரிக்கக் கடற்படைத் தளத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் 241 அமெரிக்கக் கடற்படையினர் கொல்லப்பட்டனர். அதே நாளில் இடம்பெற்ற மற்றொரு தாக்குதலில் பிரெஞ்சு இராணுவத்தினர் 58 பேர் கொல்லப்பட்டனர்.

  17. 1989

    கம்யூனிச அங்கேரிய மக்கள் குடியரசு கலைக்கப்பட்டு அங்கேரியக் குடியரசு நிறுவப்பட்டது.

  18. 1991

    கம்போடிய வியட்நாம் போரை முடிவுக்குக் கொண்டுவந்த அமைதி ஒப்பந்தம் பாரிசில் கையெழுத்திடப்பட்டது.

  19. 1991

    ஈழப்போர்: தமிழீழப் போரில் அனாதைகளான பெண் பிள்ளைகளின் மறுவாழ்வுக்காக செஞ்சோலை சிறுவர் இல்லம் விடுதலைப் புலிகளால் ஆரம்பிக்கப்பட்டது.

  20. 1993

    பெல்பாஸ்ட் நகரில் ஐரியக் குடியரசுப் படை குண்டுத் தாக்குதல் நடத்தியதில் ஒன்பது பொது மக்கள் கொல்லப்பட்டனர்.

  21. 1998

    இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு: இசுரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தனியாகு, பாலத்தீனத் தலைவர் யாசிர் அரஃபாத் ஆகியோருக்கிடையில் "அமைதிக்காக நிலம்" என்ற உடன்பாடு எட்டப்பட்டது.

21ஆம் நூற்றாண்டு

  1. 2001

    வட அயர்லாந்தில் இடம்பெற்ற அமைதிப் பேச்சுக்களின் பின்னர் ஐரியக் குடியரசுப் படை ஆயுதக் களைவில் ஈடுபட்டது.

  2. 2001

    காஷ்மீர் விமானத் தளத்தைப் தகர்க்கும் தீவிரவாதிகளின் தற்கொலைப் படைமுயற்சி முறியடிக்கப்பட்டது. 4 தீவிரவாதிகள் மற்றும் ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டனர்.

  3. 2002

    மாஸ்கோவில் நாடக அரங்கு ஒன்றில் செச்சினியத் தீவிரவாதிகளினால் 700 பேர் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்.

  4. 2004

    வடக்கு சப்பானில் நீகாட்டாவில் நிலநடுக்கம் தாக்கியதில் 35 பேர் உயிரிழந்தனர், 2,200 பேர் காயமடைந்தனர்.

  5. 2006

    இலங்கை சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

  6. 2011

    துருக்கியில் 7.2 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் 582 பேர் உயிரிழந்தனர்.

  7. 2015

    பற்றீசியா சூறாவளி மெக்சிக்கோவைத் தாக்கியதில் 13 பேர் உயிரிழந்தனர்.

பிறப்புகள்

Births · 21

இறப்புகள்

Deaths · 8

இம்மாத நாட்கள் · அக்டோபர்

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — அக்டோபர் 23 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.