Skip to content

Popular

October 8 வியாழன்

On this day · October 8

வரலாற்றில் அக்டோபர் 8

அக்டோபர் 8 அன்று நிகழ்ந்த 68 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 30 பிறப்புகள் · 18 இறப்புகள் · 15 சிறப்பு நாட்கள் · 5

அக்டோபர் 8 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 30

4ஆம் நூற்றாண்டு

  1. 314

    உரோமைப் பேரரசர் லிசீனியசு சிபாலே என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் முதலாம் கான்ஸ்டன்டைனிடம் தோற்றான். இத்தோல்வி மூலம் தனது ஐரோப்பியப் பகுதிகளை இழந்தான்.

16ஆம் நூற்றாண்டு

  1. 1573

    எண்பதாண்டுப் போரில் நெதர்லாந்து முதலாவது வெற்றியை எசுப்பானியாவுக்கு எதிராகப் பெற்றது.

  2. 1582

    கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை.

19ஆம் நூற்றாண்டு

  1. 1813

    பவேரியாவுக்கும் ஆசுதிரியாவுக்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.

  2. 1821

    பெருவில் ஒசே சான் மார்ட்டின் தலைமையிலான அரசு கடற்படை அமைக்கப்பட்டது.

  3. 1836

    இலங்கையில் ஏற்றுமதி, இறக்குமதிகளுக்கு வரி விதிப்பு அமுலாக்கப்பட்டது.

  4. 1856

    சீனாவுக்கும் மேற்குலக நாடுகளுக்கும் இடையே இரண்டாம் அபினிப் போர் ஆரம்பமானது.

  5. 1862

    அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கப் படைகள் கென்டக்கியில் கூட்டமைப்புப் படைகளின் முற்றுகையைத் தடுத்து நிறுத்தின.

  6. 1871

    சிகாகோ பெருந்தீ: சிக்காகோவில் இடம்பெற்ற பெரும் தீயில் 100,000 பேர் வீடுகளை இழந்தனர். விஸ்கொன்சின் மாநிலத்தில் இடம்பெற்ற தீயில் 2,500 பேர் வரையில் உயிரிழந்தனர்.

  7. 1879

    பசிபிக் போர்: சிலியின் கடற்படை அங்காமொசு என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பெருக் கடற்படையைத் தோற்கடித்தது.

  8. 1895

    கொரியாவின் கடைசிப் பேரரசி மெயோங்சியோங் படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல் சப்பானியப் படைகளால் கியாங்பொக் அரண்மனையில் வைத்து எரிக்கப்பட்டது.

20ஆம் நூற்றாண்டு

  1. 1912

    முதலாவது பால்கன் போர் ஆரம்பமானது: மொண்டெனேகுரோ உதுமானியப் பேரரசுடன் போர் தொடுத்தது.

  2. 1918

    இரண்டாம் உலகப் போர்: பிரான்சில் அமெரிக்கக் கோப்ரல் அல்வின் யோர்க் தனியாளாக 25 செருமனிய இராணுவத்தினரைக் கொன்று, 132 பேரைக் கைப்பற்றினார்.

  3. 1932

    இந்திய வான்படை நிறுவப்பட்டது.

  4. 1939

    இரண்டாம் உலகப் போர்: செருமனி மேற்கு போலந்தை இணைத்துக் கொண்டது.

  5. 1941

    இரண்டாம் உலகப் போர்: ரசுத்தோவ் சண்டயின் ஆரம்பத்தில் செருமனியப் படைகள் அசோவ் கடலை அடைந்து மரியுபோல் நகரைக் கைப்பற்றின.

  6. 1944

    இரண்டாம் உலகப் போர்: குரூசிஃபிக்ஸ் ஹில் சண்டை ஆஃகன் நகருக்க்கருகில் இடம்பெற்றது.

  7. 1952

    லண்டனில் தொடருந்து விபத்தில் 112 பேர் உயிரிழந்தனர்..

  8. 1962

    அல்சீரியா ஐக்கிய நாடுகள் அவையில் இணைந்தது.

  9. 1967

    கெரில்லா இயக்கத் தலைவர் சே குவேராவும் அவரது சகாக்களும் பொலிவியாவில் கைது செய்யப்பட்டனர்.

  10. 1970

    வியட்நாம் போர்: பாரிசில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில், பொதுவுடைமைவாதிகள் அமெரிக்கத் தலைவர் நிக்சனின் அமைதி முன்மொழிவை நிராகரித்தனர்.

  11. 1973

    சூயசுக் கால்வாயின் இசுரேலியப் பக்கத்தில் இடம்பெற்ற போரில் 140 இசுரேலியத் தாங்கிகள் எகிப்திய படைகளினால் அழிக்கப்பட்டது.

  12. 1982

    சொலிடாரிட்டி தொழிற்சங்கம் போலந்தில் தடை செய்யப்பட்டது.

  13. 1987

    விடுதலைப் புலிகள் இந்திய அமைதி காக்கும் படையின் சரக்கு வாகனத்தைத் தாக்கியதில் 8 இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

  14. 1990

    இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு: எருசலேமில் இசுரேலியக் காவல்துறையினர் கோவில் மலையில் பாறைக் குவிமாடம் மசூதியைத் தாக்கியதில் 17 பாலத்தீனர் கொல்லப்பட்டு 100 பேருக்கு மேல் காயமடைந்தனர்.

  15. 1991

    குரோவாசியா, சுலோவீனியா மக்கள் யுகோசுலாவியாவில் இருந்து பிரிவதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

21ஆம் நூற்றாண்டு

  1. 2001

    இத்தாலியின் மிலன் நகரில் இரண்டு விமானங்கள் வானில் மோதியதில் 118 பேர் இறந்தனர்.

  2. 2005

    காசுமீரில் ஏற்பட்ட 7.6 அளவு நிலநடுக்கத்தில் பாக்கித்தான், இந்தியா, ஆப்கானித்தான் ஆகிய நாடுகளில் 86,000–87,351 பேர் வரையில் உயிரிழந்து, 69,000–75,266 வரையானோர் காயமடைந்தனர். 2.8 மில்லியன் பேர் வீடுகளை இழந்தனர்.

  3. 2006

    காலி கடற்படைத் தளத்தின் மீது விடுதலைப் புலிகள் தாக்கி 3 கடற்படைக் கலங்களை மூழ்கடித்தனர்.

  4. 2016

    மேத்யூ சூறாவளியின் தாக்கத்தால் இறந்தோரின் எண்ணிக்கை 900 ஐத் தாண்டியது.

பிறப்புகள்

Births · 18

இறப்புகள்

Deaths · 15

இம்மாத நாட்கள் · அக்டோபர்

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — அக்டோபர் 8 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.