Skip to content

Popular

October 6 செவ்வாய்

On this day · October 6

வரலாற்றில் அக்டோபர் 6

அக்டோபர் 6 அன்று நிகழ்ந்த 65 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 30 பிறப்புகள் · 22 இறப்புகள் · 10 சிறப்பு நாட்கள் · 3

அக்டோபர் 6 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 30

கிமு (பொ.ஊ.மு)

  1. கிமு 69

    உரோமைப் படைகள் திக்ரனோசெர்ட்டா சமரில் ஆர்மீனியாவை வெற்றி கொண்டது.

5ஆம் நூற்றாண்டு

  1. 404

    பைசாந்தியப் பேரரசி இயூடோக்சியா தனது ஏழாவது பிள்ளைப்பேறின் போது இறந்தார்.

16ஆம் நூற்றாண்டு

  1. 1582

    கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், எசுப்பானியா ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை.

17ஆம் நூற்றாண்டு

  1. 1683

    வில்லியம் பென் தன்னுடன் 13 செருமனியக் குடும்பங்களை பென்சில்வேனியாவுக்கு அழைத்துவந்து குடியேற்றினார். இவர்களே முதன் முதலாக அமெரிக்காவுக்கு குடியேறிய செருமானியர் ஆவர்.

18ஆம் நூற்றாண்டு

  1. 1762

    ஏழாண்டுப் போர்: பிரித்தானியாவுக்கும் எசுப்பானியாவுக்கும் இடையில் மணிலாவில் இடம்பெற்ற போர் முடிவுக்கு வந்தது. ஏழாண்டுப் போர் முடிவடையும் வரையில் பிரித்தானியா மணிலாவைத் தன் பிடியில் வைத்திருந்தது.

  2. 1777

    அமெரிக்கப் புரட்சிப் போர்: பிரித்தானியப் படைகள் அட்சன் ஆற்றுப் பகுதியில் கிளிண்டன், மொன்ட்கோமரி கோட்டைகளைக் கைப்பற்றின.

  3. 1789

    பிரெஞ்சுப் புரட்சி: முன்னைய நாள் பெண்களின் போராட்ட அணியை வெர்சாய் அரண்மனையில் எதிர்கொண்ட பிரான்சின் பதினாறாம் லூயி மன்னன் அங்கிருந்து வெளியேறி துலேரிசு அரண்மனைக்குக் குடியேறினான்.

  4. 1795

    கேணல் பாபற் என்பவரின் தலைமையில் பிரித்தானியப் படையினர் மன்னாரை ஒல்லாந்தரிடம் இருந்து கைப்பற்றினர்.

19ஆம் நூற்றாண்டு

  1. 1847

    அமெரிக்க மதப்பரப்புனரும், மருத்துவருமான சாமுவேல் பிஸ்க் கிறீன் பருத்தித்துறையை வந்தடைந்தார்.

  2. 1849

    அங்கேரிய விடுதலைப் போரின் முடிவில் போராளிகள் 13 பேர் அராட் என்ற இடத்தில் (தற்போது ருமேனியாவில்) தூக்கிலிடப்பட்டனர்.

  3. 1854

    இங்கிலாந்தில் நியூகாசில் மற்றும் கேற்சுகெட் நகரங்களில் பரவிய பெருத் தீயில் 54 பேர் உயிரிழந்து நூற்றுக்கணகானோர் காயமடைந்தனர்.

  4. 1889

    தான்சானியாவின் கிளிமஞ்சாரோ மலையின் உச்சி முதன் முதலில் எட்டப்பட்டது.

  5. 1890

    யாழ்ப்பாண நகரில் "சின்னக்கடை" எனப்படும் முக்கிய சந்தையில் கடைத்தொகுதி ஒன்று இடிந்து வீழ்ந்ததில் சில உயிரிழப்புகளுடன் பலர் படுகாயமடைந்தனர்.

20ஆம் நூற்றாண்டு

  1. 1908

    ஆத்திரியா-அங்கேரி தன்னுடன் பொசுனியா எர்செகோவினாவை இணைத்துக் கொண்டது.

  2. 1923

    முதலாம் உலகப் போர்: இசுதான்புல்லில் இருந்து பெரும் வல்லரசுகள் வெளியேறின.

  3. 1939

    இரண்டாம் உலகப் போர்: போலந்தின் கடைசி இராணுவத்தினர் தோற்கடிக்கப்பட்டனர்.

  4. 1943

    இரண்டாம் உலகப் போர்: கிரீட்டில் 13 பொதுமக்கள் துணை இராணுவக் குழுக்களினால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர்.

  5. 1966

    எல்எஸ்டி ஐக்கிய அமெரிக்காவில் தடை செய்யப்பட்டது.

  6. 1973

    80,000 எகிப்தியப் படைகள் சூயசுக் கால்வாயைக் கடந்து இசுரேலிய பார் லேவ் கோட்டை அழித்து, யோம் கிப்பூர்ப் போரை ஆரம்பித்தனர்.

  7. 1976

    சீன பிரதமர் நால்வர் குழுவையும் அவர்களைச் சேர்ந்தவர்களையும் கைது செய்ய உத்தரவிட்டார். சீனப் பண்பாட்டுப் புரட்சி முடிவுக்கு வந்தது.

  8. 1976

    பார்படோசில் இருந்து புறப்பட்ட கியூபா விமானம் ஒன்று பிடெல் காஸ்ட்ரோவுக்கெதிரான தீவிரவாதிகளால் குண்டுவைத்துத் தகர்க்கப்பட்டதில் 73 பேர் கொல்லப்பட்டனர்.

  9. 1976

    தாய்லாந்தில் அரசுக்கெதிராக இடம்பெற்ற மாணவர் போராட்டம் இராணுவத்தினரால் நசுக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

  10. 1977

    மிக்-29 வானூர்தி தனது முதலாவது பறப்பை மேற்கொண்டது.

  11. 1979

    திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் வெள்ளை மாளிகைக்குச் சென்ற முதலாவது திருத்தந்தை என்ற பெயரைப் பெற்றார்.

  12. 1981

    எகிப்திய அரசுத்தலைவர் அன்வர் சாதாத் இசுலாமியத் தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார்.

  13. 1987

    பிஜி குடியரசாகியது.

  14. 1995

    வேறொரு சூரியனை சுற்றி வரும் முதலாவது கோள் 51 பெகாசி பி கண்டுபிடிக்கப்பட்டது.

21ஆம் நூற்றாண்டு

  1. 2008

    அநுராதபுரம் குண்டுவெடிப்பு: தற்கொலைக் குண்டுவெடிப்பில் இலங்கையின் இராணுவத் தளபதி ஜானக பெரேரா உட்பட 27 பேர் கொல்லப்பட்டனர்.

  2. 2010

    இன்ஸ்ட்டாகிராம் ஆரம்பிக்கப்பட்டது.

தேதியில்லா

  1. •

    கிபி 23 – சீனாவில் இடம்பெற்ற உழவர் கிளர்ச்சியை அடுத்து சின் பேரரசர் கிளர்ச்சிவாதிகளால் தலை வெட்டப்பட்டுக் கொல்லப்பட்டார்.

பிறப்புகள்

Births · 22

இறப்புகள்

Deaths · 10

இம்மாத நாட்கள் · அக்டோபர்

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — அக்டோபர் 6 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.