Skip to content

Popular

August 1 சனி

On this day · August 1

வரலாற்றில் ஆகத்து 1

ஆகத்து 1 அன்று நிகழ்ந்த 84 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 38 பிறப்புகள் · 29 இறப்புகள் · 14 சிறப்பு நாட்கள் · 3

ஆகத்து 1 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 38

கிமு (பொ.ஊ.மு)

  1. கிமு 30

    ஒக்டேவியன் எகிப்தின் அலெக்சாந்திரியா நகரைக் கைப்பற்றி அதனை உரோமைக் குடியரசின் கீழ் கொண்டு வந்தான்.

6ஆம் நூற்றாண்டு

  1. 527

    முதலாம் ஜஸ்டீனியன் பைசாந்தியப் பேரரசராக முடிசூடினார்.

13ஆம் நூற்றாண்டு

  1. 1291

    சுவிஸ் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

15ஆம் நூற்றாண்டு

  1. 1498

    கிறித்தோபர் கொலம்பசு வெனிசுவேலாவில் தரையிறங்கினார். இங்கு வந்த முதலாவது ஐரோப்பர் இவராவார்.

16ஆம் நூற்றாண்டு

  1. 1571

    உதுமானியப் பேரரசு சைப்பிரசைக் கைப்பற்றியது.

17ஆம் நூற்றாண்டு

  1. 1664

    உதுமானியப் படைகள் சென் கோத்தார்டு சமரில் ஆத்திரிய இராணுவத்தினரால் தோற்கடிக்கப்பட்டன.

18ஆம் நூற்றாண்டு

  1. 1714

    அனோவரின் ஜோர்ஜ் பெரிய பிரித்தானியாவின் மன்னராக முதலாம் ஜோர்ஜ் என்ற பெயரில் முடிசூடினார்.

  2. 1759

    ஏழாண்டுப் போர்: மின்டென் சமரில் ஆங்கிலோ-செருமனியக் கூட்டுப் படை பிரெஞ்சுப் படைகளை வென்றது.

  3. 1774

    பிரித்தானிய அறிவியலாளர் சோசப்பு பிரீசிட்லி ஆக்சிசன் வளிமத்தைக் கண்டுபிடித்து, செருமன்-சுவீடிய வேதியலாளர் காரல் வில்லெம் சீலெயின் முந்தைய கண்டுபிடிப்பை உறுதிப்படுத்தினார்.

  4. 1800

    பெரிய பிரித்தானிய இராச்சியம், அயர்லாந்து இராச்சியம் ஆகியன பெரிய பிரித்தானியா, அயர்லாந்து ஐக்கிய இராச்சியம் என்ற பெயரில் இணைந்தன.

19ஆம் நூற்றாண்டு

  1. 1801

    அமெரிக்கப் பாய்க்கப்பல் என்டர்பிரைசு லிபியாவில் திரிப்போலி என்ற பாய்க்கப்பலைக் கைப்பற்றியது.

  2. 1834

    பிரித்தானியப் பேரரசில் அடிமை முறை ஒழிக்கப்பட்டது.

  3. 1867

    பிரித்தானிய இலங்கையில் கண்டிக்கும் கொழும்புக்கும் இடையே தொடருந்துப் போக்குவரத்து பொதுமக்களுக்கு ஆரம்பிக்கப்பட்டது.

  4. 1876

    கொலராடோ ஐக்கிய அமெரிக்காவின் 38வது மாநிலமாக ஏற்கப்பட்டது.

  5. 1894

    சப்பானுக்கும் சிங் சீனாவுக்கும் கொரியா தொடர்பான முதலாம் சீன சப்பானியப் போர் தொடங்கியது.

20ஆம் நூற்றாண்டு

  1. 1907

    சாரணிய இயக்கத்தின் முதல் பாசறையை பேடன் பவல் இங்கிலாந்தில் பிறௌன்சி தீவில் ஆரம்பித்து வைத்தார். இது ஆகத்து 9 வரை நீடித்தது.

  2. 1914

    முதலாம் உலகப் போர்: செருமானியப் பேரரசு உருசியப் பேரரசு மீது போரை ஆரம்பித்தது.

  3. 1914

    இலங்கையில் மன்னாருக்கும் மதவாச்சிக்கும் இடையில் பகல் நேர தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது.

  4. 1927

    சீன உள்நாட்டுப் போரின் முக்கிய சமர் குவோமின்டாங் படைகளுக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையில் ”நான்சாங்” என்ற இடத்தில் இடம்பெற்றது. இந்நாள் மக்கள் விடுதலை இராணுவத்தின் ஆரம்பிக்கப்பட்ட நாளாக நினைவு கூரப்படுகிறது.

  5. 1933

    பாசிசத்துக்கு எதிரான செயற்பாட்டளர்கள் நால்வர் செருமனி, ஆம்பர்கில் தூக்கிலிடப்பட்டனர்.

  6. 1936

    பெர்லினில் 11-வது ஒலிம்பிக் விளையாட்டுக்களை இட்லர் ஆரம்பித்து வைத்தார்.

  7. 1944

    இரண்டாம் உலகப் போர்: போலந்தில் வார்சாவா நகரில் நாட்சி ஜெர்மனிக்கெதிரான கிளர்ச்சி ஆரம்பமானது.

  8. 1946

    நாட்சி ஜெர்மனியுடன் உறவு வைத்திருந்த உருசிய விடுதலை இராணுவப் படையினர், தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளுக்காக மாஸ்கோவில் தூக்கிலிடப்பட்டனர்.

  9. 1950

    குவாம் ஐக்கிய அமெரிக்காவின் பொதுநலவாயத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது.

  10. 1952

    தொடருந்து நிலையங்களில் இந்தி அழிப்புப் போராட்டத்தை தந்தை பெரியார் துவக்கி வைத்தார்.

  11. 1960

    பெனின் பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

  12. 1960

    பாக்கித்தான் நடுவண் அரசின் தலைநகராக இசுலாமாபாத் அறிவிக்கப்பட்டது.

  13. 1964

    பெல்ஜிய கொங்கோவின் பெயர் காங்கோ மக்களாட்சிக் குடியரசு எனப் பெயர் மாற்றப்பட்டது.

  14. 1966

    டெக்சாசு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் 16 பேர் கொல்லப்பட்டனர்.

  15. 1968

    புரூணையின் 29வது சுல்தானாக அசனல் போல்கியா முடிசூடினார்.

  16. 1974

    சைப்பிரசை இரண்டு வலயங்களாகப் பிரிக்க ஐநா அமைதிகாக்கும் படையினருக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை அனுமதி வழங்கியது.

  17. 1980

    அயர்லாந்தில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர்.

  18. 1988

    இலண்டனில் இராணுவ முகாம் ஒன்றின் மீது ஐரியக் குடியரசுப் படையினர் குண்டுத் தாக்குதல் நடத்தியதில் ஒரு இராணுவ வீரர் கொல்லப்பட்டார்.

21ஆம் நூற்றாண்டு

  1. 2004

    பரகுவை தலைநகர் அசுன்சியோனில் பல்பொருள் அங்காடி ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 396 பேர் உயிரிழந்தனர், 500 பேர் காயமடைந்தனர்.

  2. 2006

    இலங்கை, திருகோணமலையில் கடற்படைத்தளம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 14 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.

  3. 2007

    அமெரிக்காவில் மினியாபோலிசில் மிசிசிப்பி ஆற்றின் குறுக்கே அமைந்த பாலம் ஒன்று வீழ்ந்ததில் 13 பேர் உயிரிழந்தனர், 145 பேர் காயமடைந்தனர்.

  4. 2008

    உலகின் மிக வேகமான தொடருந்து சேவை சீனாவில் பெய்ஜிங், தியான்ஜின் ஆகிய நகரங்களுக்கிடையே ஆரம்பிக்கப்பட்டது.

  5. 2008

    உலகின் இரண்டாவது பெரிய மலையான கே-2 கொடுமுடியில் 11 பன்னாட்டு மலையேறிகள் உயிரிழந்தனர்.

பிறப்புகள்

Births · 29

இறப்புகள்

Deaths · 14

இம்மாத நாட்கள் · ஆகத்து

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஆகத்து 1 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.