Skip to content

Popular

August 24 திங்கள்

On this day · August 24

வரலாற்றில் ஆகத்து 24

ஆகத்து 24 அன்று நிகழ்ந்த 79 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 41 பிறப்புகள் · 24 இறப்புகள் · 13 சிறப்பு நாட்கள் · 1

ஆகத்து 24 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 41

1ஆம் நூற்றாண்டு

  1. 79

    விசுவியசு எரிமலை வெடித்தது. பொம்பெயி, ஹெர்குலியம் ஆகிய நகரங்கள் எர்மலைக் குழம்பில் மூழ்கின.

5ஆம் நூற்றாண்டு

  1. 455

    வன்டல் இராச்சியத்தின் மன்னர் கென்செரிக் ரோம் நகரை முற்றுகையிட்டான். திருத்தந்தை முதலாம் லியோ நகரை அழிக்க வேண்டாமெனவும், குடிமக்களைக் கொல்ல வேண்டாம் எனவும் அவர் விடுத்த வேண்டுகோளை கென்செரிக் ஏற்றுக் கொண்டதை அடுத்து, நகர வாயில்கள் திறக்கப்பட்டன. ஆனாலும், வன்டல்கள் நகரை சூறையாடினர்.

12ஆம் நூற்றாண்டு

  1. 1200

    இங்கிலாந்தின் ஜான் மன்னர் இசபெல்லாவைத் திருமணம் புரிந்தார்.

13ஆம் நூற்றாண்டு

  1. 1215

    திருத்தந்தை மூன்றாம் இனொசென்ட் மாக்னா கார்ட்டாவை செல்லுபடியற்றது என அறிவித்தார்.

14ஆம் நூற்றாண்டு

  1. 1349

    அரையாப்பு கொள்ளைநோயைக் காரணம் காட்டி ஆறாயிரம் யூதர்கள் செருமனியின் மாயின்சு நகரில் கொல்லப்பட்டனர்.

15ஆம் நூற்றாண்டு

  1. 1456

    கூட்டன்பர்கு விவிலிய நூல் வெளியிடப்பட்டது.

  2. 1482

    பெரிக் நகரமும் அரண்மனையும் இசுக்காட்லாந்திடம் இருந்து ஆங்கிலேய இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டது.

16ஆம் நூற்றாண்டு

  1. 1516

    முதலாம் செலிமின் தலைமையில் உதுமானியர் மம்லூக் சுல்தானகத்தைத் தோற்கடித்து இன்றைய சிரியா]]வைக் கைப்பற்றினர்.

17ஆம் நூற்றாண்டு

  1. 1608

    இந்தியாவுக்கான முதலாவது அதிகாரபூர்வ பிரித்தானியப் பிரதிநிதி வில்லியம் ஆக்கின்சு சூரத்து நகரை வந்தடைந்தார்.

  2. 1682

    வில்லியம் பென் தனக்கு வழங்கப்பட்ட பிரதேசத்தை (இன்றைய டெலவெயர் மாநிலம்) தனது பென்சில்வேனியா குடியேற்றத்துடன் இணைத்தார்.

  3. 1690

    பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தைச் சேர்ந்த ஜொப் சார்னொக் கல்கத்தாவில் தொழிற்சாலை ஒன்றை ஆரம்பித்தார். இதுவே கல்கத்தாவின் நிறுவன நாளாகக் கருதப்படுகிறது.

19ஆம் நூற்றாண்டு

  1. 1814

    பிரித்தானியப் படைகள் வாசிங்டன், டி. சி.யை முற்றுகையிட்டு, வெள்ளை மாளிகை, கெப்பிட்டல் மற்றும் பல கட்டடங்களுக்குத் தீ வைத்தனர்.

  2. 1821

    மெக்சிகோவின் எசுப்பானியாவுடனான மெக்சிக்கோ விடுதலைப் போர் முடிவுக்கு வந்தது.

  3. 1857

    ஐக்கிய அமெரிக்காவில் பெரும் பொருளாதார நெருக்கடி ஆரம்பமானது.

  4. 1891

    தாமசு ஆல்வா எடிசன் அசையும் படக்கருவிக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.

20ஆம் நூற்றாண்டு

  1. 1911

    மனுவேல் சி அரியாகா போர்த்துகலின் முதலாவது அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

  2. 1931

    ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாவது தொழிற்கட்சி அரசு பதவி விலகியதை அடுத்து, தேசிய அரசு ஆட்சிக்கு வந்தது.

  3. 1931

    பிரான்சும் சோவியத் ஒன்றியமும் தமக்கிடையே போர் தவிர்ப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்தின.

  4. 1932

    அமேலியா ஏர்ஃகாட் லாஸ் ஏஞ்சலஸ் முதல் நுவார்க் வரை தனியாளாகப் பறந்து ஐக்கிய அமெரிக்கா மீது பறந்த முதலாவது பெண் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.

  5. 1936

    ஆஸ்திரேலிய அண்டார்க்டிக் மண்டலம் உருவாக்கப்பட்டது.

  6. 1937

    எசுப்பானிய உள்நாட்டுப் போர்: பாசுக்கு இராணுவம் இத்தாலியிடம் சரணடைந்தது.

  7. 1941

    இரண்டாம் உலகப் போர்: உளப் பிறழ்ச்சி, மற்றும் வலது குறைந்தோருக்கான நாட்சி ஜெர்மனியின் டி4 கருணைக்கொலைத் திட்டத்தை இட்லர் இடை நிறுத்துவதற்கு உத்தரவிட்டார். ஆனாலும், இக்கொலைகள் போர் முடியும் வரை தொடர்ந்தன.

  8. 1942

    இரண்டாம் உலகப் போர்: கிழக்கு சொலமன் தீவுகளில் நடந்த சமரில், சப்பானிய வானூர்தி தாங்கிக் கப்பல் ரியூஜோ மூழ்கடிக்கப்பட்டதில் 120 பேர் உயிரிழ்ந்தனர்.

  9. 1944

    இரண்டாம் உலகப் போர்: கூட்டுப் படைகளின் பாரிசுத் தாக்குதல் ஆரம்பமானது.

  10. 1949

    வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு (நேட்டோ) அமுலுக்கு வந்தது.

  11. 1954

    அமெரிக்கக் கம்யூனிஸ்ட் கட்சி ஐக்கிய அமெரிக்காவில் தடை செய்யப்பட்டது.

  12. 1954

    பிரேசில் அரசுத்தலைவர் கெட்டூலியோ வார்காசு தற்கொலை செய்து கொண்டார்.

  13. 1970

    வியட்நாம் போர் எதிர்ப்பாளர்கள் விஸ்கொன்சின் பல்கலைக்கழகத்தின், இசுட்டெர்லிங் மண்டபத்தில் குண்டு ஒன்றை வெடிக்க வைத்தனர்.

  14. 1989

    கொலம்பியாவின் போதைப்பொருள் கடத்தல் தலைவர்கள் கொலம்பிய அரசு மீது "முழுமையான போரை" ஆரம்பித்தனர்.

  15. 1991

    மிக்கைல் கொர்பச்சோவ் சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகினார்.

  16. 1991

    உக்ரைன் சோவியத் ஒன்றியத்தில் இருந்து விலகி தனி நாடானது.

  17. 1992

    சூறாவளி ஆண்ட்ரூ புளோரிடாவில் தரை தட்டியது.

  18. 1992

    மக்கள் சீனக் குடியரசுக்கும் தென் கொரியாவுக்கும் இடையில் தூதரக உறவுகள் ஏற்படுத்தப்பட்டன.

  19. 1994

    பாலத்தீனர்களுக்கு மேற்குக் கரையில் மட்டுப்படுத்தப்பட்ட சுயாட்சி வழங்கும் ஒப்பந்தத்தில் இசுரேலும் பலத்தீன விடுதலை இயக்கமும் கையெழுத்திட்டன.

  20. 1995

    வின்டோஸ் 95 வெளியிடப்பட்டது.

21ஆம் நூற்றாண்டு

  1. 2004

    மாஸ்கோவில் தமதேதவோ வானூர்தி நிலையத்தில் இருந்து புறப்பட்ட இரண்டு விமானங்கள் செச்சினியத் தீவிரவாதிகளால் குண்டுவைத்துத் தகர்க்கப்பட்டதில் 89 பயணிகள் உயிரிழந்தனர்.

  2. 2006

    புளூட்டோ ஒரு கோள் அல்லவெனவும், அது குறுங்கோள் எனவும் உலகளாவிய வானியல் ஒன்றியம் அறிவித்தது.

  3. 2008

    சீனாவில் 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைந்தன.

  4. 2008

    கிர்கிசுத்தானில் பயணிகள் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 71 பேர் உயிரிழந்தனர்.

  5. 2010

    மெக்சிக்கோவில் 72 சட்டவிரோதக் குடியேறிகள் லோசு சேட்டாசு என்ற போதைப்பொருள் கடத்தல் அமைப்பினரால் கொல்லப்பட்டனர்.

  6. 2016

    மத்திய இத்தாலியில் ஏற்பட்ட 6.2 அளவு நிலநடுக்கம் இடம்பெற்றதில் 300 பேர் வரை உயிரிழந்தனர்.

பிறப்புகள்

Births · 24

இறப்புகள்

Deaths · 13

இம்மாத நாட்கள் · ஆகத்து

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஆகத்து 24 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.