Skip to content

Popular

August 29 சனி

On this day · August 29

வரலாற்றில் ஆகத்து 29

ஆகத்து 29 அன்று நிகழ்ந்த 78 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 43 பிறப்புகள் · 18 இறப்புகள் · 13 சிறப்பு நாட்கள் · 4

ஆகத்து 29 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 43

8ஆம் நூற்றாண்டு

  1. 708

    செப்பு நாணயம் முதன் முதலில் சப்பானில் வார்க்கப்பட்டது.

11ஆம் நூற்றாண்டு

  1. 1009

    செருமனியில் மாயின்சு பேராலயம் அதன் திறப்பு விழாவின் போது தீயினால் பெரும் சேதத்துக்குள்ளானது.

13ஆம் நூற்றாண்டு

  1. 1261

    நான்காம் உர்பானுக்குப் பின்னர் நான்காம் அலெக்சாந்தர் 182-வது திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

14ஆம் நூற்றாண்டு

  1. 1350

    வின்செல்சி போரில் ஆங்கிலேயக் கடற்படைக் கப்பல்கள் மூன்றாம் எடவர்டு மன்னர் தலைமையில் 40 காசுட்டீலியக் கப்பல்களைத் தாக்கி வெற்றி பெற்றன.

15ஆம் நூற்றாண்டு

  1. 1484

    எட்டாம் இனசென்ட்டுக்குப் பின்னர் நான்காம் சிக்சுடசு புதிய திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

  2. 1498

    வாஸ்கோ ட காமா கோழிக்கோட்டில் இருந்து போர்த்துக்கல் திரும்ப முடிவு செய்தார்.

16ஆம் நூற்றாண்டு

  1. 1526

    மோகாக்சு சமரில் உதுமானியத் துருக்கியர் முதலாம் சுலைமான் தலைமையில் அங்கேரி, பொகீமியாவின் கடைசி ஜாகிலோனிய மன்னரைக் கொன்றனர்.

  2. 1541

    உதுமானியத் துருக்கியர் அங்கேரியின் தலைநகர் புதாவைக் கைப்பற்றினர்.

17ஆம் நூற்றாண்டு

  1. 1658

    சீர்திருத்தத் திருச்சபை யாழ்ப்பாணத்தில் முதன் முதலாக ஒல்லாந்து மறைப்பரப்புனர் வண. பிலிப்பசு பால்டேயசு என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.

18ஆம் நூற்றாண்டு

  1. 1756

    ஐரோப்பாவில் ஏழாண்டுப் போர் ஆரம்பமானது. புருசிய மன்னர் இரண்டாம் பிரடெரிக்கு செருமனியின் சாக்சனியைத் தாக்கினார்.

  2. 1778

    அமெரிக்கப் புரட்சிப் போர்: றோட் தீவில் பிரித்தானிய, அமெரிக்கப் படைகள் முடிவில்லாத போரில் ஈடுபட்டன.

  3. 1782

    திருகோணமலைக் கோட்டையை பிரான்சியர் பிரித்தானியரிடம் இருந்து மீளக் கைப்பற்றினர்.

  4. 1786

    ஐக்கிய அமெரிக்காவில் மாசச்சூசெட்ஸ் விவசாயிகள் அதிக கடன், வரி பிரச்சினைகளால் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.

19ஆம் நூற்றாண்டு

  1. 1807

    பிரித்தானியப் படையினர் சர் ஆரதர் வெல்லசுலி தலைமையில் கோபனாவன் நகருக்கு வெளியே கோகி என்ற இடத்தில் டென்மார்க்கு படைகளை வென்றனர்.

  2. 1831

    மைக்கேல் பரடே மின்காந்தத் தூண்டலைக் கண்டுபிடித்தார்.

  3. 1842

    நாஞ்சிங் உடன்படிக்கையை அடுத்து முதலாம் அபினிப் போர் முடிவுக்கு வந்தது. [ஆங்காங்]] பிரித்தானிய முடிக்குரிய குடியேற்றநாடுகளில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது.

  4. 1869

    உலகின் முதலாவது மலையேற்ற பற்சட்ட இருப்புப்பாதை வாசிங்டனில் அமைக்கப்பட்டது.

  5. 1882

    தேர்வுத் துடுப்பாட்டத்தில் இலண்டனில் ஆத்திரேலியா இந்திலாந்தை 7 ஓட்டங்களால் தோற்கடித்தது. பின்னர் பிரபலமான ஆஷசுத் தொடர் ஆரம்பமாக இது வழிவகுத்தது.

  6. 1885

    காட்லீப் டைம்லர் உலகின் முதலாவது உள் எரி பொறி விசையுந்துக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.

  7. 1898

    குட்இயர் டயர் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.

20ஆம் நூற்றாண்டு

  1. 1907

    கியூபெக் பாலம் அமைக்கப்படும்போது இடிந்து வீழ்ந்ததில் 75 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

  2. 1910

    ஜப்பான்-கொரியா இணைப்பு ஒப்பந்தம் அமுலுக்கு வந்ததை அடுத்து கொரியாவில் சப்பானியரின் ஆட்சி ஆரம்பமானது.

  3. 1911

    ஐரோப்பிய அமெரிக்கர்களுடன் கடைசியாகத் தொடர்பை ஏற்படுத்திக் கொண்ட இஷி என்ற கடைசி பழங்குடி அமெரிக்கர் வடகிழக்கு கலிபோர்னியாவின் காட்டுப் பகுதிகளில் இருந்து வெளியே வந்தனர்.

  4. 1915

    எஃப்-4 அமெரிக்காவின் விபத்துக்குள்ளான முதலாவது நீர்மூழ்கிக் கப்பல் ஆகும்.

  5. 1916

    பிலிப்பீன்சுகு சுயாட்சி வழங்கும் சட்டமூலம் ஐக்கிய அமெரிக்காவில் நிறைவேற்றபட்டடது.

  6. 1930

    சென் கில்டா தீவுகளின் கடைசி 36 குடிமக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு இசுக்காட்லாந்தின் ஏனைய பகுதிகளுக்குக் குடியேற்றப்பட்டார்கள்.

  7. 1941

    இரண்டாம் உலகப் போர்: எசுத்தோனியாவின் தலைநகர் தாலின் நாட்சி ஜெர்மனியால் கைப்பற்றப்பட்டது.

  8. 1943

    இரண்டாம் உலகப் போர்: செருமனியால் ஆக்கிரமிக்கப்பட்ட டென்மார்க்கின் அரசை செருமனி கலைத்தது.

  9. 1944

    இரண்டாம் உலகப் போர்: 60,000 சிலோவாக்கியப் படைகள் நாட்சி ஜெர்மனிக்கு எதிராகக் கிளர்ச்சியை ஆரம்பித்தனர்.

  10. 1944

    அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி ஜி. ஜி. பொன்னம்பலம் தலைமையில் அமைக்கப்பட்டது.

  11. 1949

    சோவியத் ஒன்றியம் தனது ஜோ 1 என அழைக்கப்பட்ட முதலாவது அணுக்கரு ஆயுதத்தை கசக்ஸ்தானில் சோதித்தது.

  12. 1950

    கொரியப் போர்: பிரித்தானியப் படைகள் கொரியாவில் தரையிறங்கின.

  13. 1965

    ஜெமினி V விண்கலம் புவிக்குத் திரும்பியது.

  14. 1966

    எகிப்திய அரசுத்தலைவர் ஜமால் அப்துல் நாசிரக் கொலை செய்ய சதி செய்த குற்றத்துக்காக எகிப்திய சிந்தனையாளர் சய்யித் கூத்துப் தூக்கிலிடப்பட்டார்.

  15. 1966

    பீட்டில்ஸ் தமது கடைசி நிகழ்ச்சியை சான் பிரான்சிஸ்கோவில் நடத்தினர்.

  16. 1982

    செயற்கைத் தனிமம் மெய்ட்னீரியம் (அணு எண் 109) முதல் தடவையாக செருமனியில் தொகுக்கப்பட்டது.

  17. 1991

    சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் அனைத்து நடவடிக்கைகளையும் சோவியத் உயர்பீடம் தடை செய்தது.

  18. 1995

    முல்லைத்தீவுக் கடற்பரப்பில் இலங்கைக் கடற்படையினரின் ஐரிஸ் மோனா என்ற கப்பலை விடுதலைப் புலிகள் மூழ்கடித்தனர்.

  19. 1996

    நோர்வேயில் பயணிகள் விமானம் ஒன்று மலையுடன் மோதியதில் 141 பேர் உயிரிழந்தனர்.

  20. 1997

    அல்ஜீரியாவில் ரைஸ் என்ற இடத்தில் 98 ஊர் மக்கள் இசுலாமியத் தீவிரவாதிகளினால் படுகொலை செய்யப்பட்டனர்.

21ஆம் நூற்றாண்டு

  1. 2003

    ஈராக்கில் நஜாப் நகரில் பள்ளிவாசல் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு ஒன்றில் சியா இசுலாம் தலைவர் அயொத்தொல்லா சாயது அல்-அக்கீம் உட்பட 100 பேர் கொல்லப்பட்டனர்.

  2. 2005

    அமெரிக்காவின் லூசியானா முதல் புளோரிடா வரையான கரையோரப் பகுதிகளை சூறாவளி கத்ரீனா தாக்கியதில் 1,836 பேர் கொல்லப்பட்டு $125 பில்லியன் சேதம் ஏற்பட்டது.

  3. 2012

    சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இடம்பெற்ற சுரங்க விபத்தில் 26 பேர் உயிரிழந்தனர், 21 பேர் காணாமல் போயினர்.

பிறப்புகள்

Births · 18

இறப்புகள்

Deaths · 13

இம்மாத நாட்கள் · ஆகத்து

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஆகத்து 29 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.