Skip to content

Popular

August 4 செவ்வாய்

On this day · August 4

வரலாற்றில் ஆகத்து 4

ஆகத்து 4 அன்று நிகழ்ந்த 58 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 32 பிறப்புகள் · 14 இறப்புகள் · 11 சிறப்பு நாட்கள் · 1

ஆகத்து 4 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 32

6ஆம் நூற்றாண்டு

  1. 598

    சூயி பேரரசர் வேன்டி தனது இளைய மகன் யாங் லியானை கோகுர்யியோவை (கொரியா) கைப்பற்றக் கட்டளையிட்டார்.

16ஆம் நூற்றாண்டு

  1. 1578

    மொரோக்கோ படைகள் போர்த்துக்கீசரை போரில் வென்றனர். போர்த்துகல் மன்னர் செபஸ்தியான் போரில் கொல்லப்பட்டார்.

18ஆம் நூற்றாண்டு

  1. 1701

    மொண்ட்ரியால் நகரில் புதிய பிரான்சுக்கும் கனடாவின் பழங்குடியினருக்கும் இடையே அமைதிபோப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

  2. 1704

    எசுப்பானிய மரபுரிமைப் போர்: ஆங்கிலேய, டச்சுக் கூட்டுப்படைகளினால் ஜிப்ரால்ட்டர் கைப்பற்றப்பட்டது.

  3. 1783

    சப்பானில் அசாமா எரிமலை வெடித்ததில் 1,400 பேர் உயிரிழந்தனர். பஞ்சம் காரணமாக மேலும் 20,000 இழப்புகள் ஏற்பட்டன.

  4. 1789

    பிரான்சில் நிலமானிய முறையை ஒழிக்க அந்நாட்டு சட்டசபை உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்தனர்.

  5. 1796

    பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: பிரான்சின் முதலாம் நெப்போலியன் தலைமையில் இத்தாலியின் பிரெஞ்சு இராணுவத்தினர் லொனாட்டோ சமரில் வெற்றியடைந்தனர்.

19ஆம் நூற்றாண்டு

  1. 1824

    துருக்கிக்கும் கிரேக்கர்களுக்கும் இடையில் கோசு என்ற இடத்தில் போர் இடம்பெற்றது.

  2. 1889

    வாசிங்டனில் ஸ்போக்கேன் என்ற இடத்தில் இடம்பெற்ற பெரும் தீயில் 32 குடியிருப்பு மனைகள் அழிந்தன.

20ஆம் நூற்றாண்டு

  1. 1914

    செருமனி பெல்ஜியத்தை முற்றுகையிட்டதை அடுத்து, பெல்ஜியமும் பிரித்தானியப் பேரரசும் செருமனிக்கு எதிராகப் போரை அறிவித்தன. அமெரிக்கா நடுநிலை வகித்தது.

  2. 1915

    முதலாம் உலகப் போர்: செருமனியின் 12வது இராணுவம் போலந்தின் தலைநகர் வார்சாவாவைக் கைப்பற்றியது.

  3. 1924

    மெக்சிக்கோவும் சோவியத் ஒன்றியமும் தூதரக உறவை ஏற்படுத்தின.

  4. 1936

    கிரேக்கப் பிரதமர் இயோனிசு மெட்டாக்சசு நாடாளுமன்றத்தைக் கலைத்து தன்னை நாட்டின் தலைவராக அறிவித்தார்.

  5. 1944

    பெரும் இன அழிப்பு: டச்சு உளவாளி ஒருவனால் காட்டிக் கொடுக்கப்பட்ட நிலையில், யூத நாட்காட்டிக் குறிப்பாளர் ஆன் பிராங்க்கும் அவரது குடும்பத்தினரும் கைது செய்யப்பட்டனர்.

  6. 1946

    வடக்கு டொமினிக்கக் குடியரசில் 8.0 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 100 பேர் உயிரிழந்தனர், 20,000 பேர் வீடுகளை இழந்தனர்.

  7. 1948

    இலங்கையில் மலையகத் தமிழரை நாடற்றவர்களாக்கும் குடியுரிமைச் சட்டத்தை பிரதமர் டி. எஸ். சேனநாயக்கா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினார்.

  8. 1964

    குடிசார் உரிமைகள் இயக்கம்: சூன் 21 இல் காணாமல் போன குடிசார் உரிமைகளுக்கான ஊழியர் மூவரின் உடல்கள் மிசிசிப்பியில் கண்டெடுக்கப்பட்டன.

  9. 1965

    நியூசிலாந்தினுள் குக் தீவுகள் சுயாட்சியுடன் கூடிய அதிகாரத்தைப் பெற்றது.

  10. 1969

    வியட்நாம் போர்: பாரிசில் அமெரிக்கப் பிரதிநிதி என்றி கிசிஞ்சருக்கும் வடக்கு வியட்நாம் பிரதிநிதி உவான் தூயிக்கும் இடையில் இரகசிய அமைதிப் பேச்சுகள் ஆரம்பமாயின. பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.

  11. 1972

    உகாண்டாவின் இராணுவத் தலைவர் இடி அமீன் அங்கு வாழும் ஆசிய நாட்டவர்கள அனைவரையும் 90 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற ஆணையிட்டார்.

  12. 1972

    சிம்லா ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது..

  13. 1974

    இத்தாலியில் விரைவுத் தொடருந்து ஒன்றில் குண்டு வெடித்ததில், 12 பேர் உயிரிழந்தனர், 22 பேர் காயமடைந்தனர்.

  14. 1975

    மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் சப்பானிய செம்படையினர் அமெரிக்கத் தூதர் உட்பட 50 பேரைப் பணயக் கைதிகளாகப் பிடித்தனர். பின்னர் இப்பயணக்கைதிகளை விடுவித்து சிறைக்கைதிகளாயிருந்த தமது 5 தோழர்களுடன் லிபியா பயணமாயினர்.

  15. 1977

    அ. அமிர்தலிங்கம் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

  16. 1984

    மேல் வோல்ட்டா நாடு புர்கினா பாசோ எனப் பெயர் மாற்றம் பெற்றது.

  17. 1987

    விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் யாழ்ப்பாணம் சுதுமலையில் முதன் முதலில் மக்கள் முன் தோன்றி உரையாற்றினார்.

  18. 1998

    இலங்கை முழுவதும் அவசரகாலச் சட்டத்தை அரசுத்தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அறிவித்தார்.

21ஆம் நூற்றாண்டு

  1. 2006

    திருகோணமலை நிவாரணப் பணியாளர்கள் படுகொலை: வறுமைக்கு எதிரான அமைப்பு என்ற பிரெஞ்சு அரச சார்பற்ற அமைப்பின் 17 தமிழ்ப் பணியாளர்கள் மூதூரில் இலங்கை இராணுவத்தினரால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர்.

  2. 2006

    நியூசிலாந்தின் ஆளுநராக ஆனந்த் சத்தியானந்த் அறிவிக்கப்பட்டார். இவர் ஆகத்து 23 இல் பதவியேற்றார்.

  3. 2006

    ஈழத்துக் கலைஞர் பொன். கணேசமூர்த்தி யாழ்ப்பாணத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

  4. 2007

    நாசாவின் பீனிக்சு விண்கலம் செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்டது.

  5. 2015

    இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் இரண்டு விரைவு தொடருந்துகள் வெள்ளம் காரணமாக தடம் புரண்டதில் குறைந்தது 31 பேர் உயிரிழந்தனர், நூற்றிற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

பிறப்புகள்

Births · 14

இறப்புகள்

Deaths · 11

இம்மாத நாட்கள் · ஆகத்து

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஆகத்து 4 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.