Skip to content

Popular

August 22 சனி

On this day · August 22

வரலாற்றில் ஆகத்து 22

ஆகத்து 22 அன்று நிகழ்ந்த 69 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 39 பிறப்புகள் · 14 இறப்புகள் · 15 சிறப்பு நாட்கள் · 1

ஆகத்து 22 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 39

4ஆம் நூற்றாண்டு

  1. 392

    யூஜீனியசு மேற்கு உரோமைப் பேரரசராக நியமிக்கப்பட்டார்.

12ஆம் நூற்றாண்டு

  1. 1138

    இசுக்காட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் போர் இடம்பெற்றது.

15ஆம் நூற்றாண்டு

  1. 1485

    பொசுவர்த் பீல்டு என்ற இடத்தில் நடந்த போரில் இங்கிலாந்து மன்னர் மூன்றாம் ரிச்சார்டு கொல்லப்பட்டார்.

17ஆம் நூற்றாண்டு

  1. 1614

    புனித உரோமைப் பேரரசு, பிராங்க்ஃபுர்ட் நகரில் இருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டனர்.

  2. 1639

    பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியினர் நாயக்கர்களிடம் இருந்து வாங்கிய நிலத்தில் மதராஸ் நகரத்தை (தற்போதைய சென்னையை) அமைத்தார்கள்.

  3. 1642

    இங்கிலாந்து மன்னர் முதலாம் சார்லசு ஆங்கிலேய நாடாளுமன்றத்தை "துரோகிகள்" என வர்ணித்தார். இங்கிலாந்து உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.

  4. 1654

    பிரேசிலில் இருந்து 33 யூத அகதிகள் புதிய ஆம்ஸ்டர்டாம் (இன்றைய நியூயோர்க் நகரம்) நகரில் குடியேறினர். ஐக்கிய அமெரிக்காவில் குடியேறிய முதலாவது யூதர்கள் இவர்களாவர்.

18ஆம் நூற்றாண்டு

  1. 1711

    கியூபெக்கைத் தாக்க பிரித்தானியா எடுத்த முயற்சியில் அது தனது 8 கப்பல்களை இழந்தது. ஏரத்தாழ 900 படையினர் உயிரிழந்தனர்.

  2. 1717

    எசுப்பானியப் படைகள் சார்தீனியாவில் தரையிறங்கின.

  3. 1770

    ஜேம்ஸ் குக் (இன்றைய குயின்சுலாந்தில் உள்ள) பொசெசன் தீவை அடைந்து அதனை பிரித்தானியாவுக்காக உரிமை கோரி ஆத்திரேலியாவின் கிழக்குக் கரை அனைத்துக்கும் நியூ சவுத் வேல்ஸ் எனப் பெயரிட்டார்.

  4. 1780

    கப்டன் ஜேம்ஸ் குக்கின் ரெசொலூசன் கப்பல் இங்கிலாந்து திரும்பியது. (குக் அவாயில் கொல்லப்பட்டார்).

  5. 1791

    எயித்தியில் அடிமைகளின் புரட்சி செயிண்ட் டொமிங்கு நகரில் ஆரம்பமானது.

  6. 1798

    ஐரியக் கிளர்ச்சிக்கு ஆதரவாக பிரெஞ்சுப் படைகள் அயர்லாந்தில் கில்கூமின் நகரில் தரையிறங்கினர்.

19ஆம் நூற்றாண்டு

  1. 1827

    பெருவின் அரசுத்தலைவராக ஒசே டெ லா மார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

  2. 1849

    ஆஸ்திரியா ஆளில்லா ஊதுபைகளை வெனிசு நகரத்துக்கு எதிராக அனுப்பியது. வரலாற்றில் முதலாவது வான் தாக்குதல் இதுவாகும்.

  3. 1864

    12 நாடுகள் இணைந்து ஜெனீவாவில் ஆயுத மோதல்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பாதுகாப்பு விதிகளை உருவாக்கின.

  4. 1872

    இலங்கையில் முதலாவது அஞ்சல் அட்டை வெளியிடப்பட்டது.

  5. 1875

    சக்கலின் மற்றும் கூரில் தீவுகள் தொடர்பாக உருசியாவுக்கும் சப்பானுக்கும் இடையில் சென் பீட்டர்ஸ்பேர்க்கில் உடன்பாடு எட்டப்பட்டது.

  6. 1894

    தென்னாப்பிரிக்காவில் இந்திய வணிகர்களுக்கு எதிராக் காட்டப்படும் பாகுபாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மகாத்மா காந்தி நட்டால் மாகாணத்தில் நட்டால் இந்தியக் காங்கிரசு என்ற அமைப்பைத் தொடங்கினார்.

20ஆம் நூற்றாண்டு

  1. 1910

    ஜப்பான்-கொரியா இணைப்பு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இரண்டாம் உலகப் போர் முடியும் வரையில் கொரியா சப்பானின் ஆட்சியின் கீழ் இருந்தது.

  2. 1911

    பாரிசில் களவெடுக்கப்பட்ட மோனா லிசா ஓவியம் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது.

  3. 1932

    தொலைக்காட்சி சேவையை முதன் முதலாக பிபிசி சோதித்தது.

  4. 1941

    இரண்டாம் உலகப் போர்: நாட்சி ஜெர்மனி படைகள் உருசியாவில் லெனின்கிராட் முற்றுகையை ஆரம்பித்தன.

  5. 1942

    இரண்டாம் உலகப் போர்: செருமனி, யப்பான், இத்தாலி]] மீது பிரேசில் போர் தொடுத்தது.

  6. 1944

    இரண்டாம் உலகப் போர்: கிரீட்டில் செருமானியப் படைகள் யூதர்களுக்கு எதிரான இனவழிப்பை ஆரம்பித்தன.

  7. 1949

    கனடாவில் குவீன் சார்லட் தீவுகளில் 8.1 அளவு நிலநடுக்கம் பதிவாகியது.

  8. 1953

    பிரெஞ்சு கயானாவில் அமைக்கப்பட்டிருந்த டெவில்சு தீவு என்ற குற்றவாளிகளின் குடியேற்றத் தீவு நிரந்தரமாக மூடப்பட்டது.

  9. 1962

    பிரெஞ்சு அரசுத்தலைவர் சார்லஸ் டி கோல் மீதான கொலை முயற்சி தோல்வியடைந்தது.

  10. 1968

    திருத்தந்தை ஆறாம் பவுல் கொலம்பியா, பொகோட்டா நகரை வந்தடைந்தார். இலத்தீன் அமெரிக்காவுக்கு திருத்தந்தை ஒருவர் பயணம் செய்தமை இதுவே முடல் தடவையாகும்.

  11. 1972

    ரொடீசியா அதன் இனெவெறிக் கொள்கை காரணமாக ஒலிம்பிக் அமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்டது.

  12. 1978

    சண்டினீஸ்டா தேசிய விடுதலை முன்னணி போராளிகள் நிக்கராகுவாவின் தேசிய அரண்மனையைக் கைப்பற்றினர்.

  13. 1981

    சீன குடியரசில் வானூர்தி ஒன்று வானில் வெடித்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 110 பேரும் உயிரிழந்தனர்.

  14. 1985

    பிரித்தானியாவின் ஏர்டூர்சு விமானம் மான்செஸ்டர் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டபோது அதன் இயந்திரம் தீப்பிடித்ததில், 55 பேர் உயிரிழந்தனர்.

  15. 1989

    நெப்டியூனின் முதலாவது கோள் வளையம் கண்டுபிடிக்கப்பட்டது.

  16. 1991

    சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பிராவ்தா பத்திரிகை மூடப்பட்டது.

21ஆம் நூற்றாண்டு

  1. 2004

    நோர்வே, ஒசுலோவில் உள்ள அருங்காட்சியகத்தில் இருந்து எட்வர்ட் மண்ச்சின் அலறல், மடோன்னா ஆகிய ஓவியங்கள் துப்பாக்கி முனையில் திருடப்பட்டன.

  2. 2006

    கிழக்கு உக்ரைனில் உருசிய எல்லையில் புல்கோவோ விமானம் வீழ்ந்து நொருங்கியதில் அதில் பயணம் செய்த அனைத்து 170 பேரும் உயிரிழந்தனர்.

  3. 2006

    கிரிகோரி பெரல்மான் புவங்காரே அனுமானத்திற்கான நிறுவல்களைக் கண்டுபிடித்தமைக்காக அவருக்கு பீல்ட்ஸ் பதக்கம் அறிவிக்கப்பட்டது. எனினும் அவர் அப்பதக்கத்தைப் பெற மறுத்து விட்டார்.

  4. 2012

    கென்யாவில் கால்நடைகளுக்கான மேய்ச்சல் உரிமைகள் தொடர்பாக இனக்கலவரங்கள் இடம்பெற்றதில் 52 பேர் உயிரிழந்தனர்.

பிறப்புகள்

Births · 14

இறப்புகள்

Deaths · 15

இம்மாத நாட்கள் · ஆகத்து

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஆகத்து 22 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.