Skip to content

Popular

August 7 வெள்ளி

On this day · August 7

வரலாற்றில் ஆகத்து 7

ஆகத்து 7 அன்று நிகழ்ந்த 54 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 32 பிறப்புகள் · 15 இறப்புகள் · 6 சிறப்பு நாட்கள் · 1

ஆகத்து 7 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 32

கிமு (பொ.ஊ.மு)

  1. கிமு 322

    மகா அலெக்சாண்டர் இறந்ததைத் தொடர்ந்து ஏதென்சுக்கும் மக்கெடோனியர்களுக்கும் இடையில் "கிரான்னன்" என்ற இடத்தில் போர் இடம்பெற்றது.

5ஆம் நூற்றாண்டு

  1. 461

    உரோமைப் பேரரசர் மசோரியன் கைது செய்யப்பட்டு வட-மேற்கு இத்தாலியில் தலை துண்டிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்.

7ஆம் நூற்றாண்டு

  1. 626

    அவார், சிலாவிக் இராணுவத்தினர் கான்ஸ்டண்டினோபில் முற்றுகையைக் கைவிட்டுத் திரும்பினர்.

8ஆம் நூற்றாண்டு

  1. 768

    இரண்டாம் இசுட்டீவன் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

10ஆம் நூற்றாண்டு

  1. 936

    முதலாம் ஒட்டோ செருமானிய இராச்சியத்தின் மன்னராக முடி சூடினார்.

18ஆம் நூற்றாண்டு

  1. 1714

    உருசியக் கடற்படையின் முதலாவது முக்கிய வெற்றி கங்கூட் சமரில் எட்டப்பட்டது.

  2. 1786

    ஐக்கிய அமெரிக்காவில் முதலாவது நடுவண் தொல்குடி இந்திய சிறப்புப் பகுதி அமைக்கப்பட்டது.

19ஆம் நூற்றாண்டு

  1. 1819

    கொலம்பியாவின் பொயாக்கா என்ற இடத்தில் எசுப்பானியர்களுக்கு எதிரான போரில் சிமோன் பொலிவார் பெரு வெற்றி பெற்றார்.

  2. 1890

    சுவீடனில் அன்னா மான்சுடொட்டர் என்பவர் கடைசிப் பெண்ணாக கொலைக் குற்றம் சாட்டப்பட்டுத் தூக்கிலிடப்பட்டார்.

  3. 1898

    யாழ்ப்பாணம் மானிப்பாயில் டாக்டர் ஸ்கொட் தலைமையில் மானிப்பாய் மருத்துவமனை புதிய கட்டிடத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

20ஆம் நூற்றாண்டு

  1. 1906

    கல்கத்தாவில் வங்காளப் பிரிவினை எதிர்ப்புப் போராட்டத்தின் போது முதல் இந்திய தேசியக் கொடி உருவாக்கப்பட்டு பார்சி பகான் சதுக்கத்தில் ஏற்றப்பட்டது.

  2. 1927

    ஒன்டாரியோவுக்கும் நியூயோர்க்கிற்கும் இடையில் அமைதிப் பாலம் அமைக்கப்பட்டது.

  3. 1933

    ஈராக்கில் சிமேல் கிராமத்தில் 3,000 அசிரியர்கள் ஈராக்கிய அரசால் படுகொலை செய்யப்பட்டனர்.

  4. 1942

    இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கக் கடற்படையினர் சொலமன் தீவுகளின் குவாடல்கனால் தீவில் தரையிறங்கினர்.

  5. 1944

    ஆர்வர்டு மார்க் I என்ற முதலாவது நிரல் மூலம் கட்டுப்படுத்தப்பட்ட கணிப்பானை ஐபிஎம் நிறுவனம் வெளியிட்டது.

  6. 1945

    இரண்டாம் உலகப் போர்: இரோசிமா மீது அணுகுண்டு வீசப்பட்டதை அமெரிக்க அரசுத்தலைவர் ஹரி ட்ரூமன் அறிவித்தார்.

  7. 1955

    சோனி தனது முதலாவது டிரான்சிஸ்டர் வானொலிகளை சப்பானில் விற்பனைக்கு விட்டது.

  8. 1960

    ஐவரி கோஸ்ட் பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.

  9. 1962

    தாலிடோமைடு என்ற மருந்தைப் பரிந்துரைக்க மறுத்த கனடிய-அமெரிக்க மருந்தியலாளர் பிரான்செசு கெல்சிக்கு அமெரிக்க அரசுத்தலைவரின் சிறப்பு விருது வழங்கப்பட்டது.

  10. 1964

    வியட்நாம் போர்: அமெரிக்கப் படைகள் மீது வட வியட்நாமியப் படைகளின் தாக்குதல்களைக் கையாளுவதற்கு அமெரிக்க அரசுத்தலைவர் லின்டன் ஜான்சனுக்கு முழுமையான அதிகாரம் வழங்கும் தீர்மானத்தை அமெரிக்க சட்டமன்றம் அங்கீகரித்தது.

  11. 1970

    இசுரேலுக்கும் எகிப்துக்கும் இடையே 1967 இல் ஆரம்பமான தேய்வழிவுப் போர் முடிவுற்றது.

  12. 1976

    வைக்கிங் 2 விண்கலம் செவ்வாயின் சுற்று வட்டத்துள் சென்றது.

  13. 1987

    லினி காக்சு பெரிங் நீரிணையைக் கடந்து, அமெரிக்காவில் இருந்து சோவியத் ஒன்றியம் வரை நீந்திய முதல் மனிதர் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.

  14. 1989

    எத்தியோப்பியாவில் இடம்பெற்ற விமான விபத்தில் அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர் மிக்கி லேலண்டு உட்பட 16 பேர் உயிரிழந்தனர்.

  15. 1990

    வளைகுடாப் போரின் ஒரு பகுதியாக முதலாவது தொகுதி அமெரிக்கப் படையினர் சவூதி அரேபியா வந்து சேர்ந்தனர்.

  16. 1995

    கொழும்பில் மத்திய மாகாண முதலமைச்சரின் அலுவலகத்திற்கு வெளியே குண்டு வெடித்ததில் 24 பேர் கொல்லப்பட்டனர், 55 பேர் காயமடைந்தனர்.

  17. 1998

    தான்சானியாவிலும் கென்யாவிலும் அமெரிக்கத் தூதரகங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 212 பேர் கொல்லப்பட்டு 4,500க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.

  18. 1999

    செச்சினிய-ஆதரவு இசுலாமிய தீவிரவாதிகள் தாகெஸ்தானுள் ஊடுருவினர்.

21ஆம் நூற்றாண்டு

  1. 2006

    இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினர் சிவப்பிரகாசம் மரியதாஸ் என்பவர் திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்டார்.

  2. 2008

    தெற்கு ஒசேத்தியா தொடர்பான உருசிய-ஜோர்ஜியப் போர் ஆரம்பமானது.

  3. 2017

    இந்தியாவில் உத்தரப்பிரதேசத்தில் பாபா ராகவ் தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அடுத்த 5 நாட்களில் சுமார் 60 குழந்தைகள் ஆக்சிசன் தரப்படாமல் இறந்தனர்.

  4. 2020

    இந்தியாவின் கேரளம், மலப்புறம் மாவட்டத்தில் கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையத்தில், ஏர் இந்தியா விரைவு வானூர்தி ஓடுபாதையைத் தாண்டிச் சென்று விபத்துக்குள்ளானதில், விமானத்தில் இருந்த 190 பேரில் 21 பேர் உயிரிழந்தனர்.

பிறப்புகள்

Births · 15

இறப்புகள்

Deaths · 6

இம்மாத நாட்கள் · ஆகத்து

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஆகத்து 7 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.