Skip to content

Popular

August 14 வெள்ளி

On this day · August 14

வரலாற்றில் ஆகத்து 14

ஆகத்து 14 அன்று நிகழ்ந்த 56 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 31 பிறப்புகள் · 15 இறப்புகள் · 9 சிறப்பு நாட்கள் · 1

ஆகத்து 14 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 31

11ஆம் நூற்றாண்டு

  1. 1040

    இசுக்காட்லாந்து மன்னன் முதலாம் டங்கன் அவரது எதிராளி மக்பெத்துடனான போரில் கொல்லப்பட்டான். மக்பெத் மன்னராக முடி சூடினான்.

14ஆம் நூற்றாண்டு

  1. 1385

    அல்சுபரோட்டா சமரில் போர்த்துக்கீசப் படையினர் முதலாம் ஜான் மன்னர் தலைமையில் காஸ்டில் படைகளைத் தோற்கடித்தனர்.

15ஆம் நூற்றாண்டு

  1. 1480

    இத்தாலியின் தெற்கே ஒத்ராந்தோ நகரில் இசுலாமுக்கு மதம் மாற மறுத்த 800 கிறித்தவர்கள் உதுமானியர்களால் கழுத்து துண்டிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர். இவர்கள் பின்னர் திருச்சபையினால் புனிதர்களாக அறிவிக்கப்பட்டனர்.

16ஆம் நூற்றாண்டு

  1. 1592

    போக்லாந்து தீவுகளை முதன் முதலாக ஜான் ட்ஃபேவிசு என்ற ஆங்கிலேயர் கண்டார்.

18ஆம் நூற்றாண்டு

  1. 1791

    செயிண்ட் டொமிங்கில் தோட்டப்பகுதி அடிமைகள் வூடூ சடங்கை நடத்தினர். இது எயித்தியப் புரட்சிக்கு வழிவகுத்தது.

19ஆம் நூற்றாண்டு

  1. 1814

    சுவீடன்–நோர்வே போரை முடிவுக்குக் கொண்டு வந்த அமைதி ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையில் எட்டப்பட்டது.

  2. 1816

    டிரிசுதான் டா குன்ஃகா தீவுக்கூட்டம் ஐக்கிய இராச்சியத்துடன் இணைக்கப்பட்டது. தெற்கு ஆப்பிரிக்காவில் கேப் காலனியில் இருந்து இருந்து இது நிருவகிக்கப்பட்டது.

  3. 1842

    அமெரிக்காவில் செமினோலே பழங்குடியினர் புளோரிடாவில் இருந்து ஓக்லகோமாவுக்கு விரட்டப்பட்டனர். இரண்டாவது செமினோலே போர் முடிவுக்கு வந்தது.

  4. 1880

    1248-இல் கட்ட ஆரம்பிக்கப்பட்ட கோல்ன் கதீட்ரல் செருமனியின் கோல்ன் நகரில் கட்டி முடிக்கப்பட்டது.

  5. 1888

    ஆங்கிலேய இசையமைப்பாளர் ஆர்த்தர் சலிவனின் த லொஸ்ட் கோர்ட் என்ற ஒலிப்பதிவு இலண்டனில் தாமசு அல்வா எடிசனின் கிராமபோன் அறிமுக நிகழ்வில் இசைக்கப்பட்டது.

  6. 1893

    வாகனப் பதிவை பிரான்சு உலகில் முதல் நாடாக அமுல்படுத்தியது.

  7. 1900

    சப்பான், உருசியா, பிரித்தானியா, பிரான்சு, அமெரிக்கா, செருமனி, இத்தாலி, ஆத்திரியா-அங்கேரி ஆகிய எட்டு நாடுகள் இணைந்து சீனாவின் பெய்ஜிங் நகரை ஆக்கிரமித்தன.

20ஆம் நூற்றாண்டு

  1. 1912

    நிக்கராகுவாவில் அமெரிக்க சார்பு அரசை அமைக்க அமெரிக்கக் கடற்படையினர் அந்நாட்டை முற்றுகையிட்டது.

  2. 1916

    முதலாம் உலகப் போர்: உருமேனியா ஆத்திரியா-அங்கேரி மீது போரை ஆரம்பித்தது.

  3. 1921

    தன்னு உரியாங்காலி என்ற புதிய நாடு (பின்னர் துவான் மக்கள் குடியரசு) உருவாக்கப்பட்டது. இது சோவியத் ஒன்றியத்தினால் அங்கீகரிக்கப்பட்டது.

  4. 1936

    ஐக்கிய அமெரிக்காவில் கடைசித் தடவையாக பொதுமக்கள் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

  5. 1937

    இரண்டாம் சீன-சப்பானியப் போர் : ஆறு சப்பானிய விமானங்கள் சீனாவினால் சுட்டு வீழ்த்தப்பட்டன.

  6. 1945

    வியட் மின் படைகள் ஆகத்து புரட்சியை ஆரம்பித்தன.

  7. 1945

    இரண்டாம் உலகப் போர்: கூட்டுப் படைகளின் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு சப்பான் சரணடைய ஒப்புக் கொண்டது. பசிபிக் போர் முடிவுக்கு வந்தது.

  8. 1947

    பாக்கித்தான் பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்று, பொதுநலவாயத்தில் இணைந்தது.

  9. 1958

    தமிழ் மொழி (சிறப்பு அதிகாரங்கள்) சட்டமூலம் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

  10. 1969

    வட அயர்லாந்துக்கு பிரித்தானிய இராணுவத்தினர் அனுப்பப்பட்டனர். 37 ஆண்டுகள் இராணுவம் அங்கு நிலைகொண்டிருந்தது.

  11. 1971

    பகுரைன் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

  12. 1972

    கிழக்கு ஜெர்மனியைச் சேர்ந்த விமானம் கிழக்கு பெர்லின் விமான நிலையத்திலிருந்து கிளம்பும்போது விபத்துக்குள்ளாகியதில் 156 பேர் உயிரிழந்தனர்.

  13. 1980

    போலந்தில் தொழிற்சங்கத் தலைவர் லேக் வலேசா தலைமையில் வேலை நிறுத்தம் தொடங்கப்பட்டது.

21ஆம் நூற்றாண்டு

  1. 2005

    சைப்பிரசில் இருந்து பிராகா நோக்கிச் சென்ற விமானம் கிரேக்கத்தில் மலைகளில் மோதியதில் 121 பேர் உயிரிழந்தனர்.

  2. 2006

    செஞ்சோலைக் குண்டுவீச்சுத் தாக்குதல், 2006: முல்லைத்தீவு செஞ்சோலை சிறார் இல்லம் மீது இலங்கை வான்படை நடத்திய விமானத் தாக்குதலில் 61 சிறுமிகள் கொல்லப்பட்டு 60 பேர் படுகாயமடைந்தனர்.

  3. 2007

    ஈராக்கில் கட்டானியா என்ற இடத்தில் இடம்பெற்ற நான்கு தொடர் குண்டுவெடிப்புகளில் 334 பேர் கொல்லப்பட்டனர்.

  4. 2013

    எகிப்தில் முன்னாள் அரசுத்தலைவர் முகம்மது முர்சியின் ஆதரவாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்களை அடக்க அரசு அவசரகால நிலையைப் பிறப்பித்தது. நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

  5. 2015

    கியூபாவில் அவானா நகரில் 54 ஆண்டுகளின் பின்னர் ஐக்கிய அமெரிக்கா தனது தூதரகத்தைத் திறந்தது.

  6. 2018

    இத்தாலி, செனோவா நகரில் பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 35 பேர் உயிரிழந்தனர்.

பிறப்புகள்

Births · 15

இறப்புகள்

Deaths · 9

இம்மாத நாட்கள் · ஆகத்து

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஆகத்து 14 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.