Skip to content

Popular

August 21 வெள்ளி

On this day · August 21

வரலாற்றில் ஆகத்து 21

ஆகத்து 21 அன்று நிகழ்ந்த 65 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 33 பிறப்புகள் · 23 இறப்புகள் · 8 சிறப்பு நாட்கள் · 1

ஆகத்து 21 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 33

12ஆம் நூற்றாண்டு

  1. 1140

    சொங் சீனத் தளபதி யூ பெய் படையினர் சின் சீனப் படையினரை சொங்–சி போரில் வென்றனர்.

14ஆம் நூற்றாண்டு

  1. 1331

    மூன்றாம் இசுடெபான் உரோசு மன்னர் அவரது மகன் துசானிடம் சரணடைந்தார். துசான் செர்பியாவின் மன்னராக முடி சூடினான்.

17ஆம் நூற்றாண்டு

  1. 1680

    புவெப்லோ இந்தியப் பழங்குடிகள் எசுப்பானியாவிடம் இருந்து சாந்தா பே நகரைக் கைப்பற்றினர்.

18ஆம் நூற்றாண்டு

  1. 1770

    ஜேம்ஸ் குக் கிழக்கு அவுஸ்திரேலியாவை பெரிய பிரித்தானியாவுக்குச் சொந்தமாக்கி அதற்கு நியூ சவுத் வேல்ஸ் எனப் பெயரிட்டார்.

  2. 1772

    சுவீடனின் மூன்றாம் குஸ்தாவ் மன்னர் தான் மேற்கொண்ட இராணுவப் புரட்சியை முடித்துக் கொண்டு, புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தி, அரை நூற்றாண்டுக் கால நாடாளுமன்ற ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தார்.

  3. 1778

    அமெரிக்கப் புரட்சிப் போர்: பிரித்தானியப் படையினர் பிரெஞ்சுக் குடியேற்றமான பாண்டிச்சேரியை முற்றுகையிட்டனர்.

  4. 1791

    எயித்தியில் இடம்பெற்ற வூடூ பண்டிகை அடிமைகளின் கிளர்ச்சியாக மாறியதை அடுத்து எயித்தியப் புரட்சி ஆரம்பமானது.

19ஆம் நூற்றாண்டு

  1. 1808

    ஆர்தர் வெல்லசுலி தலைமையிலான பிரித்தானிய, போர்த்துக்கீசப் படையினர் பிரெஞ்சுப் படையினரை போர்த்துகலில் விமெய்ரோ கிராமத்தில் நடந்த சமரில் வென்றனர்.

  2. 1821

    ஜார்விஸ் தீவு கண்டுபிடிக்கப்பட்டது.

  3. 1831

    வர்ஜீனியாவில் அமெரிக்கக் கறுப்பின அடிமைகளுக்குத் தலைமை தாங்கி நாட் டர்னர் கிளர்ச்சியைத் தொடங்கினார். இதன் போது 55 முதல் 65 வெள்ளையர்கள் கொல்லப்பட்டனர்.

  4. 1863

    அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புத் தீவிரவாதிகளின் தாக்குதலில் கேன்சசு மாநிலத்தில் லோரன்ஸ் நகரம் அழிக்கப்பட்டது.

  5. 1888

    முதலாவது வெற்றிகரமான கூட்டல் கருவி அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது.

20ஆம் நூற்றாண்டு

  1. 1911

    லியனார்டோ டா வின்சியின் மோனா லிசா ஓவியம் பாரிசின் இலூவா அருங்காட்சியகத்தில் இருந்து திருடப்பட்டது.

  2. 1920

    ஏ. சபாபதி ஓய்வு பெற்றதை அடுத்து சேர் அ. கனகசபை இலங்கை சட்டவாக்கப் பேரவைக்குத் தமிழ்ப் பிரதிநிதியாகத் தெரிவானார்.

  3. 1942

    இரண்டாம் உலகப் போர்: உருசியாவின் எல்பிரஸ் மலை உச்சியில் நாட்சி ஜெர்மனியின் கொடி நாட்டப்பட்டது.

  4. 1944

    இரண்டாம் உலகப் போர்: கனடிய, போலந்துப் படைகள் பிரான்சின் முக்கிய நகரான பலேசைக் கைப்பற்றின.

  5. 1957

    சோவியத் ஒன்றியம் ஆர்-7 என்ற முதலாவது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதித்தது.

  6. 1959

    அமெரிக்க அரசுத்தலைவர் டுவைட் டி. ஐசனாவர் அவாயை அமெரிக்காவின் 50வது மாநிலமாக இணைக்கும் ஆணைக்கு கையெழுத்திட்டார்.

  7. 1963

    தெற்கு வியட்நாமின் குடியரசு இராணுவத்தினர் நாட்டின் பௌத்தத் தலங்களை அழித்து நூற்றுக்கணக்கானோரைக் கொன்றனர்.

  8. 1971

    பிலிப்பீன்சு, மணிலாவில் லிபரல் கட்சி தேர்தல் பிரச்சாரத்தில் குண்டு ஒன்று வெடித்ததில் மார்க்கோசுக்கு எதிரான பல வேட்பாளர்கள் காயமடைந்தனர்.

  9. 1982

    லெபனான் உள்நாட்டுப் போர்: லெபனானில் இருந்து பலத்தீன விடுதலை இயக்கத்தினர் வெளியேறுவதைக் கண்காணிக்க பன்னாட்டுப் படையினர் பெய்ரூத் வந்து சேர்ந்தனர்.

  10. 1983

    பிலிப்பீன்சு எதிர்க்கட்சித் தலைவர் பெனீனோ அக்கீனோ மணிலாவில் கொலை செய்யப்பட்டார்.

  11. 1986

    கமரூனில் நியோஸ் ஏரி எரிமலையில் காபனீரொட்சைட்டு வளிமம் கசிந்ததில் 20 கி.மீ. சுற்றளவில் 1,800 பேர் வரையில் உயிரிழந்தனர்.

  12. 1988

    நேபாள-இந்திய எல்லைப்புறத்தில் 6.9 அளவு நிலநடுக்கம் இடம்பெற்றதில் 1,450 பேர் வரை இறந்தனர்.

  13. 1991

    லாத்வியா சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

  14. 1991

    சோவியத் தலைவர் மிக்கைல் கொர்பச்சோவ் மீதான ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தோல்வியடைந்தது.

  15. 1993

    நாசா மார்சு ஒப்சர்வர் விண்கலத்துடனான தொடர்பை இழந்தது.

  16. 1994

    மொரோக்கோவில் வானூர்தி ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 44 பேரும் உயிரிழந்தனர்.

  17. 1995

    அமெரிக்காவில் சியார்ச்சியா மாநிலத்தில் பிரேசில் வானூர்தி ஒன்று தரையிறங்குகையில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 29 பேரில் 9 பேர் உயிரிழந்தனர்.

21ஆம் நூற்றாண்டு

  1. 2007

    சூறாவளி டீன் மெக்சிகோவை 165 மைல்/மணி வேகத்தில் தாக்குதலை ஆரம்பித்தது.

  2. 2013

    சிரியாவில் கோட்டா என்ற இடத்தில் வேதித் தாக்குதல் நடத்தப்பட்டதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

  3. 2014

    பாதுகாப்பு விளிம்பு நடவடிக்கை: இசுரேலிய வான் தாக்குதல்களில் ஹமாஸ் இயக்கத்தின் மூன்று மூத்த தளபதிகள் கொல்லப்பட்டனர்.

  4. 2014

    குவாத்தமாலாவில் பெல் 206 உலங்குவானூர்தி ஒன்று விபத்துக்குள்ளாகியதில் ஐந்து இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

Births · 23

இறப்புகள்

Deaths · 8

இம்மாத நாட்கள் · ஆகத்து

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஆகத்து 21 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.