Skip to content

Popular

August 12 புதன்

On this day · August 12

வரலாற்றில் ஆகத்து 12

ஆகத்து 12 அன்று நிகழ்ந்த 78 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 32 பிறப்புகள் · 25 இறப்புகள் · 18 சிறப்பு நாட்கள் · 3

ஆகத்து 12 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 32

கிமு (பொ.ஊ.மு)

  1. கிமு 30

    மார்க் அந்தோனி போரில் தோல்வியடைந்ததை அடுத்து எகிப்தின் கிளியோபாத்ரா தற்கொலை செய்து கொண்டாள்.

11ஆம் நூற்றாண்டு

  1. 1099

    முதலாம் சிலுவைப் போர்: சிலுவைப் போர்வீரர்கள் பாத்திமக் கலிபகத்தைத் தோற்கடித்தனர்.

12ஆம் நூற்றாண்டு

  1. 1121

    ஜோர்ஜிய இராணுவத்தினர் நான்காம் டேவிட் மன்னர் தலைமையில் செல்யூக்குகளை வென்றனர்.

14ஆம் நூற்றாண்டு

  1. 1323

    சுவீடனுக்கும் நோவ்கோரத் குடியரசுக்கும் இடையில் எல்லை தொடர்பான உடன்பாடு எட்டப்பட்டது./

15ஆம் நூற்றாண்டு

  1. 1492

    கிறித்தோபர் கொலம்பசு புதிய உலகத்திற்கான தனது முதல் பயணத்தின் போது கேனரி தீவுகள் வந்தடைந்தார்.

  2. 1499

    வெனிசியர்களுக்கும் உதுமானியர்யர்களுக்கும் இடையில் முதற் போர் இடம்பெற்றது.

18ஆம் நூற்றாண்டு

  1. 1765

    இந்தியத் துணைக்கண்டத்தில் கம்பனி ஆட்சியைக் காலூன்ற வழி வகுக்கப்பட்ட அலகாபாத் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

19ஆம் நூற்றாண்டு

  1. 1812

    இலங்கையில் பாப்திச சபை நிறுவப்பட்டது.

  2. 1812

    கொழும்பு நூலகம் அமைக்கப்பட்டது.

  3. 1851

    ஐசாக் சிங்கர் தனது தையல் இயந்திரத்துக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.

  4. 1865

    பிரித்தானிய மருத்துவர் ஜோசப் லிஸ்டர் தனது முதலாவது நோய்நுண்மத் தடுப்பு முறை அறுவை சிகிச்சையை மேற்கொண்டார்.

20ஆம் நூற்றாண்டு

  1. 1914

    முதலாம் உலகப் போர்: ஐக்கிய இராச்சியம் ஆத்திரியா-அங்கேரி மீது போர் தொடுத்தது.

  2. 1944

    நாட்சி செருமனிப் படைகள் போலந்தில் வோலா என்ற இடத்தில் நடத்திய படுகொலைகள் முடிவுக்கு வந்தன. 40,000 பேர் கொல்லப்பட்டனர்.

  3. 1950

    கொரியப் போர்: அமெரிக்க போர்க்கைதிகள் 75 பேர் வடகொரிய இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர்.

  4. 1952

    மாஸ்கோவில் 13 யூத இன அறிவியலாளர்கள், கவிஞர்கள் கொல்லப்பட்டனர்.

  5. 1953

    கிரேக்கத்தில் இயோனியத் தீவுகளில் 7.2 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 445 முதல் 800 பேர் வரை உயிரிழந்தனர்.

  6. 1953

    சோவியத் ஒன்றியம் ஜோ 4 என்ற தனது முதலாவது ஐதரசன் குண்டு சோதனையை நடத்தியது.

  7. 1960

    எக்கோ I என்ற நாசாவின் முதலாவது தகவல் தொடர்பு செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

  8. 1964

    இனவெறிக் கொள்கை காரணமாக தென்னாபிரிக்கா ஒலிம்பிக்கில் விளையாடத் தடை செய்யப்பட்டது.

  9. 1976

    லெபனான் உள்நாட்டுப் போர்: தெல் அல்-சாத்தார் என்ற இடத்தில் 1,000 முதல் 3,500 வரையான பாலத்தீனர்கள் கொல்லப்பட்டனர்.

  10. 1977

    இலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்து ஒரு மாதத்திற்குள் தமிழர்கள் மீது இனப்படுகொலைகள் நடத்தப்பட்டதில் 300 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

  11. 1981

    ஐபிஎம் தனி மேசைக் கணினி வெளியிடப்பட்டது.

  12. 1985

    சப்பானில் விமானம் ஒன்று ஒசுத்தாக்கா மலையில் மோதியதில் 520 பேர் உயிரிழந்தனர்.

  13. 1985

    ஈழத் தமிழ்ப் போராளிக் குழுக்களுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் 2ம் கட்ட திம்புப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாயின.

  14. 1990

    அமெரிக்காவின் தெற்கு டகோட்டாவில் மிகப்பெரியதும், முழுமையானதுமான டைரனொசோரசு என்னும் டைனசோரின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது.

  15. 1990

    வீரமுனைப் படுகொலைகள், 1990: அம்பாறை, வீரமுனையில் நானூறுக்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

  16. 2000

    கூர்ஸ்க் என்ற உருசியக் கடற்படை நீர்மூழ்கிக் கப்பல் பயிற்சியின் போது 118 பேருடன் பாரெண்ட்சு கடலில் மூழ்கியது.

21ஆம் நூற்றாண்டு

  1. 2005

    இலங்கைவின் வெளிவிவகார அமைச்சர் லக்சுமன் கதிர்காமர் கொழும்பில் அவரது வீட்டில், நீச்சல் தடாகத்தில் நீராடும் போது சுடப்பட்டு அடுத்த நாள் இறந்தார்.

  2. 2005

    மாலை தீவுகளில் அரசுக்கெதிராக கிளர்ச்சி இடம்பெற்றது.

  3. 2005

    இலங்கையின் தமிழ் வானொலி, தொலைக்காட்சி அறிவிப்பாளர் ரேலங்கி செல்வராஜா கொலை செய்யப்பட்டார்.

  4. 2006

    இலங்கைத் தமிழ் அரசியல் செயற்பாட்டாளர் கேதீஸ் லோகநாதன் கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

  5. 2015

    சீனாவில் தியான்ஜின் மாகாணத்தில் நிகழ்ந்த இரண்டு பெரும் குண்டுவெடிப்புகளில் 173 பேர் உயிரிழந்தனர், 800 பேர் காயமடைந்தனர்.

பிறப்புகள்

Births · 25

இறப்புகள்

Deaths · 18

இம்மாத நாட்கள் · ஆகத்து

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஆகத்து 12 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.