Skip to content

Popular

July 15 புதன்

On this day · July 15

வரலாற்றில் சூலை 15

சூலை 15 அன்று நிகழ்ந்த 73 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 30 பிறப்புகள் · 25 இறப்புகள் · 16 சிறப்பு நாட்கள் · 2

சூலை 15 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 30

1ஆம் நூற்றாண்டு

  1. 70

    உரோமைப் பேரரசர் டைட்டசும் அவரது இராணுவமும் எருசலேமின் சுவர்களை உடைத்து ஊடுருவினர்.

11ஆம் நூற்றாண்டு

  1. 1099

    முதலாம் சிலுவைப் போர்: கிறித்தவப் போர் வீரர்கள் கடினமான முற்றுகையின் பின்னர், எருசலேம் திருக்கல்லறைத் தேவாலயத்தைக் கைப்பற்றினர்.

12ஆம் நூற்றாண்டு

  1. 1149

    திருக்கல்லறைத் தேவாலயம் எருசலேமில் புனிதத் தலமாக்கப்பட்டது.

13ஆம் நூற்றாண்டு

  1. 1240

    அலெக்சாந்தர் நெவ்ஸ்கி தலைமையிலான நோவ்கோரத் படைகள் சுவீடன் படைகளை "நேவா" என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தனர்.

14ஆம் நூற்றாண்டு

  1. 1381

    இங்கிலாந்தில் உழவர்களின் கிளர்ச்சிக்குத் தலைமை வகித்த ஜோன் போல் என்ற மதகுரு இரண்டாம் ரிச்சார்ட் மன்னரின் முன்னிலையில் தூக்கிலிடப்பட்டு, நான்கு துண்டுகளாக வெட்டப்பட்டு மரண தண்டனைக்குள்ளாக்கப்பட்டார்.

18ஆம் நூற்றாண்டு

  1. 1741

    உருசியக் கப்பல் கலபதி அலெக்சி சிரிக்கோவ் தென்மேற்கு அலாஸ்காவைக் கண்ணுற்று தனது ஆட்கள் சிலரை படகில் அங்கு அனுப்பினார். இவர்களே அலாஸ்காவில் தரையிறங்கிய முதலாவது ஐரோப்பியர் ஆவர்.

  2. 1799

    நெப்போலியனின் எகிப்தியப் படையெடுப்பின் போது, எகிப்தின் ரொசெட்டா என்ற இடத்தில் பிரெஞ்சுக் கப்பல் கலபதி ரொசெட்டாக் கல் ஒன்றைக் கண்டெடுத்தார்.

19ஆம் நூற்றாண்டு

  1. 1815

    நெப்போலியப் போர்கள்: பிரான்சின் முதலாம் நெப்போலியன் பெலரபோன் என்ற கப்பலில் வைத்து சரணடைந்தான்.

  2. 1816

    பிரெஞ்சு இயற்பியலாளர் அகத்தீன் பிரெனெல் ஒளியின் விளிம்பு விளைவுக்கான பின்னிணைப்பாகத் தனது புகழ் பெற்ற பிரெனெல் வலயங்கள் பற்றி அறிமுகப்படுத்தினார்.

  3. 1823

    உரோமை நகரில் பண்டைய சுவர்களுக்கு வெளியே அமைந்த புனித பவுல் பேராலயம் தீயில் சேதமடைந்தது.

  4. 1834

    எசுப்பானிய திரிபுக் கொள்கை விசாரணை மன்று 356 ஆண்டுகளின் பின்னர் கலைக்கப்பட்டது.

  5. 1857

    சிப்பாய்க் கலகம்: கான்பூரில் இரண்டாவது படுகொலைகள் இடம்பெற்றன.

  6. 1860

    இலங்கையின் பிரதம நீதியரசராக சேர் எட்வேர்ட் செப்பர்ட் கிறீசி நியமிக்கப்பட்டார்.

  7. 1870

    அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஜோர்ஜியா அமெரிக்கக் கூட்டணியில் மீண்டும் இணைந்தது. அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு கலைக்கப்பட்டது.

  8. 1870

    ரூபர்ட்சுலாந்தும் வட-மேற்கு பிராந்தியமும் கனடாவுக்குக் கொடுக்கப்பட்டன. இப்பெரும் நிலப்பகுதிகளில் இருந்து மானிட்டோபா, வடமேற்கு நிலப்பகுதிகள் ஆகிய கனடிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.

  9. 1888

    சப்பானின் பண்டாய் சுழல்வடிவ எரிமலை வெடித்ததில் 500 பேர் உயிரிழந்தனர்.

20ஆம் நூற்றாண்டு

  1. 1916

    வாசிங்டன், சியாட்டில் நகரில் வில்லியம் போயிங், ஜோர்ஜ் வெஸ்டர்வெல்ட் இணைந்து போயிங் விமான நிறுவனத்தை ஆரம்பித்தனர்.

  2. 1927

    வியென்னாவில் 89 ஆர்ப்பாட்டக்காரர் ஆத்திரியக் காவற்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

  3. 1946

    ஐக்கிய இராச்சியம் வடக்கு போர்னியோவை (இன்றைய மலேசியாவின் சபாவில்) தனதாக்கியது.

  4. 1955

    அணுவாயுதங்களுக்கு எதிராக 18 நோபல் விருதாளர்கள் உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர். பின்னர் மேலும் 34 பேர் கையெழுத்திட்டனர்.

  5. 1959

    ஐக்கிய அமெரிக்காவில் எஃகுத் தொழிலாளர்களின் பணி நிறுத்தம் ஆரம்பமானது. இது அமெரிக்க வரலாற்றில் முதற்தடவையாக வெளிநாட்டு எஃகு இறக்குமதிக்கு வழிவகுத்தது.

  6. 1974

    சைப்பிரசு, நிக்கோசியாவில் கிரேக்க ஆதரவு தேசியவாதிகள் இராணுவப் புரட்சியை ஆரம்பித்து அரசுத்தலைவர் மக்காரியோசைப் பதவியில் இருந்து அகற்றி நிக்கோசு சாம்ப்சனைத் தலைவராக்கினார்கள்.

  7. 1975

    விண்வெளிப் போட்டி: முதலாவது அமெரிக்க-சோவியத் இணைந்த விண்வெளித் திட்டம் அப்பல்லோ-சோயூசு விண்கலம் ஐந்து அமெரிக்க-சோவியத் விண்வெளி வீரர்களுடன் ஏவப்பட்டது.

  8. 1983

    பாரிசில் ஓர்லி விமானநிலையத்தில் ஆர்மீனியத் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டு 55 பேர் காயமடைந்தனர்.

  9. 1991

    இலங்கை இராணுவத்தின் எறிகணை வீச்சில் ஈழத்து எழுத்தாளர் நெல்லை க. பேரன் குடும்பத்தோடு கொல்லப்பட்டார்.

  10. 1998

    இலங்கை, வவுனியாவில் இடம்பெற்ற கண்ணிவெடித் தாக்குதலில் புளொட் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சண்முகநாதன் கொல்லப்பட்டார்.

21ஆம் நூற்றாண்டு

  1. 2002

    அமெரிக்க ஊடகவியலாளர் டேனியல் பெர்ல்லைப் படுகொலை செய்த குற்றத்துக்காக பிரித்தானியாவில் பிறந்த அகமது சேக் கிற்கு பாக்கித்தான் நீதிமன்றம் தூக்குத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.

  2. 2003

    டைம் வார்னெர் நெட்சுகேப் நிறுவனத்தைக் கலைத்தார். இதே நாளில் மொசில்லா நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.

  3. 2006

    டுவிட்டர் சமூக வலைத்தளம் ஆரம்பிக்கப்பட்டது.

  4. 2014

    மாஸ்கோவில் தொடருந்து ஒன்று தடம் புரண்டதில் 24 பேர் உயிரிழந்தனர், 160 பேர் காயமடைந்தனர்.

பிறப்புகள்

Births · 25

இறப்புகள்

Deaths · 16

இம்மாத நாட்கள் · சூலை

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சூலை 15 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.