Skip to content

Popular

July 14 செவ்வாய்

On this day · July 14

வரலாற்றில் சூலை 14

சூலை 14 அன்று நிகழ்ந்த 52 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 22 பிறப்புகள் · 19 இறப்புகள் · 9 சிறப்பு நாட்கள் · 2

சூலை 14 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 22

13ஆம் நூற்றாண்டு

  1. 1223

    இரண்டாம் பிலிப்பு இறந்ததை அடுத்து அவரது மகன் எட்டாம் லூயி பிரான்சின் மன்னராக முடிசூடினார்.

18ஆம் நூற்றாண்டு

  1. 1789

    பிரெஞ்சுப் புரட்சி: பாரிசு மக்கள் பாஸ்டில் சிறையைத் தகர்த்து சிறைக் கைதிகளை விடுவித்து இராணுவத் தளவாடங்களைக் கைப்பற்றினர்.

  2. 1791

    இங்கிலாந்துத் திருச்சபைக்கு எதிரானவர்கள் மீது கலவரம் ஆரம்பித்ததை அடுத்து, பிரெஞ்சுப் புரட்சியின் ஆதரவாளரான சோசப்பு பிரீசிட்லி பர்மிங்காமில் இருந்து வெளியேறினார்.

  3. 1798

    அமெரிக்க அரசைப் பற்றி அவதூறாகவோ, பொய்யாகவோ எழுதுவது, பிரசுரிப்பது குற்றமாக ஐக்கிய அமெரிக்காவில் சட்டம் இயற்றப்பட்டது.

19ஆம் நூற்றாண்டு

  1. 1814

    இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பில் நிலநடுக்கம் உணரப்பட்டது.

  2. 1874

    சிகாகோவில் ஏற்பட்ட தீ விபத்தில் நகரின் 47 ஏக்கர்கள் அழிந்தது. 20 பேர் உயிரிழந்தனர். 812 கட்டடங்கள் சேதமடைந்தன.

  3. 1889

    பாரிசில் கூடிய சோசலிசத் தொழிலாளர்களின் "பன்னாட்டுத் தொழிலாளர் நாடாளுமன்ற" நிகழ்வுகளில் பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்பட 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் பங்கேற்றனர். கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி வேலை-நேரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என முடிவாகியது.

  4. 1900

    சீனாவுக்கு எதிரான எட்டு நாடுகள் கூட்டணி தியென்சினைக் கைப்பற்றியது.

20ஆம் நூற்றாண்டு

  1. 1933

    செருமனியில் நாட்சி கட்சி தவிர்த்து அனைத்து அரசியல் கட்சிகளும் தடை செய்யப்பட்டன.

  2. 1938

    அவார்ட் இயூசு உலகைச் சுற்றி 91-மணி நேரத்தில் விமானத்தில் பறந்து உலக சாதனையை ஏற்படுத்தினார்.

  3. 1948

    இத்தாலியின் கம்யூனிசக் கட்சியின் தலைவர் பல்மீரோ டொக்ளியாட்டி நாடாளுமன்றத்துக்கு முன்னர் சுடப்பட்டார்.

  4. 1958

    ஈராக்கியப் புரட்சி: ஈராக்கில் மன்னராட்சி முடிவுக்கு வந்தது. அப்துல் கரீம் காசிம் நாட்டின் புதிய தலவரானார்.

  5. 1965

    மரைனர் 4 விண்கலம் செவ்வாய்க் கோளுக்குக் கிட்டவாகச் சென்று முதற்தடவையாக வேறொரு கோளின் மிக அண்மையான படங்களைப் பூமிக்கு அனுப்பியது.

  6. 1966

    குவாத்தமாலா நகரில் மனநோய் வைத்தியசாலையில் இடம்பெற்ற தீவிபத்தில் 225 பேர் கொல்லப்பட்டனர்.

  7. 1967

    நாசாவின் சேர்வெயர் 4 ஆளில்லா விண்கலம் ஏவப்பட்டது.

  8. 1969

    ஒந்துராசு காற்பந்து அணி எல் சால்வடோர் அணியிடம் தோற்றதை அடுத்து, ஒந்துராசில் சல்வதோர் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எதிராகக் கலவரம் வெடித்தது.

  9. 1976

    கனடாவில் மரண தண்டனை முறை ஒழிக்கப்பட்டது.

  10. 1995

    எம்பி3 பெயரிடப்பட்டது.

  11. 1995

    இலங்கை இராணுவத்தினரின் முன்னேறிப்பாய்தல் நடவடிக்கைக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் புக்காரா ரக விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது.

21ஆம் நூற்றாண்டு

  1. 2002

    பாஸ்டில் நாள் நிகழ்வுகளில் கலந்து கொண்ட பிரெஞ்சு அரசுத்தலைவர் ஜாக் சிராக் கொலை முயற்சி ஒன்றில் இருந்து உயிர் தப்பினார்.

  2. 2015

    நாசாவின் நியூ ஹரைசன்ஸ் விண்கலம் புளூட்டோவுக்கு அண்மையாக முதல் தடவையாக சென்றது.

  3. 2016

    பிரான்சில் நீசு நகரில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் 86 பேர் உயிரிழந்தனர், 400 பேர் காயமடைந்தனர்.

பிறப்புகள்

Births · 19

இறப்புகள்

Deaths · 9

இம்மாத நாட்கள் · சூலை

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சூலை 14 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.