Skip to content

Popular

July 18 சனி

On this day · July 18

வரலாற்றில் சூலை 18

சூலை 18 அன்று நிகழ்ந்த 62 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 29 பிறப்புகள் · 21 இறப்புகள் · 11 சிறப்பு நாட்கள் · 1

சூலை 18 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 29

1ஆம் நூற்றாண்டு

  1. 64

    ரோமில் பெரும் தீ பரவி நகரின் வர்த்தக மையத்தில் பெரும் சேதம் ஏற்பட்டது. அப்போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தான் என்று சொல்லப்படுகிறது.

4ஆம் நூற்றாண்டு

  1. 362

    ரோம-பாரசீகப் போர்கள்: பேரரசர் யூலியன் 60,000 உரோமைப் போர் வீரர்களுடன் அந்தியோக்கியாவை அடைந்து அங்கு ஒன்பது மாதங்கள் தங்கியிருந்து பாரசீகப் பேரரசுடன் போரிட்டார்.

13ஆம் நூற்றாண்டு

  1. 1290

    பேரரசர் முதலாம் எட்வர்டு இங்கிலாந்தில் உள்ள அனைத்து யூதர்களையும் வெளியேற உத்தரவிட்டார்.

14ஆம் நூற்றாண்டு

  1. 1389

    நூறாண்டுப் போர்: பிரான்சும் இங்கிலாந்தும் அமைதி உடன்பாட்டை எட்டின. அடுத்த 13 ஆண்டுகள் இரு நாடுகளுக்கும் இடையே அமைதி நிலவியது.

  2. 1391

    மங்கோலியப் பேரரசர் தைமூர் தங்க நாடோடிகளின் தோக்தமிசை கந்தூர்ச்சா ஆற்றுச் சமரில் (இன்றைய தென்கிழக்கு உருசியா) தோற்கடித்தார்.

19ஆம் நூற்றாண்டு

  1. 1806

    மால்ட்டா, பிர்கு நகரில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 200 பேர் வரை உயிரிழந்தனர்.

  2. 1812

    ஆங்கிலோ-உருசிய, மற்றும் ஆங்கிலோ-சுவீடியப் போர்கள் முடிவுக்கு வந்தன.

  3. 1841

    இரண்டாம் பெதுரோ பிரேசில் பேரரசராக முடிசூடினார்.

  4. 1870

    முதலாவது வத்திக்கான் பேரவை திருத்தந்தையின் தவறா வரக் கோட்பாட்டிற்கு ஆணையிட்டது.

  5. 1872

    ஐக்கிய இராச்சியத்திலும் அயர்லாந்திலும் நாடாளுமன்ற, உள்ளூராட்சித் தேர்தல்களில் இரகசிய வாக்கெடுப்பு முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.

20ஆம் நூற்றாண்டு

  1. 1916

    யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பெரும் சூறாவளியில் பலர் உயிரிழந்தனர். வீடுகள், மற்றும் பல தொலைத்தொடர்பு சாதனங்கள் சேதமடைந்தன.

  2. 1925

    இட்லரின் புகழ் பெற்ற மெயின் கேம்ப் வெளியிடப்பட்டது

  3. 1942

    செருமனி மெசேர்ஸ்கிமிட் எம்.இ 262 வானூர்தியை சோதனைக்காகப் பறக்கவிட்டது.

  4. 1942

    இரண்டாம் உலகப் போர்: நோர்வேயில், யுகொசுலாவியப் போர்க் கைதிகள் 288 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

  5. 1944

    இரண்டாம் உலகப் போர்: போரில் ஏற்பட்ட பல தோல்விகளை அடுத்து சப்பானியப் பிரதமர் இதெக்கி டோஜோ பதவியைத் துறந்தார்.

  6. 1966

    மனித விண்வெளிப்பறப்பு: நாசாவின் ஜெமினி 10 விண்கலம் ஏவப்பட்டது.

  7. 1968

    இன்டெல் நிறுவனம் மவுண்டன் வியூ, கலிபோர்னியாவில் நிறுவப்பட்டது.

  8. 1976

    1976 ஒலிம்பிக் போட்டியில் நாடியா கொமனட்சி ஒலிம்பிக் வரலாற்றில் முதற்தடவையாக சீருடற்பயிற்சிகள் போட்டியில் முழுமையான 10 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார்.

  9. 1977

    வியட்நாம் ஐக்கிய நாடுகள் அவையில் இணைந்தது.

  10. 1982

    குவாத்தமாலாவில் பெண்கள், குழந்தைகள் உட்பட 268 பழங்குடியினர் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.

  11. 1984

    கலிபோர்னியாவில் மெக்டொனால்ட்சு உணவகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் 21 பேர் கொல்லப்பட்டனர் 19 பேர் படுகாயமடைந்தானர்.

  12. 1994

    அர்கெந்தீனாவில் புவெனசு ஐரிசு நகரில் யூத சமூக மையம் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 85 பேர் கொல்லப்பட்டனர், 300 பேர் காயமடைந்தனர்.

  13. 1994

    ருவாண்டா இனப்படுகொலை: ருவாண்டன் நாட்டுப்பற்று முன்னணியினர் ருவாண்டாவின் வடமேற்குப் பகுதியைக் கைப்பற்றினர். இடைக்கால அரசு சயீருக்குத் தப்பியோடியது. இனப்படுகொலை முடிவுக்கு வந்தது.

  14. 1995

    கரிபியன் தீவான மொன்செராட்டில் சௌபியரே எரிமலை வெடித்துச் சிதறியதன் காரணமாக ‎தீவின் தலைநகரம் அழிக்கப்பட்டதுடன் மண்டலத்தின் மக்கட்தொகையின் மூன்றில் இரண்டு பகுதியினர் தீவை விட்டு வெளியேறினர்.

  15. 1996

    ஓயாத அலைகள் ஒன்று: முல்லைத்தீவு இலங்கைப் படைமுகாம் விடுதலைப் புலிகளால் முற்றுகையிடப்பட்டது. 1200 படையினர் கொல்லப்பட்டனர்.

  16. 1997

    மும்பையில் 10 சிறுவர்கள் காவற்துறையினரால் கொல்லப்பட்ட நிகழ்வுக்குப் பின்னர் சுமார் 8000 தலித் மக்கள் கலகத்தில் ஈடுபட்டனர்.

21ஆம் நூற்றாண்டு

  1. 2007

    மும்பையில் ஏழு மாடிக் கட்டிடம் உடைந்து வீழ்ந்ததில் 29 பேர் உயிரிழந்தனர்.

  2. 2012

    பல்காரியாவில் இசுரேலிய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதில் 7 பேர் கொல்லப்பட்டனர், 32 பேர் காயமடைந்தனர்.

  3. 2013

    அமெரிக்காவின் டிட்ராயிட் மாநில அரசு, $20 பில்லியன் கடனுடன், திவாலா நிலை யை அடைந்தது.

பிறப்புகள்

Births · 21

இறப்புகள்

Deaths · 11

இம்மாத நாட்கள் · சூலை

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சூலை 18 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.