Skip to content

Popular

July 13 திங்கள்

On this day · July 13

வரலாற்றில் சூலை 13

சூலை 13 அன்று நிகழ்ந்த 53 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 24 பிறப்புகள் · 13 இறப்புகள் · 15 சிறப்பு நாட்கள் · 1

சூலை 13 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 24

கிமு (பொ.ஊ.மு)

  1. கிமு 587

    சாலமோனின் கோவில் இடிக்கப்பட்டதை அடுத்து, பாபிலோனின் எருசலேம் முற்றுகை முடிவுக்கு வந்தது.

12ஆம் நூற்றாண்டு

  1. 1174

    1173-74 கிளர்ச்சியின் முக்கிய கிளர்ச்சியாளர் இசுக்காட்லாந்தின் முதலாம் வில்லியம் இங்கிலாந்தின் இரண்டாம் என்றியின் படையினரால் கைது செய்யப்பட்டார்.

13ஆம் நூற்றாண்டு

  1. 1249

    இசுக்கொட்லாந்தின் மன்னராக மூன்றாம் அலெக்சாந்தர் முடிசூடினார்.

17ஆம் நூற்றாண்டு

  1. 1643

    இங்கிலாந்து உள்நாட்டுப் போர்: இங்கிலாந்தில் என்றி வில்மட் பிரபுவின் முடியாட்சி சார்புப் படைகள் சேர் வில்லியம் வோலர் தலைமையிலான நாடாளுமன்ற சார்புப் படைகளைத் தோற்கடித்தனர்.

19ஆம் நூற்றாண்டு

  1. 1830

    வங்காள மறுமலர்ச்சிக்கு வித்திட்ட இசுக்கொட்டிசு சர்ச் கல்லூரி கொல்கத்தாவில் அலெக்சாண்டர் டஃப், இராசாராம் மோகன் ராய் ஆகியோரால் நிறுவப்பட்டது.

  2. 1844

    இலங்கையில் காவற்துறை நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன.

  3. 1863

    நியூயார்க் நகரத்தில் அரசுக்கு எதிரான மூன்று நாள் கலவரங்கள் ஆரம்பமாயின. 120 பேர் கொல்லப்பட்டனர்.

  4. 1869

    இந்துப் பிள்ளைகளின் கல்விக்கு ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையில் ஓர் ஆங்கிலப் பாடசாலையை நிறுவினார்.

  5. 1878

    பெர்லின் உடன்பாட்டை அடுத்து ஐரோப்பிய நாடுகள் பால்கன் குடாவின் வரைபடத்தை மாற்றியமைத்தன. செர்பியா, மொண்டெனேகுரோ, உருமேனியா ஆகியன முழுமையாக உதுமானியப் பேரரசிடம் இருந்து விடுதலை அடைந்தன.

20ஆம் நூற்றாண்டு

  1. 1919

    பிரித்தானியாவின் வான்கப்பல் ஆர்34 அத்திலாந்திக்குப் பெருங்கடல் மேலாக 182 மணிநேரம் பறந்து தனது முதலாவது பயணத்தை முடித்துக் கொண்டு இங்கிலாந்தின் நோர்போக்கில் தரையிறங்கியது.

  2. 1923

    லாஸ் ஏஞ்சலீசில் ஹாலிவுட்டின் மேல் உள்ள மலையில் "ஹாலிவுட் குறியீடு" அதிகாரபூர்வமாக எழுதப்பட்டது. ஆரம்பத்தில் இது "ஹாலிவுட்லாந்து" என எழுதப்பட்டாலும் பின்னர் 1949 இல் தற்போதைய பெயருக்கு மாற்றப்பட்டது.

  3. 1930

    முதலாவது உலகக்கோப்பை காற்பந்து போட்டிகள் உருகுவையில் ஆரம்பமாயின. லூசியென் லோரென்ட் பிரான்சுக்காக மெக்சிகோவுக்கு எதிராக முதலாவது கோலைப் போட்டார்.

  4. 1931

    காஷ்மீர், ஸ்ரீநகரில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் 75 பேர் கொல்லப்பட்டனர்.

  5. 1941

    இரண்டாம் உலகப் போர்: மொண்டெனேகுரோ மக்கள் அச்சு நாடுகளுக்கு எதிராகக் கிளர்ச்சியை ஆரம்பித்தனர்.

  6. 1971

    மொரோக்கோவில் தோல்வியடைந்த இராணுவப் புரட்சியில் ஈடுபட்ட பத்து இராணுவத்தினர் தூக்கிலிடப்பட்டனர்.

  7. 1977

    சோமாலியா எத்தியோப்பியா மீது போரை ஆரம்பித்தது.

  8. 1977

    மின்சார இழப்பினால் நியூயார்க் நகரம் 25 மணி நேரம் இருளில் மூழ்கியதில் பல கொள்ளைச் சம்பவங்களும் பல்வேறு சமூக விரோத நிகழ்வுகளும் இடம்பெற்றன.

  9. 1989

    இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் அ. அமிர்தலிங்கம், வெ. யோகேசுவரன் ஆகியோர் கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

  10. 1997

    சே குவேராவினதும் தோழர்களதும் உடல் எச்சங்கள் கியூபாவுக்குக் கொண்டுவரப்பட்டன.

21ஆம் நூற்றாண்டு

  1. 2001

    சீனாவின் பெய்ஜிங் நகரம் 2008க்கான ஒலிம்பிக் விளையாட்டுக்களுக்குத் தகுதி பெற்றது.

  2. 2005

    பாக்கித்தானில் கோட்கி என்ற இடத்தில் மூன்று தொடருந்துகள் மோதியதில் 150 பேருக்கு மேல் உயிரிழந்தனர்.

  3. 2011

    மும்பை நகரில் இடம்பெற்ற மூன்று குண்டுவெடிப்புகளில் 26 பேர் கொல்லப்பட்டு, 130 பேர் காயமடைந்தனர்.

  4. 2011

    தெற்கு சூடான் ஐக்கிய நாடுகளில் இணைந்தது.

  5. 2016

    ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் டேவிட் கேமரன் தனது பதவியைத் துறந்தார். தெரசா மே புதிய பிரதமரானார்.

பிறப்புகள்

Births · 13

இறப்புகள்

Deaths · 15

இம்மாத நாட்கள் · சூலை

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சூலை 13 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.