Skip to content

Popular

July 9 வியாழன்

On this day · July 9

வரலாற்றில் சூலை 9

சூலை 9 அன்று நிகழ்ந்த 71 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 34 பிறப்புகள் · 20 இறப்புகள் · 13 சிறப்பு நாட்கள் · 4

சூலை 9 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 34

5ஆம் நூற்றாண்டு

  1. 455

    இராணுவத் தளபதி அவிட்டசு மேற்கு ரோமப் பேரரசராக அறிவிக்கப்பட்டார்.

9ஆம் நூற்றாண்டு

  1. 869

    சப்பானில் வடக்கு ஒன்சூ அருகே செண்டாய் பிரதேசத்தில் இடம்பெற்ற பெரும் நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலையால் பெரும் சேதம் ஏற்பட்டது.

15ஆம் நூற்றாண்டு

  1. 1401

    தைமூர் ஜலாய்ரித் சுல்தானகத்தைத் தாக்கி பக்தாதை அழித்தார்.

16ஆம் நூற்றாண்டு

  1. 1540

    இங்கிலாந்து மன்னர் எட்டாம் என்றி தனது நான்காவது மனைவி ஆன் உடனான திருமண உறவை சட்டபூர்வமாகத் துண்டித்தார்.

18ஆம் நூற்றாண்டு

  1. 1755

    பென்சில்வேனியாவில் பிரெஞ்சு மற்றும் அமெரிக்கப் பழங்குடிப் படையினர் பிரித்தானியப் படைகளைத் தோற்கடித்தனர்.

  2. 1790

    பால்ட்டிக் கடலில் இடம்பெற்ற மோதலில் சுவீடனின் கடற்படயினர் உருசியக் கப்பல்களை பெரும் எண்ணிக்கையில் கைப்பற்றினர்.

19ஆம் நூற்றாண்டு

  1. 1807

    பிரான்சின் முதலாம் நெப்போலியனும் உருசியாவின் முதலாம் அலெக்சாந்தரும் தில்சித் நகரில் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

  2. 1810

    ஒல்லாந்து இராச்சியத்தை நெப்போலியன் தனது முதலாம் பிரஞ்சு பேரரசுடன் இணைத்துக் கொண்டான்.

  3. 1816

    அர்கெந்தீனா எசுப்பானியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

  4. 1821

    கிரேக்க விடுதலைப் போரில் உதவியமைக்காக பேராயர் கிப்பிரியானொசு உட்பட 470 முக்கிய சைப்பிரசினர் தூக்கிலிடப்பட்டனர்.

  5. 1837

    பிரித்தானிய இலங்கை, சட்டவாக்கப் பேரவையில் முதல் தடவையாக அதிகாரபூர்வமற்ற உறுப்பினர்கள் பதவியேற்றனர்.

  6. 1850

    பாரசீக இறைவாக்கினர் பாப் தப்ரீசு நகரில் தூக்கிலிடப்பட்டார்.

  7. 1868

    அனைத்து ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கும் முழுக் குடியுரிமை வழங்கும் சட்டமூலம் ஐக்கிய அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்டது.

  8. 1875

    உதுமானியரின் ஆட்சிக்கு எதிரான எர்சகோவினா கிளர்ச்சி ஆரம்பமானது. இது மூன்று ஆன்டுகள் நீடித்தது.

  9. 1877

    முதலாவது விம்பிள்டன் போட்டிகள் ஆரம்பமாயின.

  10. 1900

    ஆத்திரேலியக் கண்டத்தில் தனித்தனியே குடியேற்ற நாடுகளாக இருந்த மாநிலங்கள் ஆத்திரேலியக் கூட்டமைப்பின் கீழ் ஒன்றிணைக்க விக்டோரியா மகாராணி ஒப்புதல் அளித்தார்.

  11. 1900

    வெளிநாட்டு கிறித்தவ மதப்பரப்புனர்கள் 45 பேரைத் தூக்கிலிட வடக்கு சீனாவின் சான்சி மாகாண ஆளுநர் உத்தரவிட்டார்.

20ஆம் நூற்றாண்டு

  1. 1903

    யாழ்ப்பாணத்தில் இந்து இளைஞர் அமைப்பு உருவானது.

  2. 1918

    அமெரிக்காவின் நாஷ்வில் என்ற இடத்தில் இரண்டு தொடருந்துகள் மோதிக்கொண்டதில் 101 பேர் உயிரிழந்தனர், 171 பேர் படுகாயமடைந்தனர்.

  3. 1943

    இரண்டாம் உலகப் போர்: நேச நாடுகள் சிசிலி மீதான தாக்குதலை ஆரம்பித்தன.

  4. 1948

    பாக்கித்தான் தனது முதலாவது அஞ்சல் தலையை வெளியிட்டது.

  5. 1955

    ரசல்-ஐன்ஸ்டைன் கொள்கை விளக்க அறிக்கை அணுவாயுதங்களினால் ஏற்படும் அழிவுகளைக் குறைக்கக் கோரியது.

  6. 1956

    யாழ்ப்பாணத்தில் நல்லூர் கந்தசுவாமி கோவில், வண்ணார்பண்ணை சிவன் கோவில், பெருமாள் கோயில் ஆகியன தாழ்த்தப்பட்டோரின் வழிபாட்டுக்காகத் திறந்து விடப்பட்டன.

  7. 1956

    கிரேக்கத்தில் சைக்கிளேடு தீவுகளில் 7.7 அளவு நிலநடுக்கமும், ஏஜியன் கடலில் ஆழிப்பேரலையும் ஏற்பட்டதில் 53 பேர் உயிரிழந்தனர்.

  8. 1982

    அமெரிக்காவின் பான் ஆம் விமானம் லூசியானாவின் வீழ்ந்ததில் அதில் பயணஞ் செய்த அனைத்து 145 பேரும் தரையில் இருந்த 8 பேரும் உயிரிழந்தனர்.

  9. 1986

    நியூசிலாந்தில் ஒருபாலுறவு சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டது.

  10. 1991

    30 ஆண்டுகளின் பின்னர் தென்னாப்பிரிக்கா ஒலிம்பிக் விளையாட்டுக்களில் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டது.

  11. 1995

    யாழ்ப்பாணம் வலிகாமம் பகுதியில் இலங்கை இராணுவத்தின் முன்னேறிப் பாய்தல் இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

  12. 1995

    யாழ்ப்பாணத்தில் நவாலி பேதுருவானவர் தேவாலயம் மீது இலங்கை விமானப் படையினரால் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 141 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

21ஆம் நூற்றாண்டு

  1. 2002

    ஆபிரிக்க ஒன்றியம் அடிஸ் அபாபாவில் அமைக்கப்பட்டது. தென்னாப்பிரிக்க அரசுத்தலைவர் தாபோ உம்பெக்கி இவ்வமைப்பின் முதலாவது தலைவரானார்.

  2. 2006

    சைபீரியாவில் இர்கூத்ஸ்க் விமான நிலையத்தில் 200 பேரை ஏற்றிச் சென்ற பயணிகள் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 125 பேர் உயிரிழந்தனர்.

  3. 2006

    2006 உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இத்தாலி பிரான்சை வென்று நான்காவது தடவையாக உலகக்கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.

  4. 2006

    அக்னி III ஏவுகணை ஒரிசாவில் சோதிக்கப்பட்டது. அதன் இரண்டாவது அடுக்கு இயங்க மறுத்தமையால் குறுகிய தூரத்தையே சென்றடைந்தது.

  5. 2011

    தெற்கு சூடான் சூடானில் இருந்து பிரிந்து தனி நாடானது.

பிறப்புகள்

Births · 20

இறப்புகள்

Deaths · 13

இம்மாத நாட்கள் · சூலை

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சூலை 9 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.