Skip to content

Popular

July 8 புதன்

On this day · July 8

வரலாற்றில் சூலை 8

சூலை 8 அன்று நிகழ்ந்த 59 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 29 பிறப்புகள் · 12 இறப்புகள் · 18

வரலாற்று நிகழ்வுகள்

Events · 29

11ஆம் நூற்றாண்டு

  1. 1099

    முதலாம் சிலுவைப் போர்: 15,000 கிறித்தவப் போர் வீரர்கள் பட்டினியுடன் எருசலேம் முற்றுகையை ஆரம்பித்து, நகரினூடாக சமய ஊர்வலம் சென்றனர்.

15ஆம் நூற்றாண்டு

  1. 1497

    வாஸ்கோ ட காமாவின் இந்தியாவுக்கான முதல் ஐரோப்பிய நேரடிப் பயணம் ஆரம்பித்தது.

16ஆம் நூற்றாண்டு

  1. 1579

    உருசிய மரபுவழித் திருச்சபையின் புனித திருவோவியம் அன்னை கசான் தத்தாரிஸ்தான், கசான் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது.

17ஆம் நூற்றாண்டு

  1. 1663

    இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு மன்னர் றோட் தீவுக்கான அரசு உரிமையை போதகர் ஜான் கிளார்க்கிற்கு வழங்கினார்.

18ஆம் நூற்றாண்டு

  1. 1709

    உருசியப் பேரரசர் முதலாம் பியோத்தர் போல்ட்டாவா என்ற இடத்தில் சுவீடனின் பன்னிரண்டாம் சார்லசு மன்னனைத் தோற்கடித்தார்.

  2. 1730

    சிலியின் கரையோரப் பகுதியை 8.7 அளவு நிலநடுக்கம், மற்றும் ஆழிப்பேரலை தாக்கியதில் பெரும் சேதம் ஏற்பட்டது.

  3. 1760

    புதிய பிரான்சில் இடம்பெற்ற கடற் சமரில் பிரித்தானியப் படைகள் பிரெஞ்சுப் படைகளைத் தோற்கடித்தன.

  4. 1776

    அமெரிக்க விடுதலைச் சாற்றுரையின் முதலாவது பொது வாசிப்பை யோன் நிக்சன் படித்து முடித்தபோது, நாடெங்கும் தேவாலய மணிகள் (விடுதலை மணி உட்பட) ஒலித்தன.

19ஆம் நூற்றாண்டு

  1. 1827

    இலங்கையில் இந்திய வம்சாவழித் தமிழர் நீதிமன்றங்களில் சான்றாயர்களாக அமர்வதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

  2. 1859

    சுவீடன்-நோர்வே மன்னராக பதினைந்தாம் சார்லசு முடி சூடினார்.

  3. 1876

    தென் கரொலைனாவில் வெள்ளையின ஆதிக்கவாதிகள் ஐந்து கறுப்பினத்தவரைக் கொன்றனர்..

  4. 1879

    அமெரிக்காவின் ஜென்னெட் என்ற கப்பல் தனது கடைசி ஆய்வுப் பயணத்தை வட துருவம் நோக்கி ஆரம்பித்தது. இது 1881 இல் மூழ்கியது.

  5. 1892

    நியூபவுண்லாந்தின் சென் ஜோன்சு நகரில் இடம்பெற்ற பெரும் தீ நகரில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

20ஆம் நூற்றாண்டு

  1. 1932

    டௌ ஜோன்ஸ் தொழில்துறை குறியீடு பெரும் பொருளியல் வீழ்ச்சியின் மிகத் தாழ்ந்த புள்ளிகளை (41.22) எட்டியது.

  2. 1937

    துருக்கி, ஈரான், ஈராக், ஆப்கானித்தான் ஆகிய நாடுகள் தெகுரானில் அமைதி உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்டன. இவ்வுடன்பாடு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நிலைத்திருந்தது.

  3. 1939

    மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஒத்துழைப்போடு அரிசனங்களின் ஆலயப் பிரவேசம் அமைதியாக நடந்தது.

  4. 1947

    அடையாளம் கண்டுபிடிக்க முடியாத பறக்கும் பொருள் ஒன்று நியூ மெக்சிகோவில் வீழ்ந்ததாக செய்தி அறிவிக்கப்பட்டது.

  5. 1962

    ரங்கூனில் மாணவர் கிளர்ச்சியை அடக்க இராணுவத் தளபதி நே வின் ரங்கூன் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியக் கட்டடத்தைத் தகர்த்தார்.

  6. 1966

    புருண்டியின் மன்னர் நான்காம் முவாம்புத்சா அவரது மகன் இளவரசர் சார்லசு இந்தீசியினால் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

  7. 1972

    பாலத்தீன எழுத்தாளர் கசன் கனஃபானி இசுரேலிய மொசாட் படைகளினால் படுகொலை செய்யப்பட்டார்.

  8. 1982

    ஈராக் அரசுத்தலைவர் சதாம் உசேன் படுகொலை முயற்சியில் இருந்து தப்பினார்.

  9. 1985

    திம்புப் பேச்சுவார்த்தைகள்: இலங்கை அரசுக்கும் ஈழ விடுதலை அமைப்புகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாயின.

  10. 1988

    பெங்களூரில் இருந்து கன்னியாகுமரிக்குச் சென்று கொண்டிருந்த ஐலண்டு விரைவுவண்டி பெருமண் பாலத்தில் தடம் புரண்டு அஷ்டமுடி ஏரியில் வீழ்ந்ததில் 105 பயணிகள் உயிரிழந்தனர், 200 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

  11. 1990

    செருமனி அர்கெந்தீனாவை வென்று காற்பந்து உலகக்கோப்பையை வென்றது.

  12. 1994

    கிம்-இல்-சுங் இறந்ததை அடுத்து, அவரது மகன் கிம் ஜொங்-இல் வட கொரியாவின் உயர் தலைவராகப் பொறுப்பேற்றார்.

21ஆம் நூற்றாண்டு

  1. 2003

    சூடான் விமானம் விபத்துக்குள்ளாகியதில் 117 பேர் உயிரிழந்தனர். இரண்டு வயது குழந்தை ஒன்று மட்டும் உயிர் தப்பியது.

  2. 2006

    ம. பொ. சி., புலவர் குழந்தை ஆகியோரின் நூல்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டன்.

  3. 2011

    அட்லாண்டிசு விண்ணோடம் தனது கடைசிப் பயணத்தை ஆரம்பித்தது.

  4. 2014

    பாதுகாப்பு விளிம்பு நடவடிக்கை: இசுரேல் காசா மீது இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது.

பிறப்புகள்

Births · 12

இறப்புகள்

Deaths · 18

இம்மாத நாட்கள் · சூலை

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சூலை 8 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.