Skip to content

Popular

July 25 சனி

On this day · July 25

வரலாற்றில் சூலை 25

சூலை 25 அன்று நிகழ்ந்த 79 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 45 பிறப்புகள் · 20 இறப்புகள் · 13 சிறப்பு நாட்கள் · 1

சூலை 25 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 45

4ஆம் நூற்றாண்டு

  1. 306

    முதலாம் கான்ஸ்டன்டைன் உரோமைப் பேரரசராக அவரது இராணுவத்தினரால் அறிவிக்கப்பட்டார்.

13ஆம் நூற்றாண்டு

  1. 1261

    கான்ஸ்டண்டினோபில் நகரை நிக்காயப் படையினர் கைப்பற்றி பைசாந்தியப் பேரரசை அங்கு மீண்டும் அமைத்தனர்.

15ஆம் நூற்றாண்டு

  1. 1467

    மொலினெல்லா என்ற இடத்தில் நடந்த சமரில் முதல் தடவையாக சுடுகலன்கள் இத்தாலியில் பெருமளவில் பயன்படுத்தப்பட்டன.

16ஆம் நூற்றாண்டு

  1. 1547

    இரண்டாம் என்றி பிரான்சின் மன்னராக முடிசூடினார்.

  2. 1554

    முதலாம் மேரி, எசுப்பானியாவின் இரண்டாம் பிலிப்பு மன்னரைத் திருமணம் புரிந்தார்.

  3. 1583

    குங்கோலிம் கிளர்ச்சி: கோவாவில் போர்த்துக்கீச ஆட்சிக்கு எதிரான இந்துக்களின் கிளர்ச்சி இடம்பெற்றது. 5 இயேசு சபை மதகுருமார், ஒரு ஐரோப்பியர், 14 இந்தியக் கிறித்தவர்கள் கொல்லப்பட்டனர். கிளர்ச்சியாளர்கள் பலர் பின்னர் அரசினால் கொல்லப்பட்டனர்.

  4. 1593

    பிரான்சின் நான்காம் என்றி மன்னர் புரட்டத்தாந்து மதத்தில் இருந்து ரோமன் கத்தோலிக்கத்துக்கு பகிரங்கமாக மதம் மாறினார்.

17ஆம் நூற்றாண்டு

  1. 1603

    இசுக்கொட்லாந்தின் ஆறாம் யேம்சு இங்கிலாந்தின் மன்னராக (முதலாம் யேம்சு) முடிசூடினார். இதன் மூலம் இங்கிலாந்தும் இசுக்காட்லாந்தும் ஒன்றிணைந்தன. அரசியல் ரீதியான இணைப்பு 1707 இல் நிகழ்ந்தது.

  2. 1609

    ஆங்கிலேயக் கப்பல் சீ வென்ச்சர் வர்ஜீனியா செல்லும் வழியில் புயலில் சிக்கி பெர்முடாவில் தரை தட்டியது. உயிர்தப்பியவர்கள் அங்கு புதிய குடியேற்றத்தை ஆரம்பித்தனர்.

18ஆம் நூற்றாண்டு

  1. 1783

    அமெரிக்கப் புரட்சிப் போர்: போரின் கடிசைச் சமர் கடலூர் முற்றுகை அமைதி உடன்பாட்டுடன் முடிவடைந்தது.

  2. 1797

    எசுப்பானியாவின் ரெனெரைஃப் நகரைக் கைப்பற்றும் முயற்சியில் ஒராசியோ நெல்சன் தனது 300 படையினரையும், தனது ஒரு கையையும் இழந்தார்.

  3. 1799

    எகிப்தில் அபூ கிர் சமரில் பிரான்சின் முதலாம் நெப்போலியன் 10,000 உதுமானியர்களை வென்றான்.

19ஆம் நூற்றாண்டு

  1. 1814

    பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: கனடா மீதான அமெரிக்காவின் தாக்குதல் முறியடிக்கப்பட்டது.

  2. 1837

    மின்சாரத் தந்தியின் முதலாவது வணிகரீதியான பயன்பாடு இலண்டனில் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது.

  3. 1861

    அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க ஒன்றியத்தைக் கட்டிக்காக்கவே போரிடுவதாகவும், அடிமைமுறையை ஒழிக்கவல்ல என ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றியது.

  4. 1869

    யப்பானில் மெய்சி மீள்விப்பு சீரமைப்பின் ஒரு பகுதியாக யப்பானிய நிலக்கிழார்கள் தமது நிலங்களை பேரரசருக்குக் கொடுத்தனர்.

  5. 1894

    முதலாம் சீன சப்பானியப் போர் (1894-1895) ஆரம்பமானது.

  6. 1898

    புவேர்ட்டோ ரிக்கோவை ஐக்கிய அமெரிக்கா எசுப்பானியாவிடம் இருந்து கைப்பற்றியது.

20ஆம் நூற்றாண்டு

  1. 1908

    அஜினோமோத்தோ டோக்கியோ பல்கலைக்கழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

  2. 1917

    கனடாவில் முதல் தடவையாக வருமான வரி அறிமுகப்படுத்தப்பட்டது.

  3. 1925

    சோவியத் செய்தி நிறுவனம் "டாஸ்" நிறுவப்பட்டது.

  4. 1934

    ஆத்திரியாவின் அரசுத்தலைவர் எங்கல்பேர்ட் டோல்ஃபுசு நாட்சிகளால் படுகொலை செய்யப்பட்டார்.

  5. 1939

    இலங்கையில் இலங்கை இந்திய காங்கிரஸ் கட்சி அமைக்கப்பட்டது.

  6. 1943

    இரண்டாம் உலகப் போர்: இத்தாலிய சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினி பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

  7. 1944

    இரண்டாம் உலகப் போர்: பிரான்சில் கனடிய இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட சுபிரிங் நடவடிக்கை பெரும் இழப்புகளைச் சந்தித்தது.

  8. 1946

    அணுகுண்டு சோதனை: மார்சல் தீவுகளில் பிக்கினி திட்டில் அணுவாயுதங்கள் நீருக்கடியில் வெடிக்கவைக்கப்பட்டன.

  9. 1956

    அமெரிக்காவில் நான்டக்கெட் தீவுக்கருகில் இத்தாலியப் பயணிகள் கப்பல் அண்ட்றியா டோரியா ஸ்டாக்கோம் கப்பலுடன் மோதி அடுத்தநாள் மூழ்கியது. 51 பேர் உயிரிழந்தனர்.

  10. 1957

    தூனிசியா குடியரசு நிறுவப்பட்டது.

  11. 1961

    பனிப்போர்: பெர்லின் மீதான எந்தவிதமான தாக்குதலும் நேட்டோ மீதான தாக்குதலாகக் கருதப்படும் என அமெரிக்க அரசுத்தலைவர் ஜான் எஃப். கென்னடி அறிவித்தார்.

  12. 1973

    சோவியத்தின் மார்ஸ் 5 விண்கலம் ஏவப்பட்டது.

  13. 1976

    வைக்கிங் திட்டம்: வைக்கிங் 1 செவ்வாய்க் கோளின் சைடோனியா என்ற பகுதியைப் படம் பிடித்தது.

  14. 1978

    வெளிச் சோதனை முறை கருக்கட்டல் மூலம் முதலாவது மாந்தர் (லூயிசு பிரவுன்) இங்கிலாந்தில் பிறந்தார்.

  15. 1979

    சினாய் தீபகற்பத்தின் இன்னும் ஒரு பகுதியை இசுரேல் எகிப்திடம் திருப்பிக் கொடுத்தது.

  16. 1983

    கறுப்பு யூலை: கொழும்பு வெலிக்கடைச் சிறையில் குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் உட்பட 37 தமிழ் அரசியல் கைதிகள் சிங்களக் கைதிகளினால் படுகொலை செய்யப்பட்டனர்.

  17. 1984

    சல்யூட் 7 விண்கலத்தில் சென்ற உருசியாவின் சிவெத்லானா சவீத்சுக்கயா விண்ணில் நடந்த முதலாவது பெண் என்ற பெருமையைப் பெற்றார்.

  18. 1993

    தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகரில் புனித யேம்சு தேவாலயத்தில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 11 மதகுருக்கள் உயிரிழந்தனர், 58 பேர் காயமடைந்தனர்.

  19. 1993

    இசுரேல் லெபனான் மீது பெரும் தாக்குதலை ஆரம்பித்தது. ஏழு நாட்கள் இப்போர் நீடித்தது.

  20. 1993

    மண்கிண்டிமலை இராணுவ முகாம் விடுதலைப் புலிகளினால் தாக்கியழிக்கப்பட்டது.

  21. 1994

    இசுரேலுக்கும் யோர்தானுக்கும் இடையில் வாசிங்டனில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டு 1948 முதல் இருந்து வந்த முறுகல் நிலை முடிவுக்கு வந்தது.

  22. 1995

    பாரிசு நகரில் தொடருந்து நிலையம் ஒன்றில் இடம்பெற்ற வெடிப்பில் எட்டுப் பேர் உயிரிழந்தனர், 80 பேர் காயமடைந்தனர்.

  23. 1996

    புருண்டியில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அந்நாட்டு அரசுத்தலைவர் சில்வெசுட்டர் இந்திபந்துங்கான்யா பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

  24. 1998

    யாழ்ப்பாணத்தில் இருந்து 52 தமிழ் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று தனுஷ்கோடி அருகே கவிழ்ந்ததில் 15 பெண்கள், 5 சிறுவர்கள் உட்பட 45 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.

  25. 2000

    கான்கோர்டு ஏர் பிரான்சு வானூர்தி 4590 பாரிசு பாரிசு சார்லசு டிகால் வானூர்தி நிலையத்தில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 109 பேரும் தரையில் 4 பேரும் உயிரிழந்தனர்.

21ஆம் நூற்றாண்டு

  1. 2007

    பிரதிபா பாட்டீல் இந்தியாவின் முதலாவது பெண் குடியரசுத் தலைவரானார்.

  2. 2010

    ஆப்கானித்தான் போர் தொடர்பான முக்கிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டது.

பிறப்புகள்

Births · 20

இறப்புகள்

Deaths · 13

இம்மாத நாட்கள் · சூலை

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சூலை 25 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.