Skip to content

Popular

July 2 வியாழன்

On this day · July 2

வரலாற்றில் சூலை 2

சூலை 2 அன்று நிகழ்ந்த 67 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 27 பிறப்புகள் · 25 இறப்புகள் · 15

வரலாற்று நிகழ்வுகள்

Events · 27

5ஆம் நூற்றாண்டு

  1. 437

    மூன்றாம் வலந்தீனியன் மேற்கு உரோமைப் பேரரசராக முடிசூடினார்.

10ஆம் நூற்றாண்டு

  1. 936

    கிழக்கு பிரான்சியாவின் (இன்றைய செருமனி) மன்னர் என்றி இறந்தார். இவரின் மகன் முதலாம் ஒட்டோ புதிய மன்னராக முடிசூடினார்.

17ஆம் நூற்றாண்டு

  1. 1698

    தோமசு சேவரி முதலாவது நீராவிப் பொறிக்கான காப்புரிமம் பெற்றார்.

18ஆம் நூற்றாண்டு

  1. 1776

    அமெரிக்கப் புரட்சி: பெரிய பிரித்தானியாவுடனான தொடர்புகளைத் துண்டிக்கும் தீர்மானத்தை அமெரிக்க சட்டமன்றம் எடுத்தது. ஆனாலும் இறுதி விடுதலைச் சாற்றுரை சூலை 4 இலேயே வெளியிடப்பட்டது.

19ஆம் நூற்றாண்டு

  1. 1822

    அடிமைகளுக்கிடையே கிளர்ச்சியைத் தூண்டிய குற்றங்களுக்காக அமெரிக்காவின் தென் கரொலைனா மாநிலத்தில் 35 அடிமைகள் தூக்கிலிடப்பட்டனர்.

  2. 1823

    பிரேசிலில் போர்த்துக்கேயரின் ஆட்சி முடிவுக்கு வந்தது.

  3. 1839

    கியூபாக் கரையோரத்தில் இருந்து 20 மைல் தூரத்தில் 53 ஆப்பிரிக்க அடிமைகள் அர்மிஸ்டாட் என்ற அடிமைக் கப்பலைக் கைப்பற்றினர்.

  4. 1853

    உருசியா துருக்கியின் மீது படையெடுத்தது. கிரிமியப் போர் ஆரம்பமானது.

  5. 1871

    இத்தாலியப் பேரரசர் இரண்டாம் விக்டர் இம்மானுவேல் திருத்தந்தை நாடுகளிடம் இருந்து தான் கைப்பற்றிய ரோம் நகரை அடைந்தார்.

  6. 1881

    அமெரிக்க அரசுத்தலைவர் சேம்சு கார்ஃபீல்டு சுடப்பட்டுப் படுகாயமடைந்தார். இவர் செப்டம்பர் 19 இல் மரணமானார்.

  7. 1897

    பிரித்தானிய-இத்தாலியப் பொறியாளர் மார்க்கோனி வானொலிக்கான காப்புரிமத்தை இலண்டனில் பெற்றார்.

20ஆம் நூற்றாண்டு

  1. 1921

    முதலாம் உலகப் போர்: அமெரிக்க அரசுத்தலைவர் வாரன் ஜி. ஹார்டிங் செருமனியுடனான போரை முடிவுக்குக் கொண்டு வரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

  2. 1934

    செருமனியில் நீள் கத்திகளுடைய இரவுப் படுகொலைகள் முடிவுக்கு வந்தது.

  3. 1937

    அமேலியா ஏர்ஃகாட் மற்றும் பிரெட் நூனன் ஆகியோர் வானூர்தியில் உலகைச் சுற்றும் முயற்சியில் அமைதிப் பெருங்கடல் பகுதியில் காணாமல் போயினர்.

  4. 1940

    அரண்டோரா இசுட்டார் என்ற பிரித்தானியக் கப்பல் செருமனியின் யூ-47 நீர்மூழ்கியினால் அத்திலாந்திக்குப் பெருங்கடலில் மூழ்கடிக்கப்பட்டதில் 800 பேர் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள் ஆவர்.

  5. 1940

    இந்திய விடுதலைப் போராட்ட வீரர் சுபாஸ் சந்திர போஸ் கல்கத்தாவில் கைது செய்யப்பட்டார்.

  6. 1962

    முதலாவது வோல் மார்ட் அங்காடி ஆர்கன்சா மாநிலத்தில் திறக்கப்பட்டது.

  7. 1966

    பிரெஞ்சு இராணுவத்தினர் பசிபிக் பெருங்கடலில் தமது முதலாவது அணுவாயுதச் சோதனையை நிகழ்த்தினர்.

  8. 1976

    வியட்நாம் குடியரசின் வீழ்ச்சியை அடுத்து 1954 முதல் பிரிந்திருந்த கம்யூனிச வடக்கு வியட்நாம் தெற்கு வியட்நாமுடன் வியட்நாம் சோசலிசக் குடியரசு என்ற பெயரில் இணைந்தது.

  9. 1986

    சிலியின் இராணுவ ஆட்சியாளர் அகஸ்தோ பினோசெட்டுக்கு எதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது இருவர் உயிருடன் எரிக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர்.

  10. 1997

    ஆசிய நிதி நெருக்கடி ஆரம்பமானது.

21ஆம் நூற்றாண்டு

  1. 2002

    உலகத்தை பலூனில் தனியே இடைவேளை விடாது பறந்த முதல் மனிதர் என்ற சாதனையை ஸ்டீவ் பொசெட் பெற்றார்.

  2. 2004

    ஆசியான் அமைப்பில் பாக்கித்தான் இணைந்தது.

  3. 2010

    காங்கோவில் எண்ணெய் நிரப்பிய பாரவுந்து ஒன்று வெடிதத்தில் 230 பேர் உயிரிழந்தனர்.

  4. 2013

    உலகளாவிய வானியல் ஒன்றியம் புளூட்டோவின் நான்காம், ஐந்தாம் சந்திரன்களுக்கு கெர்பரோசு, ஸ்டிக்சு எனப் பெயரிட்டது.

  5. 2013

    6.1 அளவு நிலநடுக்கம் இந்தோனேசியாவின் அச்சே பகுதியில் இடம்பெற்றதில் 42 பேர் உயிரிழந்தனர், 420 பேர் காயமடைந்தனர்.

  6. 2016

    பக்தாதில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 341 பேர் உயிரிழந்தனர்.

பிறப்புகள்

Births · 25

இறப்புகள்

Deaths · 15

இம்மாத நாட்கள் · சூலை

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சூலை 2 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.