Skip to content

Popular

July 27 திங்கள்

On this day · July 27

வரலாற்றில் சூலை 27

சூலை 27 அன்று நிகழ்ந்த 72 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 29 பிறப்புகள் · 25 இறப்புகள் · 17 சிறப்பு நாட்கள் · 1

சூலை 27 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 29

13ஆம் நூற்றாண்டு

  1. 1214

    பிரான்சில் இடம்பெற்ற போரில் பிரெஞ்சு மன்னர் இரண்டாம் பிலிப்பின் படைகள் இங்கிலாந்து மன்னர் ஜோனை வென்றன. ஜோனின் ஆஞ்சிவின் பேரரசு முடிவுக்கு வந்தது.

  2. 1299

    எட்வர்ட் கிப்பனின் ஆவணப்படி, உஸ்மான் பே பண்டைய கிரேக்க நகரமான நிக்கோமீடியாவை ஆக்கிரமித்தான். இதுவே உதுமானிய நாட்டின் தொடக்கம் என கூறப்படுகிறது.

14ஆம் நூற்றாண்டு

  1. 1302

    உதுமானியர் பாஃபியசு நகரில் இடம்பெற்ற சமரில் பைசாந்தியர்களை வென்றனர்.

16ஆம் நூற்றாண்டு

  1. 1549

    இயேசு சபை போதகர் பிரான்சிஸ் சவேரியாரின் கப்பல் யப்பானை அடைந்தது.

17ஆம் நூற்றாண்டு

  1. 1663

    அமெரிக்கக் குடியேற்ற நாடுகளுக்கு ஆங்கிலேயக் கப்பல்களிலேயே பொருட்கள் அனைத்தும் அனுப்பப்பட வேண்டும் என்ற சட்டமூலம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஒன்றிணைப்பின் பின்னர் இசுக்கொட்லாந்தும் இச்சட்டத்தில் சேர்க்கப்பட்டது.

18ஆம் நூற்றாண்டு

  1. 1794

    பிரெஞ்சுப் புரட்சி: புரட்சியின் எதிரிகளாகக் கருதப்பட்ட 17,000 பேரத் தூக்கிலிட ஆதரித்தமைக்காக மாக்சிமிலியன் ரோப்ஸ்பியர் கைது செய்யப்பட்டார்.

19ஆம் நூற்றாண்டு

  1. 1816

    நேக்ரோ கோட்டை (இன்றைய புளோரிடாவில்) சமரில் அமெரிக்கக் கடற்படை பீரங்கிக் குண்டு ஒன்றை ஏவியதில் 275 பேர் கொல்லப்பட்டனர். இதுவே அமெரிக்க வரலாற்றில் ஒரேயொரு பீரங்கி வெடிப்பில் அதிகளவு இழப்புகள் நேர்ந்த நிகழ்வாகும்.

  2. 1862

    சான் பிரான்சிஸ்கோ வில் இருந்து பனாமா நோக்கிச் சென்று கொண்டிருந்த "கோல்டன் கேட்" என்ற கப்பல் மெக்சிக்கோவில் தீப்பிடித்து மூழ்கியதில் 231 பேர் உயிரிழந்தனர்.

  3. 1880

    இரண்டாவது ஆங்கில-ஆப்கானியப் போர்: மாய்வாண்ட் என்ற இடத்தில் ஆப்கானியப் படைகள் முகம்மது அயூப் கான் தலைமையில் பிரித்தானியரை வென்றனர்.

  4. 1890

    இடச்சு ஓவியர் வின்சென்ட் வான் கோ தன்னைத்தானே சுட்டு, இரண்டு நாட்களின் பின்னர் இறந்தார்.

20ஆம் நூற்றாண்டு

  1. 1919

    சிகாகோவில் இடம்பெற்ற இனக்கலவரங்களில் 38 பேர் உயிரிழந்தனர், 537 பேர் காயமடைந்தனர்.

  2. 1921

    இயக்குநீர் இன்சுலின் இரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்துவதாக டொராண்டோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.

  3. 1929

    போர்க்கைதிகள் தொடர்பான ஜெனீவா உடன்பாட்டில் 53 நாடுகள் கையெழுத்திட்டன.

  4. 1942

    இரண்டாம் உலகப் போர்: கூட்டுப் படைகள் எகிப்தில் அச்சு நாடுகளின் இறுதி முன்னகர்வை வெற்றிகரமாகத் தடுத்தன.

  5. 1953

    கொரியப் போர் முடிவு: ஐக்கிய அமெரிக்கா, சீனா, மற்றும் வட கொரியா ஆகியவற்றுக்கிடையில் போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது. தென் கொரியா இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டாலும், உடன்பாட்டை மதிப்பதாக வாக்குறுதி தந்தது.

  6. 1955

    ஆஸ்திரியாவில் 1945 மே முதல் நிலை கொண்டிருந்த நட்பு நாடுகளின் படைகள் அங்கிருந்து விலகின.

  7. 1955

    இலண்டனில் இருந்து இசுதான்புல் சென்று கொண்டிருந்த 'எல் அல்' விமானம் பல்கேரியாவின் வான் பரப்பில் இரண்டு போர் விமானங்களால் சுட்டு வீழ்த்தப்பட்டதில், அனைத்து 58 பயணிகளும் உயிரிழந்தனர்.

  8. 1955

    மலேசியாவின் முதலாவது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினராக வீ. தி. சம்பந்தன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

  9. 1964

    வியட்நாம் போர்: அமெரிக்கா மேலும் 5,000 இராணுவ ஆலோசகர்களை தென் வியட்நாமிற்கு அனுப்பியது.

  10. 1975

    விடுதலைப்புலிகளின் முதலாவது ஆயுதத் தாக்குதல் நடத்தப்பட்டது. யாழ்ப்பாண மாநகர முதல்வர் அல்பிரட் துரையப்பா சுட்டுக் கொல்லப்பட்டார்.

  11. 1981

    மெக்சிக்கோவில் டிசி-9 ரக விமானம் ஒன்று தரையிறங்குகையில், ஓடுபாதையில் இருந்து விலகி விபத்துக்குள்ளானதில்னாதில் பயணம் செய்த 66 பேரில் 32 பேர் உயிரிழந்தனர்.

  12. 1983

    கறுப்பு யூலை: கொழும்பு வெலிக்கடை சிறையில் இடம்பெற்ற இரண்டாம் கட்ட படுகொலை நிகழ்வில் 18 தமிழ்க் கைதிகள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர்.

  13. 1989

    கொரிய விமானம் திரிப்பொலி விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஓடுபாதையில் மோதியதில் விமானத்தில் இருந்த 199 பேரில் 75 பேரும் தரையில் நால்வரும் உயிரிழந்தனர்.

  14. 1990

    பெலருஸ் சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலையை அறிவித்தது.

  15. 1990

    திரினிடாட் டொபாகோவில் இசுலாமியத் தீவிரவாதிகள் நடத்திய ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் பிரதமர் மற்றும் அமைச்சர்களை பணயக் கைதிகளாக ஆறு நாட்கள் வைத்திருந்தனர்.

  16. 1996

    அமெரிக்கா, அட்லான்டாவில் கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் போது குண்டு ஒன்று வெடித்தது.

  17. 1997

    அல்சீரியாவில் "சி செரூக்" என்ற இடத்தில் 50 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

21ஆம் நூற்றாண்டு

  1. 2002

    உக்ரைனின் லிவீவ் நகரில் வான் களியாட்ட நிகழ்ச்சியின் போது சுகோய் எஸ்.யு-27 போர் விமானம் மக்களின் மீது வீழ்ந்ததில் 85 பேர் உயிரிழந்தனர், 100 பேர் காயமடைந்தனர்.

  2. 2015

    இந்திய பஞ்சாப் பகுதியில் குருதாசுபூர் காவல் நிலையம் தாக்கப்பட்டதில் ஏழு பேர் உயிரிழந்தனர்.

பிறப்புகள்

Births · 25

இறப்புகள்

Deaths · 17

இம்மாத நாட்கள் · சூலை

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சூலை 27 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.