Skip to content

Popular

July 6 திங்கள்

On this day · July 6

வரலாற்றில் சூலை 6

சூலை 6 அன்று நிகழ்ந்த 72 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 30 பிறப்புகள் · 22 இறப்புகள் · 16 சிறப்பு நாட்கள் · 4

சூலை 6 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 30

11ஆம் நூற்றாண்டு

  1. 1044

    புனித ரோமப் பேரரசன் மூன்றாம் என்றி அங்கேரி மீது படையெடுத்தான்.

12ஆம் நூற்றாண்டு

  1. 1189

    முதலாம் ரிச்சார்டு இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான்.

14ஆம் நூற்றாண்டு

  1. 1348

    கறுப்புச் சாவுக்குக் காரணமான யூதர்களைப் பாதுகாப்பதற்கான ஆணை ஓலையையை திருத்தந்தை ஆறாம் கிளெமெண்டு வெளியிட்டார்.

15ஆம் நூற்றாண்டு

  1. 1411

    தனது மூன்றாவது செல்வம் தேடும் பயணத்தை முடித்துக் கொண்டு நாஞ்சிங் திரும்பிய மிங் சீனத் தளபதி செங் ஹே, தனது பயணத்தின் போது இலங்கையில் மிங்-கோட்டைப் போரில் கைது செய்த இலங்கை மன்னன் அழகக்கோனை யொங்கில் பேரரசரிடம் ஒப்படைத்தார்.

  2. 1483

    மூன்றாம் ரிச்சார்டு இங்கிலாந்தின் மன்னராக முடிசூடினார்.

  3. 1484

    போர்த்துக்கீச மாலுமி டியாகோ காவோ கொங்கோ ஆற்றின் வாயிலைக் கண்டார்.

16ஆம் நூற்றாண்டு

  1. 1535

    சேர் தாமஸ் மோர் நாட்டுத் துரோகத்துக்காக இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி மன்னரினால் தூக்கிலிடப்பட்டார்.

  2. 1557

    இங்கிலாந்தின் முதலாம் மேரியின் கணவர் எசுப்பானியாவின் இரண்டாம் பிலிப்பு மன்னர் பிரான்சுடன் போர் புரிவதற்காக டோவர் துறையில் இருந்து புறப்பட்டார். மேரி தனது கணவரைப் பின்னர் பார்க்கவில்லை.

17ஆம் நூற்றாண்டு

  1. 1630

    முப்பதாண்டுப் போர்: நான்காயிரம் சுவீடன் படைகள் குசுதாவசு அடால்பசு தலைமையில் செருமனியின் பொமிரானியா நகரை அடைந்தன.

19ஆம் நூற்றாண்டு

  1. 1854

    ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுக் கட்சியின் முதலாவது மாநாடு மிச்சிகனில் நடைபெற்றது.

  2. 1885

    பிரெஞ்சு வேதியியலாளர் லூயி பாஸ்ச்சர் தான் கண்டுபிடித்த தடுப்பூசி மருந்தை வெறிநாய்க்கடியினல் நோய் வாய்ப்பட்ட 9 வயது யோசப் மைசிட்டர் என்ற சிறுவனில் வெற்றிகரமாகச் சோதனை செய்தார்.

  3. 1892

    தாதாபாய் நௌரோஜி பிரித்தானிய நாடாளுமன்றத்தின் முதலாவது இந்தியப் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

20ஆம் நூற்றாண்டு

  1. 1917

    முதலாம் உலகப் போர்: அரபுக் கிளர்ச்சியின் போது அராபியப் படைகள் லாரன்சு தலைமையில் அக்காபாவை உதுமானியரிடம் இருந்து கைப்பற்றினர்.

  2. 1935

    சிங்கப்பூரின் தமிழ் நாளிதழ் தமிழ் முரசு ஆரம்பிக்கப்பட்டது.

  3. 1939

    நாட்சி ஜெர்மனியில் இருந்த கடைசி யூத தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன.

  4. 1941

    செருமானிய இராணுவம் சிமோலியென்சுக்கின் அருகில் சோவியத் இராணுவத்தினரை சிற்றி வளைத்தன.

  5. 1944

    அமெரிக்காவில் ஹார்ட்பர்ட் நகரில் கழைக்கூத்து அரங்கில் இடம்பெற்ற பெரும் தீயில் சிக்கிய 168 பேர் உயிரிழந்தனர், 700 பேர் வரை காயமடைந்தனர்..

  6. 1947

    சோவியத் ஒன்றியம் ஏகே-47 துப்பாக்கிகளைத் தயாரிக்க ஆரம்பித்தது.

  7. 1956

    சிங்களம் இலங்கையின் அதிகாரபூர்வ மொழியானது.

  8. 1962

    இலங்கைப் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவைக் கொலை செய்த குற்றத்திற்காக சோமாராம தேரர் என்ற பௌத்தத் துறவி தூக்கிலிடப்பட்டார்.

  9. 1964

    மலாவி ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

  10. 1966

    மலாவி குடியரசாகியது. ஹேஸ்டிங்ஸ் கமுசு பண்டா அதன் முதல் அரசுத்தலைவரானார்.

  11. 1967

    நைசீரிய உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.

  12. 1975

    கொமொரோசு பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

  13. 1988

    வட கடலில் எண்ணெய் அகழ்வு நிலையம் ஒன்றில் இடம்பெற்ற வெடிப்பில் 167 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

  14. 1989

    டெல் அவீவ்–எருசலேம் பேருந்து ஒன்றைக் கைப்பற்றிய பாலத்தீன இசுலாமிய ஜிகாத் உறுப்பினர் ஒருவர் அதனை குன்று ஒன்றின் மீது மோத வைத்ததில் 16 பேர் கொல்லப்பட்டனர்.

21ஆம் நூற்றாண்டு

  1. 2006

    44 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய சீனப் போரின் போது மூடப்பட்ட சிக்கிமையும் திபெத்தையும் இணைக்கும் நாதூ லா கணவாய் பாலம் மீண்டும் திறக்கப்பட்டது.

  2. 2013

    நைஜீரியாவில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 42 பேர் கொல்லப்பட்டனர்.

  3. 2013

    போயிங் 777 விமானம் சான் பிரான்சிஸ்கோ பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்தனர், 181 பேர் காயமடைந்தனர்.

  4. 2013

    கனடாவின் கியூபெக்கில் எண்ணெய்த் தொடருந்து ஒன்று தடம் புரண்டு வெடித்ததில் 47 பேர் உயிரிழந்தனர், நகரின் மத்திய பகுதியில் 30 கட்டடங்கள் சேதமடைந்தன.

பிறப்புகள்

Births · 22

இறப்புகள்

Deaths · 16

இம்மாத நாட்கள் · சூலை

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சூலை 6 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.