Skip to content

Popular

June 3 புதன்

On this day · June 3

வரலாற்றில் சூன் 3

சூன் 3 அன்று நிகழ்ந்த 70 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 35 பிறப்புகள் · 15 இறப்புகள் · 17 சிறப்பு நாட்கள் · 3

சூன் 3 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 35

4ஆம் நூற்றாண்டு

  1. 350

    நெப்போத்தியானுசு உரோமைப் பேரரசனாகத் தன்னை அறிவித்து, கிளாடியேட்டர்களுக்குத் தலைமை வகித்து உரோமை நகரை அடைந்தான்.

8ஆம் நூற்றாண்டு

  1. 713

    பைசாந்தியப் பேரரசர் பிலிப்பிக்கசு குருடாக்கப்பட்டு, நாடு கடத்தப்பட்டார். இரண்டாம் அனசுதாசியோசு பேரரசராக முடிசூடினார்.

12ஆம் நூற்றாண்டு

  1. 1140

    பிரெஞ்சுக் கல்வியாளர் பியேர் அபேலார்டு சமயமறுப்புக்காக குற்றவாளியாகக் காணப்பட்டார்.

14ஆம் நூற்றாண்டு

  1. 1326

    உருசியாவுக்கும் நார்வேக்கும் இடையில் எல்லையை வரையறுக்கும் நொவ்கோரத் உடன்பாடு எட்டப்பட்டது.

16ஆம் நூற்றாண்டு

  1. 1539

    எர்னாண்டோ டெ சோட்டோ புளோரிடாவை எசுப்பானியாவுக்காக உரிமை கோரினார்.

19ஆம் நூற்றாண்டு

  1. 1834

    இலங்கை, கொழும்பு நகரில் புறக்கோட்டை, கோட்டை பகுதிகளில் காணிகளை வாங்க தமிழருக்கும், சோனகருக்கும் அனுமதி வழங்கப்பட்டது.

  2. 1839

    சீனாவில் பிரித்தானிய வணிகர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 1.2 மில்லியன் கிகி அபினியை லின் சீசு அழித்தார். முதலாம் அபினிப் போர் ஆரம்பமானது.

  3. 1861

    அமெரிக்க உள்நாட்டுப் போர்: மேற்கு வர்ஜீனியாவில் பிலிப்பி நகரில் இடம்பெற்ற சமரில் அமெரிக்கக் கூட்டணியின் படைகள் கூட்டமைப்பின் படைகளைத் தோற்கடித்தன.

20ஆம் நூற்றாண்டு

  1. 1916

    ஐக்கிய அமெரிக்காவின் காவற்படையில் மேலும் 450,000 ஆண்களை சேவைக்கு அமர்த்த சட்டமூலம் கொண்டு வரப்பட்டது.

  2. 1940

    இரண்டாம் உலகப் போர்: செருமனியின் வான்படை பாரிசு நகரில் குண்டுகளை வீசின.

  3. 1940

    இரண்டாம் உலகப் போர்: பிரான்சின் டன்கிர்க் நகரில் இடம்பெற்ற போரில் செருமனியப் படைகள் வெற்றி பெற்றன. நட்பு அணி முழுமையாகப் பின்வாங்கியது.

  4. 1941

    இரண்டாம் உலகப் போர்: நாட்சி செருமன் படைகள் காண்டானசு என்ற கிரேக்கக் கிராமத்தை அடியோடு அழித்து, 180 கிராமத்தவரைப் படுகொலை செய்தனர்.

  5. 1950

    பிரான்சின் எர்சொக், லாச்சினால் ஆகியோர் 8,091 மீட்டர் உயரமான அன்னபூர்ணா 1 மலையின் உச்சியை அடைந்த முதலாவது மனிதர் என்ற சாதனையைப் படைத்தனர்.

  6. 1962

    ஏர் பிரான்சு போயிங் விமானம் பாரிசில் விபத்துக்குள்ளாகியதில் 130 பேர் உயிரிழந்தனர்.

  7. 1963

    தெற்கு வியட்நாமில் பௌத்தர்கள் நடத்திய போராட்டம் இராணுவத்தினரால் வேதித் தாக்குதல் நடத்தி முறியடிக்கப்பட்டது. 67 பேர் காயமடைந்தனர்.

  8. 1965

    நாசாவின் ஜெமினி 4 விண்கலம் ஏவப்பட்டது. எட்வேர்ட் வைட் 21 நிமிடங்கள் விண்ணில் நடந்து சாதனை படைத்தார். இவரே விண்ணில் நடந்த முதலாவது அமெரிக்கர் ஆவார்.

  9. 1969

    தெற்கு வியட்நாமில் மெல்பேர்ன் என்ற ஆத்திரேலியப் போர்க்கப்பல் ”எவான்ஸ்” என்ற அமெரிக்கப் போர்க்கப்பலுடன் மோதி அதை இரண்டாகப் பிளந்தது.

  10. 1973

    சோவியத் சூப்பர்சோனிக் டியூ-144 வானூர்தி பிரான்சில் விபத்துக்குள்ளாகி வீழ்ந்ததில் 14 பேர் உயிரிழந்தனர்.

  11. 1979

    தெற்கு மெக்சிகோ வளைகுடாவில் எண்ணெய்க் கிணறு ஒன்றில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டதில் 3,000,000 பீப்பாய்கள் கடலில் கலந்தது.

  12. 1980

    விடுதலைச் சிலை அருகே குண்டு ஒன்று வெடிக்கப்பட்டது. குரோவாசியா தேசியவாதிகள் இதனை வெடிக்க வைத்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டது.

  13. 1982

    ஐக்கிய இராச்சியத்துக்கான இசுரேலியத் தூதர் சுலோமோ அர்கோவ் இலண்டனில் சுட்டுக் காயப்படுத்தப்பட்டார்.

  14. 1984

    புளூஸ்டார் நடவடிக்கை: அம்ரித்சரில் சீக்கியர்களின் புனிதப் பொற்கோயிலுள் இந்திய இராணுவத்தினர் புகுந்தனர். சூன் 6 வரை இடம்பெற்ற இந்நடவடிக்கையில் 5,000 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

  15. 1989

    சீனாவில் தியனன்மென் சதுக்கத்தில் ஏழு வாரங்களாக இடம்பெற்று வந்த ஆர்ப்பாட்டங்களைக் கலைக்க அங்கு சீன இராணுவத்தினர் அனுப்பப்பட்டனர்.

  16. 1991

    சப்பானில் கியூசுவில் உன்சென் மலை வெடித்ததில் 43 பேர் உயிரிழந்தனர். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் ஆய்வாளர்களும் ஊடகவியலாளர்களும் ஆவார்.

  17. 1992

    ஆத்திரேலியாவில் எடி மாபோ தாக்கல் செய்த மாபோ எதிர் குயின்ஸ்லாந்து வழக்கின் தீர்ப்பின் படி, தொல்குடியினரின் நிலங்களின் உரிமையை அவர்களுக்கே திரும்ப வழங்கப்பட்டது.

  18. 1998

    செருமனியில் கடுகதி தொடருந்து ஒன்று பாதையை விட்டு விலகியதில் 101 பேர் கொல்லப்பட்டனர்.

21ஆம் நூற்றாண்டு

  1. 2006

    மொண்டெனேகுரோ செர்பியா-மொண்டெனேகுரோ கூட்டமைப்பில் இருந்து பிரிந்தது.

  2. 2007

    விசாரணைக்காகக் கைது செய்யப்பட்ட இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு தமிழ்ப் பணியாளர்கள் கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

  3. 2007

    தெற்கு சீனாவில் யுனான் பகுதியில் இடம்பெற்ற 6.4 அளவு நிலநடுக்கத்தில் பலர் கொல்லப்பட்டுப் பலத்த சேதம் ஏற்பட்டது.

  4. 2012

    லாகோஸ் நகரில் 153 பேரை ஏற்றிச் சென்ற விமானம் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைவரும், தரையில் 10 பேரும் உயிரிழந்தனர்.

  5. 2013

    அமெரிக்க இராணுவ வீரர் பிராட்லி மானிங் விக்கிலீக்ஸ் நிறுவனத்திற்கு இரகசியத் தகவல்களைக் கசிந்தமைக்காகக் குற்றம் சாட்டப்பட்டு இராணுவ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

  6. 2013

    வடகிழக்கு சீனாவில் சிலின் மாகாணத்தில் கோழிப் பண்ணை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 119 பேர் உயிரிழந்தனர்.

  7. 2015

    கானா, அக்ரா நகரில் பெட்ரோல் நிலையம் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பில் 200 பேர் உயிரிழந்தனர்.

  8. 2017

    இலண்டன் பாலத்தில் இசுலாமியத் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர். மூன்று தீவிரவாதிகள் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

  9. 2019

    சூடானில் கர்த்தூம் நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது அரசுப் படைகள் சுட்டதில் 100 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

Births · 15

இறப்புகள்

Deaths · 17

இம்மாத நாட்கள் · சூன்

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சூன் 3 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.