Skip to content

Popular

June 14 ஞாயிறு

On this day · June 14

வரலாற்றில் சூன் 14

சூன் 14 அன்று நிகழ்ந்த 73 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 38 பிறப்புகள் · 18 இறப்புகள் · 14 சிறப்பு நாட்கள் · 3

சூன் 14 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 38

12ஆம் நூற்றாண்டு

  1. 1158

    மியூனிக் நகரம் அமைக்கப்பட்டது.

13ஆம் நூற்றாண்டு

  1. 1216

    பிரான்சின் இளவரசர் லூயீ இங்கிலாந்தின் வின்செஸ்டர் நகரைக் கைப்பற்றினான். விரைவில் அவன் இங்கிலாந்தின் பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றினான்.

  2. 1276

    மங்கோலியர்களின் முற்றுகையை அடுத்து, சொங் சீனர்களில் எஞ்சியிருந்த அரச குடும்பத்தினர் பூச்சௌ நகரில் வைத்து துவான்சொங்கை பேரரசராக்கினர்.

  3. 1287

    மங்கோலியப் பேரரசர் குப்லாய் கான் நாயன் படைகளையும் கிழக்கு மங்கோலியா, மஞ்சூரியா வின் சம்பிரதாயப் பற்றுடைய போர்சிசின் இளவரசர்களையும் தோற்கடித்தான்.

14ஆம் நூற்றாண்டு

  1. 1381

    இங்கிலாந்தின் இரண்டாம் ரிச்சார்டு மன்னர் உழவர் கிளர்ச்சித் தலைவர்களை சந்தித்தார். இலண்டன் கோபுரத்தை கிளர்ச்சியாளர்கள் முற்றுகையிட்டனர்.

15ஆம் நூற்றாண்டு

  1. 1404

    வேல்சின் கிளர்ச்சித் தலைவர் ஒவெயின் கிளிந்துவர் தன்னை வேல்சு இளவரசராக அறிவித்து, இங்கிலாந்து மன்னர் நான்காம் என்றிக்கு எதிராக பிரான்சுடன் இனைந்தார்.

17ஆம் நூற்றாண்டு

  1. 1618

    இடச்சின் முதலாவது செய்திப் பத்திரிகை ஆம்சுடர்டாமில் வெளியிடப்பட்டது.

  2. 1645

    இங்கிலாந்து உள்நாட்டுப் போர்: நேசுபி சமரில் 12,000 அரசுப் படைகள் நாடாளுமன்றப் படையினரால் தோற்கடிக்கப்பட்டனர்.

  3. 1667

    இரண்டாவது ஆங்கிலேய-இடச்சுப் போர்: இடச்சுக் கடற்படை மெட்வே முற்றுகை முடிவுக்கு வந்தது. ஐந்து நாட்கள் நடந்த இச்சமரில் அரச கடற்படை பெரும் தோல்வியைக் கண்டது.

  4. 1690

    இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம் மன்னர் முன்னாள் மன்னர் இரண்டாம் யேம்சுடன் சமரில் ஈடுபட அயர்லாந்து வந்தார்.

18ஆம் நூற்றாண்டு

  1. 1775

    அமெரிக்கப் புரட்சிப் போர்: அமெரிக்க விடுதலைப் படை அமைக்கப்பட்டது.

  2. 1789

    பவுண்டி என்ற பிரித்தானியக் கப்பலின் மாலுமிகளின் கிளர்ச்சியை அடுத்து கப்பலின் தலைவனுடன் சேர்ந்து சிறிய படகொன்றில் தப்பிய 19 பேர் 7,400 கி.மீ. தூரம் பயணித்து திமோரை அடைந்தனர்.

  3. 1800

    நெப்போலியனின் பிரெஞ்சு இராணுவத்தினர் வடக்கு இத்தாலியில் ஆஸ்திரியர்களுடன் போரிட்டு வெற்றி பெற்று இத்தாலியை மீளவும் கைப்பற்றியது.

19ஆம் நூற்றாண்டு

  1. 1807

    நெப்போலியனின் பிரெஞ்சுப் படைகள் உருசிய இராணுவத்தை போலந்து பிரீத்லாந்து சமரில் (இன்றைய உருசிய கலினின்கிராது) தோற்கடித்தன.

  2. 1822

    சார்ல்ஸ் பாபேஜ் வித்தியாசப் பொறியொன்றுக்கான திட்டத்தை அரச வானியல் கழகத்தில் சமர்ப்பித்தார்.

  3. 1830

    அல்ஜீரியாவில் பிரெஞ்சுக் குடியேற்றம் ஆரம்பமானது. 34,000 பிரெஞ்சுப் படையினர் அல்ஜியர்ஸ் நகரை அடைந்தனர்.

  4. 1846

    கலிபோர்னியாவின் சொனோமா என்ற இடத்தில் குடியேறிய ஆங்கிலேயர்கள் மெக்சிக்கோ மீது போரை ஆரம்பித்து கலிபோர்னியாக் குடியரசை அறிவித்தனர்.

  5. 1872

    கனடாவில் தொழிற் சங்கங்கள் சட்டபூர்வமாக்கப்பட்டன.

  6. 1888

    வெள்ளை இராசா பிராந்தியங்கள் சரவாக் இராச்சியம் என்ற பெயரில் பிரித்தானியக் காப்புநாடாயின.

  7. 1900

    அவாய் ஐக்கிய அமெரிக்காவுடன் இணைக்கப்பட்டது.

20ஆம் நூற்றாண்டு

  1. 1907

    நோர்வே பெண்களுக்கு வாக்குரிமை அளித்தது.

  2. 1926

    பிரேசில் உலக நாடுகள் அமைப்பில் இருந்து விலகியது.

  3. 1940

    இரண்டாம் உலகப் போர்: பாரிசை செருமனி கைப்பற்றியது.

  4. 1940

    728 போலந்துப் போர்க் கைதிகள் நாட்சிகளின் அவுசுவித்சு வதைமுகாமின் முதலாவது சிறைக்கைதிகளாக சேர்க்கப்பட்டனர்.

  5. 1941

    அனைத்து செருமனிய, இத்தாலிய சொத்துக்களையும் ஐக்கிய அமெரிக்கா முடக்கியது.

  6. 1941

    எஸ்தோனியர்கள், லாத்வியர்கள் மற்றும் லித்துவேனிய மக்கள் பலரை சோவியத் ஒன்றியத்தில் அவர்கள் பகுதிகளை விட்டு வெளியேற்றி வதைமுகாம்களுக்கு அனுப்பியது.

  7. 1944

    இரண்டாம் உலகப் போர்: செருமனியினால் கைப்பற்றப்பட்ட கன் நகரைக் கைப்பற்றும் முயற்சியில் பல முறை தோல்வியடைந்ததை அடுத்து பிரித்தானிய இராணுவம் பெர்ச் நடவடிக்கையைக் கைவிட்டது.

  8. 1946

    மலாயாவில் இருந்து இரண்டாவது தொகுதி தமிழர் இலங்கை வந்து சேர்ந்தனர்.

  9. 1949

    இரண்டாம் அல்பேர்ட் என்ற ஒரு செம்முகக் குரங்கு வி-2 ஏவுகணை ஒன்றில் 134 கி.மீ. (83 மைல்) உயரத்திற்கு சென்று, விண்வெளிக்கு சென்ற முதலாவது குரங்கு என்ற பெயரைப் பெற்றது. இது விண்வெளியிலேயே உயிரிழந்தது.

  10. 1959

    கியூபாவில் இருந்து புறப்பட்ட ஒரு தொகை டொமினிக்கன் நாட்டவர்கள் ரபாயெல் துரூகிலோவின் தலைமையிலான எதேச்சாதிகார அரசைக் கவிழ்க்கும் பொருட்டு டொமினிக்கன் குடியரசுக்கு வந்து சேர்ந்தனர். இவர்களில் நால்வரைத் தவிர எஞ்சிய அனைவரும் பெரும்பாலானோர் அங்கு கொல்லப்பட்டனர்.

  11. 1962

    ஐரோப்பிய வான் ஆராய்ச்சி மையம் பாரிசில் அமைக்கப்பட்டது.

  12. 1967

    மரைனர் 5 விண்கலம் வீனஸ் கோளை நோக்கி ஏவப்பட்டது.

  13. 1982

    போக்லாந்து போர்: போக்லாந்து தீவுகளின் தலைநகர் ஸ்டான்லியில் நிலைகொண்டிருந்த அர்கெந்தீனப் படைகள் பிரித்தானியப் படைகளிடம் சரணடைந்தன.

  14. 1999

    தென்னாபிரிக்காவின் அதிபராக தாபோ உம்பெக்கி பதவியேற்றார்.

21ஆம் நூற்றாண்டு

  1. 2002

    புவியருகு விண்பொருள் "2002 எம்என்" 75,000 கி.மீ. தூரத்தில் புவியைக் கடந்து சென்றது.

  2. 2003

    விடுதலைப் புலிகளின் சரக்குக் கப்பல் ஒன்று இலங்கைக் கடற்படையினரால் தாக்கி அழிக்கப்பட்டதில் 11 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.

  3. 2014

    உக்ரைனின் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதில் அதில் பயணம் செய்த அனைத்து 49 பேரும் கொல்லப்பட்டனர்.

  4. 2017

    இலண்டனில் வடக்கு கென்சிங்டன் பகுதியில் உயரமான குடியிருப்பு மனைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் 72 பேர் உயிரிழந்தனர், 74 பேர் காயமடைந்தனர்.

பிறப்புகள்

Births · 18

இறப்புகள்

Deaths · 14

இம்மாத நாட்கள் · சூன்

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சூன் 14 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.