Skip to content

Popular

June 9 செவ்வாய்

On this day · June 9

வரலாற்றில் சூன் 9

சூன் 9 அன்று நிகழ்ந்த 66 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 29 பிறப்புகள் · 21 இறப்புகள் · 14 சிறப்பு நாட்கள் · 2

சூன் 9 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 29

கிமு (பொ.ஊ.மு)

  1. கிமு 411

    பண்டைய கிரேக்கத்தில் ஏத்தேனியரின் இராணுவப் புரட்சி வெற்றியளித்தது, சிலவர் ஆட்சி அங்கு நிறுவப்பட்டது.

  2. கிமு 53

    உரோமைப் பேரரசர் நீரோ குளோடியா ஒக்டாவியாவைத் திருமணம் புரிந்தான்.

1ஆம் நூற்றாண்டு

  1. 68

    உரோமைப் பேரரசன் நீரோ தற்கொலை செய்து கொண்டான். ஜூலியோ குளாடிய மரபு முடிவுக்கு வந்து, நான்கு பேரரசர்களின் ஆண்டு என அழைக்கப்பட்ட உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.

8ஆம் நூற்றாண்டு

  1. 747

    அப்பாசியரின் புரட்சி: அபூ முசுலிம் கொரசானி உமையாதுகளுக்கு எதிராகக் கிளர்ச்சியை ஆரம்பித்தான்.

16ஆம் நூற்றாண்டு

  1. 1534

    இழ்சாக் கார்ட்டியே செயின்ட் இலாரன்சு ஆற்றின் வரைபடத்தை வரைந்தார்.

17ஆம் நூற்றாண்டு

  1. 1667

    இரண்டாவது ஆங்கிலேய-இடச்சுப் போர்: மெட்வே மீதான இடச்சுக் கடற்படையின் தாக்குதல் ஆரம்பமானது. அரச கடற்படை வரலாறு காணாத தோல்வி கண்டது.

18ஆம் நூற்றாண்டு

  1. 1762

    பிரித்தானியப் படைகள் அவானா மீதான தாக்குதலை ஆரம்பித்தது. ஏழாண்டுப் போர்க் காலத்தில் நகரைக் கைப்பற்றியது.

  2. 1772

    பிரித்தானியப் பாய்க்கப்பல் காசுப்பீ உரோட் தீவில் தீக்கிரையானது.

19ஆம் நூற்றாண்டு

  1. 1815

    வியன்னா மாநாடு முடிவடைந்தது. புதிய ஐரோப்பிய அரசியல் நிலப்படம் மாற்றமடைந்தது.

  2. 1815

    லக்சம்பர்க் பிரெஞ்சுப் பேரரசிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

  3. 1885

    சீன-பிரெஞ்சுப் போரை முடிவுக்குக் கொண்டுவர தியென்ட்சின் உடன்பாடு எட்டப்பட்டது. சிங் சீனா தொங்கின், அன்னாம் ஆகிய மாகாணங்களை (இன்றைய வியட்நாமில்) பிரான்சுக்குக் கொடுத்தது.

  4. 1900

    இந்தியத் தேசியவாதி பிர்சா முண்டா பிரித்தானிய சிறையில் வாந்திபேதியினால் இறந்தார்.

20ஆம் நூற்றாண்டு

  1. 1903

    அநுராதபுரத்தில் இடம்பெற்ற கலவரத்தில் கத்தோலிக்க ஆலயம் ஒன்று பௌத்தர்களினால் சேதமாக்கப்பட்டு மதகுரு தாக்கப்பட்டார். 40 பேர் கைது செய்யப்பட்டனர்.

  2. 1923

    பல்கேரியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.

  3. 1928

    ஆத்திரேலியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் முதற்தடவையாக சார்லசு கிங்சுபோர்ட் சிமித் வானூர்தியில் கடந்தார்.

  4. 1935

    வடமேற்கு சீனாவில் சப்பானியரின் ஆக்கிரமிப்பை சீனக் குடியரசு அங்கீகரித்தது.

  5. 1936

    யாழ்ப்பாண நகரசபைக் கட்டடத்தை இலங்கை மகாதேசாதிபதி சேர் ரெஜினால்ட் எட்வர்ட் ஸ்ரப்சு திறந்து வைத்தார்.

  6. 1944

    இரண்டாம் உலகப் போர்: பிரான்சில் தூலி என்ற இடத்தில் 99 பொது மக்கள் செருமனியப் படையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.

  7. 1944

    இரண்டாம் உலகப் போர்: பின்லாந்து 1941 முதல் கைப்பற்றி வைத்திருந்த கரேலியா பகுதியினுள் சோவியத் ஒன்றியம் ஊடுருவியது.

  8. 1946

    பூமிபால் அதுல்யாதெச்சு தாய்லாந்தின் மன்னராக முடி சூடினார்.

  9. 1953

    அமெரிக்காவின் மாசச்சூசெட்ஸ் மாநிலத்தை சூறாவளி தாக்கியதில் 94 பேர் உயிரிழந்தனர்.

  10. 1959

    முதலாவது அணுக்கரு ஆற்றல் ஏவுகணை நீர்மூழ்கி ஜார்ஜ் வாசிங்டன் வெள்ளோட்டம் விடப்பட்டது.

  11. 1962

    தங்கனீக்கா குடியரசாகியது.

  12. 1967

    ஆறு நாள் போர்: இசுரேல் சிரியாவிடம் இருந்து கோலோன் குன்றுகளைக் கைப்பற்றியது.

  13. 1972

    அமெரிக்காவின் தெற்கு டகோட்டாவில் பெரும் மழை காரணமாக அணை ஒன்று உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் 238 பேர் உயிரிழந்தனர்.

  14. 1979

    சிட்னியில் லூனா பூங்காவில் சிறிய தொடருந்து ஒன்று தீப்பற்றியதில் ஏழு பேர் உயிரிழந்தனர்.

  15. 1999

    கொசோவோ போர்: செர்பியா-மொண்டெனேகுரோ நேட்டோவுடன் அமைதி உடன்பாட்டில் கையெழுத்திட்டது.

21ஆம் நூற்றாண்டு

  1. 2009

    பாக்கித்தான், பெசாவரில் உணவு விடுதி ஒன்றில் குண்டு வெடித்ததில் 17 பேர் கொல்லப்பட்டனர்.

  2. 2010

    ஆப்கானித்தான், காந்தகாரில் திருமண வீடொன்றில் சிறுவன் ஒருவன் தற்கொலைத் தாக்குதல் நடத்தியதில் 40 பேர் கொல்லப்பட்டனர், 70 பேர் காயமடைந்தனர்.

பிறப்புகள்

Births · 21

இறப்புகள்

Deaths · 14

இம்மாத நாட்கள் · சூன்

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சூன் 9 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.