Skip to content

Popular

June 8 திங்கள்

On this day · June 8

வரலாற்றில் சூன் 8

சூன் 8 அன்று நிகழ்ந்த 54 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 28 பிறப்புகள் · 12 இறப்புகள் · 12 சிறப்பு நாட்கள் · 2

சூன் 8 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 28

5ஆம் நூற்றாண்டு

  1. 452

    அண் பேரரசர் அட்டிலா இத்தாலியை முற்றுகையிட்டுப் பிடித்தார்.

7ஆம் நூற்றாண்டு

  1. 632

    இசுலாமிய இறைவாக்கினர் முகம்மது நபி மதீனாவில் இறந்தார்.

11ஆம் நூற்றாண்டு

  1. 1042

    எட்வர்டு இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினார்.

15ஆம் நூற்றாண்டு

  1. 1405

    யார்க் ஆயர் ரிச்சார்ட் ஸ்க்ரோப், நோர்போக் இரண்டாம் நிலை மன்னர் தொமஸ் மோபிறே ஆகியோர் இங்கிலாந்தின் நான்காம் என்றி மன்னரின் ஆணையின் பேரில் தூக்கிலிடப்பட்டனர்.

18ஆம் நூற்றாண்டு

  1. 1783

    ஐசுலாந்தில் லாக்கி எரிமலை வெடிக்க ஆரம்பித்ததில் எட்டு மாதங்களில் வறட்சி, மற்றும் வறுமை காரணமாக 9,000 பேர் வரையில் உயிரிழந்தனர். அடுத்த ஏழாண்டுகள் அங்கு பஞ்சம் நிலவியது.

19ஆம் நூற்றாண்டு

  1. 1856

    194 பிட்கன் தீவினரைக் கொண்ட ஒரு குழு நோர்போக் தீவை அடைந்து அத்தீல் மூன்றாவது குடியிருப்பை ஆரம்பித்தனர்.

  2. 1861

    அமெரிக்க உள்நாட்டுப் போர்: டென்னிசி அமெரிக்கக் கூட்டில் இருந்து விலகியது.

  3. 1867

    பிரான்சு யோசப் அங்கேரியின் மன்னராக முடிசூடினார்.

  4. 1887

    ஏர்மன் ஒலரித் துளையிடும் அட்டைக் கணிப்பானுக்கான காப்புரிமம் பெற்றார்.

20ஆம் நூற்றாண்டு

  1. 1928

    தேசியப் புரட்சி இராணுவத்தினர் பீக்கிங் நகரைக் கைப்பற்றி, அதன் பெயரை பெய்ஜிங் ("வடக்குத் தலைநகர்") என மாற்றினர்.

  2. 1940

    இரண்டாம் உலகப் போர்: ஆல்ஃபபெட் நடவடிக்கை நிறைவடைந்தது. நார்வே போர்த்தொடரின் இறுதியில் நேசப்படையினர் நார்விக்கில் இருந்து விலகினர்.

  3. 1941

    இரண்டாம் உலகப் போர்: நேச நாடுகள் சிரியா, மற்றும் லெபனான் மீது தாக்குதலை ஆரம்பித்தன.

  4. 1942

    இரண்டாம் உலகப் போர்: சப்பானிய நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆத்திரேலியாவின் சிட்னி, நியூகாசில் நகரங்கள் மீது குண்டுத்தாக்குதலை நடத்தின.

  5. 1949

    எழுத்தாளர் எலன் கெல்லர் உட்பட ஏழு பேரை கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினர்களாக எஃப்பிஐ அறிக்கை தெரிவித்தது.

  6. 1953

    மிச்சிகனை சூறாவளி தாக்கியதில் 116 பேர் உயிரிழந்தனர், 340 வீடுகள் சேதமடைந்தன.

  7. 1953

    வாசிங்டன் உணவகங்களில் கறுப்பினத்தவர்களையும் அனுமதிக்க வேண்டும் என ஐக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

  8. 1966

    இரண்டு போர் வானூர்திகள் தெற்கு கலிபோர்னியாவில் மோதிக் கொண்டதில் நாசா விமானி ஒருவரும், வான்படை விமானி ஒருவரும் உயிரிழந்தனர்.

  9. 1967

    ஆறு நாள் போர்: அமெரிக்காவின் லிபர்ட்டி என்ற ஆய்வுக் கப்பல் இசுரேலின் வான்படையினரால் குண்டு வீசித் தகர்க்கப்பட்டதில் 34 பேர் கொல்லப்பட்டனர், 171 பேர் காயமடைந்தனர்.

  10. 1972

    வியட்நாம் போர்: ஒன்பது வயது சிறுமி நேப்பாம் குண்டு வீசப்பட்டதில் காயமடைந்தது வீதி வழியே ஓடி வருவதை அசோசியேட்டட் பிரெசு செய்தியாளர் படம் பிடித்தார். இப்படத்திற்கு பின்னர் புலிட்சர் பரிசு வழங்கப்பட்டது.

  11. 1982

    போக்லாந்து போர்: 56 பிரித்தானியப் படையினர் அர்ஜெந்தீன வான் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

  12. 1984

    ஆத்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் தற்பால்சேர்க்கை சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டது.

  13. 1992

    முதலாவது உலகப் பெருங்கடல்கள் நாள் கொண்டாடப்பட்டது.

  14. 1995

    படிவ நிரலாக்க மொழி பி.எச்.பி வெளியிடப்பட்டது.

21ஆம் நூற்றாண்டு

  1. 2004

    1882 ஆம் ஆண்டிற்குப் பின்னர் முதற்தடவையாக வெள்ளிக் கோளின் சூரியக்கடப்பு அவதானிக்கப்பட்டது.

  2. 2007

    இலங்கையில் புத்தளத்தில் 9 உடல்கள் மிகவும் சிதைந்த நிலையில் காவற்துறையினரால் மீட்கப்பட்டன.

  3. 2007

    ஆத்திரேலியாவில் நியூகாசில் நகரில் இடம்பெற்ற பெரும் காற்று, மற்றும் வெள்ளத்தினால் 9 பேர் உயிரிழந்தனர். வணிகக் கப்பல் ஒன்று கடலில் மூழ்கியது.

  4. 2008

    உக்ரைனில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பில் 37 தொழிலாளர்கள் காணாமல் போயினர்.

  5. 2014

    பாக்கித்தான் கராச்சியில் ஜின்னா பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

Births · 12

இறப்புகள்

Deaths · 12

இம்மாத நாட்கள் · சூன்

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சூன் 8 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.