Skip to content

Popular

June 1 திங்கள்

On this day · June 1

வரலாற்றில் சூன் 1

சூன் 1 அன்று நிகழ்ந்த 74 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 40 பிறப்புகள் · 15 இறப்புகள் · 14 சிறப்பு நாட்கள் · 5

சூன் 1 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 40

13ஆம் நூற்றாண்டு

  1. 1215

    மொங்கோலியப் பேரரசர் செங்கிஸ் கான் பெய்ஜிங் நகரை சுவான்சோங்கிடம் இருந்து கைப்பாற்றினார்.

16ஆம் நூற்றாண்டு

  1. 1533

    ஆன் பொலின் இங்கிலாந்தின் அரசியாக முடி சூடினார்.

  2. 1535

    புனித உரோமைப் பேரரசர் ஐந்தாம் சார்லசின் படைகள் துனிசுவில் உதுமானியரைத் தாக்கி அதனைக் கைப்பற்றினர்.

17ஆம் நூற்றாண்டு

  1. 1649

    பிலிப்பீன்சு, வடக்கு சமரில் எசுப்பானியக் குடியேற்ற அதிகாரிகளுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சியை ஆரம்பித்தனர்.

  2. 1660

    மேரி டயர் மாசச்சுசெட்சில் குவேக்கர்களைத் தடை செய்யும் சட்டத்தை மீறியமைக்காக தூக்கிலிடப்பட்டார்.

  3. 1670

    இங்கிலாந்தின் டோவர் நகரில், இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு, பிரான்சின் பதினான்காம் லூயி ஆகியோருக்கு இடையில் இரகசிய உடன்பாடு எட்டப்பட்டது. மூன்றாவது ஆங்கிலேய-இடச்சுப் போர் ஆரம்பமானது.

18ஆம் நூற்றாண்டு

  1. 1779

    அமெரிக்கப் புரட்சிப் போரின் போது அமெரிக்க விடுதலைப் படையின் தளபதியாக இருந்த பெனடிக்ட் ஆர்னோல்டு மீது சட்டமுரணாக நடந்துகொண்டமைக்காக இராணுவ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

  2. 1792

    கென்டக்கி ஐக்கிய அமெரிக்காவின் 15வது மாநிலமாக இணைந்தது.

  3. 1794

    பிரெஞ்சுப் புரட்சிப் போர்களில் பிரித்தானிய, பிரெஞ்சுக் கடற்படைகளுக்கிடையே முதலாவது சமர் இடம்பெற்றது.

  4. 1796

    டென்னசி ஐக்கிய அமெரிக்காவின் 16வது மாநிலமாக இணைந்தது.

19ஆம் நூற்றாண்டு

  1. 1812

    பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: அமெரிக்க அரசுத்தலைவர் ஜேம்ஸ் மாடிசன் ஐக்கிய இராச்சியம் மீது போரை அறிவிக்கும்படி காங்கிரசைக் கேட்டுக்கொண்டார்.

  2. 1831

    யேம்சு கிளார்க் ரொஸ் முதலாவது ஐரோப்பியராக வட காந்தமுனையை அடைந்தார்.

  3. 1855

    அமெரிக்க நாடுகாண் பயணி வில்லியம் வோக்கர் நிக்கராகுவாவைக் கைப்பற்றினார்.

  4. 1879

    கடைசி பொனபார்ட் மரபுரிமைக்குரிய நெப்போலியன் இயூஜின் ஆங்கிலோ-சூலு போரில் கொல்லப்பட்டார்.

20ஆம் நூற்றாண்டு

  1. 1913

    கிரேக்க–செர்பிய உடன்பாடு எட்டப்பட்டது. இரண்டாவது பால்க்கன் போர் ஆரம்பமானது.

  2. 1929

    இலத்தீன் அமெரிக்காவின் பொதுவுடமைக் கட்சிகளின் 1-வது மாநாடு புவெனஸ் ஐரிஸ் நகரில் இடம்பெற்றது.

  3. 1941

    இரண்டாம் உலகப் போர்: கிரீட் சண்டை முடிவுக்கு வந்தது. கிரீட் செருமனியின் கட்டுப்பாட்டில் வந்தது.

  4. 1941

    ஈராக், பக்தாத்தில் யூதர்களுக்கெதிராக இடம்பெற்ற கலவரங்களில் 180 யூதர்கள் கொல்லப்பட்டனர்.

  5. 1943

    இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய விமானம் பிஸ்கே விரிகுடாவில் செருமனியால் சுட்டு வீழ்த்தப்பட்டதில் பிரித்தானிய நடிகர் லெசுலி அவார்டு உட்பட 17 பேர் உயிரிழந்தனர்.

  6. 1946

    இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் உருமேனியாவின் பிரதமராக இருந்த இயன் அந்தனேஸ்கு தூக்கிலிடப்பட்டார்.

  7. 1946

    இலங்கையில் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் முதல் தடவையாக இரத்மலானை வானூர்தி நிலையம் பொது மக்களின் பயன்பாட்டிற்குத் திறக்கப்பட்டது.

  8. 1947

    சுதந்திரன் இதழ் கொழும்பில் இருந்து வெளியாக ஆரம்பித்தது.

  9. 1958

    இலங்கை இனக்கலவரம், 1958: கலவரங்களில் பாதிக்கப்பட்ட 4,397 தமிழ் அகதிகள் கப்பல் மூலம் காங்கேசன்துறைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

  10. 1959

    நிக்கராகுவாவில் புரட்சி ஆரம்பமானது.

  11. 1962

    நாட்சி வதைமுகாம்களை உருவாக்கிய அடோல்வ் ஏச்மென் இசுரேலில் தூக்கிலிடப்பட்டார்.

  12. 1964

    கென்யா குடியரசானது.

  13. 1964

    சிறேதொகோ தேசிய வனம் சப்பானில் அமைக்கப்பட்டது.

  14. 1971

    தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.

  15. 1978

    டோக்கியோ பங்குச் சந்தையின் நடவடிக்கைகள் ஆரம்பமாகின.

  16. 1979

    90 ஆண்டுகளுக்குப் பின்னர் ரொடீசியாவில் முதற்தடவையாக கறுப்பினத்தவர்களின் அரசு பதவியேற்றது.

  17. 1981

    தெற்காசியாவில் சிறந்த நூலகமாக விளங்கிய யாழ் பொது நூலகம் சிங்களக் காவல் துறையினரால் எரிக்கப்பட்டதில் பல்லாயிரக்கணக்கான பெறுமதி மிக்க நூல்கள் அழிந்தன.

  18. 1988

    ஐரோப்பிய நடுவண் வங்கி பிரசெல்சு நகரில் ஆரம்பிக்கப்பட்டது.

  19. 1990

    பனிப்போர்: ஜார்ஜ் புஷ், மிக்கைல் கொர்பச்சோவ் ஆகியோர் வேதி ஆயுதங்கள் தயாரிப்பை நிறுத்தும் உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.

  20. 1993

    சாரயேவோவில் தொப்ரிஞ்சா ந்கரில் காற்பந்தாட்டப் போட்டி ஒன்றின் மீது மோட்டார் தாக்குதல் நடத்தப்பட்டதில் 13 பேர் கொல்லப்பட்டனர், 133 பேர் காயமடைந்தனர்.

  21. 1999

    அமெரிக்கன் எயர்லைன்சு 1420 விமானம் டாலசில் இருந்து லிட்டில் ராக் செல்கையில் விபத்துக்குள்ளாகியதில் 11 பேர் உயிரிழந்தனர்.

21ஆம் நூற்றாண்டு

  1. 2001

    டெல் அவீவ் நகரில் இரவு விடுதி ஒன்றில் அமாசுப் போராளிகள் தற்கொலைத் தாக்குதல் நடத்தியதில் 21 பேர் கொல்லப்பட்டனர்.

  2. 2001

    நேபாள அரசுப் படுகொலைகள்: நேபாளத்தின் முடிக்குரிய இளவரசர் திபெந்திரா தனது தந்தை மன்னர் பிரேந்திரா, தாயார் ஐசுவர்யா உட்பட குடும்பத்தினர் ஏழு பேரை சுட்டுக் கொன்றார்.

  3. 2009

    இரியோ டி செனீரோவில் இருந்து பாரிசு சென்று கொண்டிருந்த ஏர் பிரான்சு ஏஎப் 447 விமானம் பிரேசில் கரைக்கப்பால் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 228 பேரும் உயிரிழந்தனர்.

  4. 2011

    25 பறப்புகளை மேற்கொண்ட எண்டெவர் விண்ணோடம் தனது கடைசிப் பறப்பை முடித்து பூமியில் தரையிறங்கியது.

  5. 2015

    சீனாவின் ஊபேய் மாகாணத்தில் யாங்சி ஆற்றில் 458 பேருடன் சென்ற பயணிகள் கப்பல் ஒன்று மூழ்கியதில் 400 பேர் உயிரிழந்தனர்.

பிறப்புகள்

Births · 15

இறப்புகள்

Deaths · 14

இம்மாத நாட்கள் · சூன்

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சூன் 1 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.