Skip to content

Popular

June 17 புதன்

On this day · June 17

வரலாற்றில் சூன் 17

சூன் 17 அன்று நிகழ்ந்த 61 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 31 பிறப்புகள் · 15 இறப்புகள் · 11 சிறப்பு நாட்கள் · 4

சூன் 17 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 31

7ஆம் நூற்றாண்டு

  1. 653

    திருத்தந்தை முதலாம் மார்ட்டின் கைது செய்யப்பட்டு தேசத்துரோகக் குற்றச்சாட்டுடன் கான்ஸ்டண்டினோபில் கொண்டு செல்லப்பட்டார்.

13ஆம் நூற்றாண்டு

  1. 1244

    பாரிசில் பெருந்தொகையான யூத சமய கையெழுத்துப்படிகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.

14ஆம் நூற்றாண்டு

  1. 1397

    டென்மார்க், சுவீடன், நோர்வே இணைந்த கல்மார் ஒன்றியம் டென்மார்க்கின் முதலாம் மார்கரெட்டின் ஆட்சியில் உருவாக்கப்பட்டது.

16ஆம் நூற்றாண்டு

  1. 1579

    சர் பிரான்சிஸ் டிரேக் நோவா அல்பியனில் (இன்றைய கலிபோர்னியா) தரையிறங்கி அதனை இங்கிலாந்துக்காக உரிமை கோரினார்.

  2. 1596

    இடச்சு நாடுகாண் பயணி வில்லியம் பாரென்ட்சு ஆர்க்டிக் தீவுக்கூட்டமான ஸ்பிட்சுபெர்கனைக் கண்டுபிடித்தார்.

17ஆம் நூற்றாண்டு

  1. 1631

    மும்தாசு மகால் பிள்ளைப்பேற்றின் போது இறந்தார். அவரது கணவர் முகலாயப் பேரரசர் ஷாஜகான் அடுத்த 17 ஆண்டுகளுக்கு மும்தாசுக்கான நினைவுச்சின்னமான தாஜ்மகாலைக் கட்டுவதில் முனைந்தார்.

18ஆம் நூற்றாண்டு

  1. 1767

    ஆங்கிலேயக் கப்பல் தலைவர் சாமுவேல் வாலிசு தாகித்தியைக் கண்டறிந்தார்.

  2. 1794

    ஆங்கிலோ-கோர்சிக்கன் இராச்சியம் அமைக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளில் இது கலைந்தது.

19ஆம் நூற்றாண்டு

  1. 1839

    அவாய் இராச்சியத்தில், ரோமன் கத்தோலிக்கர்கள் சுதந்திரமாக சமய வழிபாட்டில் ஈடுபட அனுமதிக்கப்பட்டனர்.

  2. 1843

    நியூசிலாந்தில் மாவோரி பழங்குடியினருக்கும், பிரித்தானியக் குடியேறிகளுக்கும் இடையில் சமர்கள் இடம்பெற்றன.

  3. 1885

    விடுதலைச் சிலை நியூயார்க் துறைமுகத்தை வந்தடைந்தது.

  4. 1900

    மேற்கு கூட்டுப் படைகளும் சப்பானியப் படைகளும் இணைந்து சீனாவின் தியான்ஜின், தாக்கு கோட்டைகளைக் கைப்பற்றின.

20ஆம் நூற்றாண்டு

  1. 1911

    செங்கோட்டை வாஞ்சிநாதன் திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் துரையை சுட்டுக் கொன்று தன்னையும் சுட்டு சாவடைந்தார்.

  2. 1929

    நியூசிலாந்து மர்ச்சிசன் நகரில் 7.8 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 17 பேர் உயிரிழந்தனர்.

  3. 1933

    அமெரிக்காவின் கேன்சசு நகரில் கொள்ளைக்காரன் பிராங்க் நாஷ் என்பவனை விடுவிக்கும் பொருட்டு கொள்ளைக்காரர் நடத்திய தாக்குதலில் நான்கு எஃப்பிஐ பணியாளர்களும், பிராங்க் நாஷும் கொல்லப்பட்டனர்.

  4. 1939

    பிரான்சில் கடைசித் தடவையாக பகிரங்கமாகக் கழுத்து துண்டிக்கப்பட்டு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. இயூசன் வீடுமேன் என்பவர் இவ்வாறு கொல்லப்பட்டார்.

  5. 1940

    இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியாவின் லான்காஸ்ட்ரியா கப்பல் செருமானிய லூப்டுவாபே படையினரால் சென் நசேர் அருகில் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டதில் குறைந்தது 3,000 பேர் உயிரிழந்தனர்.

  6. 1940

    இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியப் படையினர் லிபியாவின் கப்பூசோ கோட்டையைத் தாக்கி இத்தாலியப் படையினரிடம் இருந்து கைப்பற்றினர்.

  7. 1940

    எசுத்தோனியா, லாத்வியா, லிதுவேனியா ஆகிய மூன்று பால்ட்டிக் நாடுகளும் சோவியத் ஒன்றியத்தின் கட்டுப்பாட்டினுள் வந்தன. 1991 இலேயே இவை விடுதலை பெற்றன.

  8. 1944

    ஐசுலாந்து டென்மார்க்கிடம் இருந்து விடுதலையை அறிவித்து குடியரசானது.

  9. 1948

    டக்லசு டிசி-6 என்ற அமெரிக்க விமானம் பென்சில்வேனியா, கார்மேல் குன்றில் மோதியதில் அனைத்து 43 பயணிகளும் கொல்லப்பட்டனர்.

  10. 1953

    பனிப்போர்: பெர்லினில் கிழக்கு செருமனி அரசுக்கெதிராக தொழிலாளர்களால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் சோவியத் படைகளினால் நசுக்கப்பட்டதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

  11. 1960

    நே பெர்சு அமெரிக்கப் பழங்குடியினர் 1863 உடன்படிக்கைப்படி அவர்களது 7 மில்லியன் ஏக்கர் நிலம் குறைவாக மதிப்பீடு (4 சதம்/ஏக்கர்) செய்யப்பட்டு கொள்வனவு செய்யப்பட்டமைக்காக $4 மில்லியன் இழப்பீடு பெற்றனர்.

  12. 1963

    தெற்கு வியட்நாமில் பௌத்தர்கள் 2,000 பேர் வரை கலகம் செய்தனர். ஒருவர் கொல்லப்பட்டார்.

  13. 1967

    அணுகுண்டு சோதனை: சீனா தனது முதலாவது ஐதரசன் குண்டை வெற்றிகரமாகப் பரிசோதித்ததாக அறிவித்தது.

  14. 1985

    டிஸ்கவரி விண்ணோடத்தில் முதலாவது அராபிய விண்வெளிவீரர் (சுல்தான் பின் சல்மான் பின் அப்துலசீசு அல் சவுதி) விண்வெளிக்கு சென்றார்.

  15. 1991

    தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல்: தென்னாப்பிரிக்கர்கள் அனைவரும் பிறப்பின் போது இனவாரியாகப் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற சட்டத்தை அந்நாட்டு நாடாளுமன்றம் நிராகரித்தது.

  16. 1992

    "கூட்டு ஆயுதக்குறைப்பு" ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், உருசிய அரசுத்தலைவர் போரிஸ் யெல்ட்சின் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

21ஆம் நூற்றாண்டு

  1. 2006

    மன்னார் பேசாலைப் பகுதியில் கடற்படையினருக்கும் புலிகளுக்கும் இடையிலான மோதலின் பின்னர் ஆறு பொதுமக்கள் இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

  2. 2015

    சார்லசுட்டன் படுகொலை: தென் கரொலைனாவில் ஆப்பிரிக்க மெதடித்த தேவாலயம் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் 9 பேர் கொல்லப்பட்டனர்.

  3. 2017

    மத்திய போர்த்துகல் பகுதியில் காட்டுத்தீ பரவியதில் 64 பேர் உயிரிழந்தனர், 204 பேர் காயமடைந்தனர்.

பிறப்புகள்

Births · 15

இறப்புகள்

Deaths · 11

இம்மாத நாட்கள் · சூன்

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சூன் 17 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.