Skip to content

Popular

June 19 வெள்ளி

On this day · June 19

வரலாற்றில் சூன் 19

சூன் 19 அன்று நிகழ்ந்த 60 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 24 பிறப்புகள் · 23 இறப்புகள் · 11 சிறப்பு நாட்கள் · 2

சூன் 19 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 24

4ஆம் நூற்றாண்டு

  1. 325

    நைசின் விசுவாச அறிக்கை நைசியாவில் (இன்றைய துருக்கியில்) முதலாவது பேரவையில் வெளியிடப்பட்டது.

13ஆம் நூற்றாண்டு

  1. 1269

    பிரான்சில் மஞ்சள் அடையாளம் இல்லாமல் பொதுவில் திரியும் அனைத்து யூதர்களும் 10 வெள்ளி லிவ்ராக்கள் தண்டம் செலுத்த வேண்டும் என ஒன்பதாம் லூயி மன்னர் கட்டளையிட்டார்.

14ஆம் நூற்றாண்டு

  1. 1306

    பெம்புரோக் பிரபுவின் படைகள் புரூசின் இசுக்காட்லாந்துப் படைகளை மெத்வென் சமரில் தோற்கடித்தன.

16ஆம் நூற்றாண்டு

  1. 1586

    வட அமெரிக்காவில் இங்கிலாந்தின் நிரந்தரக் குடியிருப்பை அமைப்பதில் தோல்வியடைந்ததை அடுத்து ஆங்கிலேயக் குடியேறிகள் ரோனோக் தீவில் இருந்து வெளியேறினர்.

19ஆம் நூற்றாண்டு

  1. 1850

    நெதர்லாந்து இளவரசி லூயீசு சுவீடன்-நோர்வேயின் பிற்கால மன்னர் இலவரசர் கார்லை மணந்தார்.

  2. 1862

    ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் அமெரிக்க மாநிலங்களில் அடிமை முறையைத் தடை செய்தது.

  3. 1867

    மெக்சிகோ பேரரசர் முதலாம் மாக்சிமிலியன் மரணதண்டனை விதிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.

  4. 1875

    உதுமானியப் பேரரசுக்கு எதிராக எர்செகோவினா எழுச்சி ஆரம்பமானது.

20ஆம் நூற்றாண்டு

  1. 1903

    பொது வேலை நிறுத்தத்தைத் தூண்டியமைக்காக பெனிட்டோ முசோலினி பேர்ன் நகரில் கைது செய்யப்பட்டார்.

  2. 1910

    அமெரிக்காவில் வாசிங்டனில் முதல் தடவையாக தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது.

  3. 1943

    டெக்சாசில் இனமோதல் இடம்பெற்றது.

  4. 1944

    இரண்டாம் உலகப் போர்: அமெரிக்காவுக்கும் சப்பானுக்கும் இடையில் பிலிப்பைன் கடல் சமர் இடம்பெற்றது.

  5. 1949

    முதலாவது தேசிய சரக்குத் தானுந்து ஓட்டப்போட்டி இடம்பெற்றது.

  6. 1953

    பனிப்போர்: அமெரிக்காவின் அணுவாயுத இரகசியங்களை சோவியத் ஒன்றியத்துக்கு வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டு யூலியசு, எத்தல் ரோசன்பர்க் என்ற யூதத் தம்பதிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.

  7. 1961

    குவைத் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

  8. 1964

    மனித உரிமைகள் சட்டம் அமெரிக்க மேலவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

  9. 1985

    மத்திய அமெரிக்கத் தொழிலாளர் புரட்சிக் கட்சி உறுப்பினர்கள் சல்வடோர் படையினராக வேடமிட்டு சான் சல்வடோரில் சோனா ரோசா பகுதியைத் தாக்கியதில் 12 பேர் கொல்லப்பட்டனர்.

  10. 1987

    எசுப்பானியாவில் கடைத்தொகுதி ஒன்றில் எட்டா விடுதலை அமைப்பு போராளிகள் நடத்திய குண்டுத் தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டனர்.

  11. 1988

    திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் வியட்நாமின் 117 மாவீரர்களுக்குப் புனிதர் பட்டமளித்தார்.

  12. 1990

    உருசிய-சோவியத் கூட்டு சோசலிசக் குடியரசின் கம்யூனிஸ்டுக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.

  13. 1991

    அங்கேரியில் சோவியத் ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்தது.

21ஆம் நூற்றாண்டு

  1. 2007

    பக்தாதில் அல்-கிலானி பள்ளிவாசலில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 78 பேர் கொல்லப்பட்டனர், 218 பேர் காயமடைந்தனர்.

  2. 2009

    வடமேற்குப் பாக்கித்தானில் தாலிபான்களுக்கு எதிரான இரா-கி-நிசாத் இராணுவ நடவடிக்கை ஆரம்பமானது.

  3. 2012

    விக்கிலீக்ஸ் நிறுவனர் யூலியன் அசாஞ்சு இலண்டனில் உள்ள எக்குவடோர் தூதரகத்தில் அரசியல் தஞ்சம் அடைந்தார். 2019 இல் கைது செய்யப்படும் வரை அங்கேயே அவர் தங்கியிருந்தார்.

பிறப்புகள்

Births · 23

இறப்புகள்

Deaths · 11

இம்மாத நாட்கள் · சூன்

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சூன் 19 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.