கிழவியும் காதம், குதிரையும் காதம்.
Palamolikal
பழமொழிகள் - palamolikal in Tamil
190 quotes · page 1 / 19
✍ இதில் பகிருங்கள் · Post in this category
இந்தப் பகுதி பற்றி · About
பழமொழிகள் நம் முன்னோர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவத்திலிருந்து சுருக்கமாகச் சொல்லி வைத்த அறிவுச் செல்வங்கள். சில சொற்களில் ஆழமான உண்மையைச் சொல்லும் இவை, உழைப்பு, குடும்பம், உறவு, பணம், மனித இயல்பு எனப் பல்வேறு வாழ்க்கைப் பாடங்களைத் தருகின்றன. இந்தப் பக்கத்தில் தலைமுறை தலைமுறையாக வாய்மொழியாக வந்த தமிழ்ப் பழமொழிகளைப் படித்து மகிழலாம். பேச்சிலும் எழுத்திலும் கருத்தை அழகாகச் சொல்லவும், குழந்தைகளுக்குத் தமிழின் சுவையைக் கற்றுத் தரவும் வாசகர்கள் இவற்றைப் பகிர்கிறார்கள்.
Traditional Tamil proverbs (palamozhigal) passed down through generations, carrying short and wise lessons about work, family, money and human nature.
பழமொழிகள் · 190 Palamolikal quotes
குதிரை குணம் அறிந்து அல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை!
சுவாமி இல்லையென்றால் சாணியை பார் மருந்தில்லை என்றால் பாணத்தைப் பார்; பேதி இல்லை என்றால் (நேர்) வானத்தைப் பார்.
தெய்வம் காட்டும், ஊட்டுமா?
இல்லது வாராது, உள்ளது போகாது.
தன்வினை தன்னைச்சுடும், ஓட்டப்பம் வீட்டைச்சுடும்.
சீதை பிறக்க இலங்கை அழிய.
காரண குரு, காரிய குரு.
குப்பையும் கோழியும் போல குருவும் சீஷனும்.
சாஸ்திரம் பொய் என்றால் கிரகணத்தை பார்.