ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பொன்மொழிகள்-Albert Einstein Ponmolikal in Tamil
பள்ளியில் தான் கற்ற அனைத்தையும் மறந்துவிட்ட பின்பும் ஒருவனிடம் எஞ்சியிருப்பது எதுவோ, அதுவே உண்மையில் அவன் கற்ற கல்வி.
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பொன்மொழிகள் பற்றி · About
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஜெர்மனியில் பிறந்த இயற்பியல் அறிஞர்; சார்பியல் கோட்பாட்டின் மூலம் அறிவியல் உலகையே மாற்றியவராகப் போற்றப்படுகிறார். அவரது பொன்மொழிகள் கற்பனையின் ஆற்றல், சுதந்திரமான சிந்தனை, கல்வி, மனித உறவுகளின் மதிப்பு ஆகியவற்றைப் பற்றிப் பேசுகின்றன.…
35 ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பொன்மொழிகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
வாழ்த்து & காதல் · Wishes & love
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பொன்மொழிகள்
மனிதன் நிச்சயமாக ஒரு முழுப் பைத்தியக்காரன்தான் அவனால் ஒரு புழுவைக்கூட உண்டாக்க முடியாது. ஆனால் டஜன் கணக்கில் கடவுளை உண்டாக்கிக் கொண்டேயிருப்பான்.
துன்பங்களுக்கு இடையில்தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன.
ஒரு செயலைச் செய்யும்போது உண்டாகும் தடை, அடுத்த முயற்சிக்கான ஆரம்பம்.
சிறு செயல்களிலும் உண்மையைத் தீவிரமாக எடுத்துக் கொள்ளாதவர் பெரிய விஷயங்களில் நம்பத் தகுந்தவரில்லை.
அறிவை ஆனந்தமாக போதிக்க கற்றவனே அற்புதமான ஆசிரியன்.
எவராவது தான் தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால் அவர்கள் தாம் தம் வாழ்வில் புதிய முயற்சிகளை செய்து பார்த்ததில்லை என்று பொருள்.