ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பொன்மொழிகள்-Albert Einstein Ponmolikal in Tamil
தனி மனிதனின் தனி உரிமையான சிந்தனையால் சாதிக்க முடியாதது என்று எதுவுமில்லை.
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பொன்மொழிகள் பற்றி · About
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஜெர்மனியில் பிறந்த இயற்பியல் அறிஞர்; சார்பியல் கோட்பாட்டின் மூலம் அறிவியல் உலகையே மாற்றியவராகப் போற்றப்படுகிறார். அவரது பொன்மொழிகள் கற்பனையின் ஆற்றல், சுதந்திரமான சிந்தனை, கல்வி, மனித உறவுகளின் மதிப்பு ஆகியவற்றைப் பற்றிப் பேசுகின்றன.…
35 ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பொன்மொழிகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
வாழ்த்து & காதல் · Wishes & love
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பொன்மொழிகள்
இந்த உலகம் அபாயகரமான இடம். தீங்கு, தீமை செய்பவர்களால் அல்ல. ஆனால் இவர்களைப் பார்த்து கொண்டு ஒன்றும் செய்யாமல் இருக்கிறார்களே அவர்களால்தான்!
வெற்றிபெற்ற மனிதனாக ஆவதற்கு முயற்சி செய்யாதீர்கள்! மாறாக மதிப்புமிக்க மனிதனாக மாற முயலுங்கள்.
தேடுதலும், உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டுமென்ற விடாமுயற்சியும் தெளிந்த அறிவும் உங்களை உயர்ந்தோனாக்கிக் காட்டும்.
அமைதி என்பது ஆழமான புரிதலினால் ஏற்படுவது, அதை ஒருபோதும் அடக்குமுறையால் ஏற்படுத்திவிட முடியாது.
பள்ளியில் தான் கற்ற அனைத்தையும் மறந்துவிட்ட பின்பும் ஒருவனிடம் எஞ்சியிருப்பது எதுவோ, அதுவே உண்மையில் அவன் கற்ற கல்வி.
மனிதன் நிச்சயமாக ஒரு முழுப் பைத்தியக்காரன்தான் அவனால் ஒரு புழுவைக்கூட உண்டாக்க முடியாது. ஆனால் டஜன் கணக்கில் கடவுளை உண்டாக்கிக் கொண்டேயிருப்பான்.