பெரியார் பொன்மொழிகள்-Periyar Ponmolikal in Tamil
மூட்டை தூக்கும் பொழுது பாரத்தினாலே நான் கஷ்டப்பட்டிருப்பேனே தவிர, வெட்கத்தினால் ஒரு போதும் கஷ்டப்பட்டதில்லை.
பெரியார் பொன்மொழிகள் பற்றி · About
தந்தை பெரியார் என்று அழைக்கப்படும் ஈ. வெ. ராமசாமி தமிழ்நாட்டின் சமூகச் சீர்திருத்தவாதி; சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கி சாதி ஏற்றத்தாழ்வுக்கும் மூடநம்பிக்கைக்கும் எதிராகக் குரல் கொடுத்தவர். அவரது பொன்மொழிகள் பகுத்தறிவு, சுயமரியாதை, சமத்துவம், பெண்ணுரிமை…
87 பெரியார் பொன்மொழிகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பெரியார் பொன்மொழிகள்
ஒழுக்கம் என்பது தனக்கும், அந்நியனுக்கும் துன்பம் தராமல் நடப்பதும் நடந்தபடி சொல்வதும் ஆகும்.
கடமை என்பதும், தர்மம் என்பதும் ஒரு மனிதன் மற்றொரு மனிதனிடமிருந்து தனக்காக எதை எதை எதிர்பார்க்கின்றானோ அதனைத் தான் மற்றொரு மனிதனுக்கு வலியச் செய்வது.
இல்வாழ்க்கை என்பது ஓர் ஆண், ஒரு பெண், இருவரும் சமநிலையில் இருந்து சமமாக அனுபவிப்பதாகும்.
சிந்திப்பவன் மனிதன், சிந்திக்க மறுப்பவன் மதவாதி; சிந்திக்காதவன் மிருகம்; சிந்திக்க பயப்படுகிறவன் கோழை.
நம் பெண்களை மனித சமுதாயத்திற்குத் தொண்டாற்றவும், புகழ்பெறும் பெண்மணியாக்கவும் வேண்டும். அவர்கள் புது உலகம் சித்தரிக்க வேண்டும்.
நமக்கு வேண்டியதெல்லாம் கோவிலல்ல; பள்ளிக்கூடம்தான்.