பெரியார் பொன்மொழிகள்-Periyar Ponmolikal in Tamil
நம் பெண்களை மனித சமுதாயத்திற்குத் தொண்டாற்றவும், புகழ்பெறும் பெண்மணியாக்கவும் வேண்டும். அவர்கள் புது உலகம் சித்தரிக்க வேண்டும்.
பெரியார் பொன்மொழிகள் பற்றி · About
தந்தை பெரியார் என்று அழைக்கப்படும் ஈ. வெ. ராமசாமி தமிழ்நாட்டின் சமூகச் சீர்திருத்தவாதி; சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கி சாதி ஏற்றத்தாழ்வுக்கும் மூடநம்பிக்கைக்கும் எதிராகக் குரல் கொடுத்தவர். அவரது பொன்மொழிகள் பகுத்தறிவு, சுயமரியாதை, சமத்துவம், பெண்ணுரிமை…
87 பெரியார் பொன்மொழிகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பெரியார் பொன்மொழிகள்
நமக்கு வேண்டியதெல்லாம் கோவிலல்ல; பள்ளிக்கூடம்தான்.
யார் சொல்லியிருந்தாலும், எங்கு படித்திருந்தாலும், நானே சொன்னாலும் உனது புத்திக்கும் பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே!
ஒரு தகப்பன் வயிற்றில் பிறந்த பிள்ளைகளுக்கு எப்படிச் சம அந்தஸ்த்தும் சம உரிமையும் உண்டோ, அப்படியே ஒரு தேசத்தில் பிறந்தவர்களுக்கும் இருக்க வேண்டியது அவசியமாகும். அப்போதுதான் மக்கள் சுகமாக வாழ முடியும்.
மற்றவர்களின் ஆதிக்கத்திலோ, ஒவ்வொரு காரியத்துக்கும் மற்றவர்களை எதிர் பார்த்தோ, அல்லது தனக்கு மற்றவர்கள் வழி காட்டக்கூடிய நிலையிலோ இல்லாமல் சுதந்திரத்தோடும் சுய அறிவோடும் வாழத் தகுதியுடைவர்களாக மாற்றுவதே கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும்.
புத்திசாலிகள் சண்டையிட்டுக் கொள்வது எப்போதுமே இயற்கைதான்.
பக்தி என்பதற்கு முட்டாள்தனம், பேராசை, தன்னலம் என்பவை தவிர வேறு சொற்கள் தமிழில் இல்லவே இல்லை.