சாக்ரடீஸ் பொன்மொழிகள்-Socrates Ponmolikal in Tamil
உண்பதற்காக வாழாதே, உயிர் வாழ்வதற்காக உண்.
சாக்ரடீஸ் பொன்மொழிகள் பற்றி · About
சாக்ரடீஸ் பண்டைய கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகரைச் சேர்ந்த தத்துவ ஞானி; கேள்விகள் கேட்டு உண்மையைத் தேடும் முறைக்காக மேற்கத்திய தத்துவத்தின் முன்னோடியாகக் கருதப்படுகிறார். அவரது சிந்தனைகள் பெரும்பாலும் அவரது மாணவர் பிளேட்டோவின் எழுத்துகள் வழியாகவே நமக்குக்…
45 சாக்ரடீஸ் பொன்மொழிகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
சாக்ரடீஸ் பொன்மொழிகள்
இப்போது செய்வதைவிட, இன்னும் சிறப்பாக பணியாற்ற திறமையும், வாய்ப்பும் இருந்தும் அப்படி செய்யாமல் இருப்பவனும் சோம்பேறியே.
அடகு வைக்கப்பட்ட நேர்மை ஒருபோதும் திருத்தப்படுவதில்லை.
எதைப் பற்றியும் பிறருக்குக் கற்றுக் கொடுக்க என்னால் முடியாது; அவர்களை சிந்திக்க வைக்க மட்டுமே என்னால் முடியும்.
உங்களுடைய காரியமாகட்டும், உங்கள் எசமானர் உத்தரவிட்ட காரியமாகட்டும் கடமை என்று தோன்றினால் அதைக் கட்டாயம் செய்து முடியுங்கள். மரணமே வரக்கூடும் என்றாலும் காரியத்தில் பின் வாங்காதீர்கள். ஆனால் குற்றமென்று தெரிவதை ஒருபோதும் செய்யாதீர்கள்.
உங்களைவிட உயர்ந்தவர்களிடமும், உங்களுக்குச் சமமானவர்களிடமும் நேர்மையாக நடந்து கொள்ளுங்கள். ஆனால் அதைவிட முக்கியம் உங்களைவிட கீழான நிலையில் இருப்பவர்களிடம் காட்டும் நேர்மைதான்.
சிந்திப்பதும், தனது சிந்தனையில் தோன்றியதைச் சொல்வதும் தனிமனிதனின் பிறப்புரிமை, அதனைத் தடுக்கவோ தட்டிக் கேட்கவோ எவருக்கும் உரிமையில்லை. மனிதன் தடையின்றிச் சிந்திக்கிற நாட்டில்தான் உண்மையான மக்களாட்சி மலரும்.