சாக்ரடீஸ் பொன்மொழிகள்-Socrates Ponmolikal in Tamil
உங்களுடைய காரியமாகட்டும், உங்கள் எசமானர் உத்தரவிட்ட காரியமாகட்டும் கடமை என்று தோன்றினால் அதைக் கட்டாயம் செய்து முடியுங்கள். மரணமே வரக்கூடும் என்றாலும் காரியத்தில் பின் வாங்காதீர்கள். ஆனால் குற்றமென்று தெரிவதை ஒருபோதும் செய்யாதீர்கள்.
சாக்ரடீஸ் பொன்மொழிகள் பற்றி · About
சாக்ரடீஸ் பண்டைய கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகரைச் சேர்ந்த தத்துவ ஞானி; கேள்விகள் கேட்டு உண்மையைத் தேடும் முறைக்காக மேற்கத்திய தத்துவத்தின் முன்னோடியாகக் கருதப்படுகிறார். அவரது சிந்தனைகள் பெரும்பாலும் அவரது மாணவர் பிளேட்டோவின் எழுத்துகள் வழியாகவே நமக்குக்…
45 சாக்ரடீஸ் பொன்மொழிகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
சாக்ரடீஸ் பொன்மொழிகள்
உங்களைவிட உயர்ந்தவர்களிடமும், உங்களுக்குச் சமமானவர்களிடமும் நேர்மையாக நடந்து கொள்ளுங்கள். ஆனால் அதைவிட முக்கியம் உங்களைவிட கீழான நிலையில் இருப்பவர்களிடம் காட்டும் நேர்மைதான்.
சிந்திப்பதும், தனது சிந்தனையில் தோன்றியதைச் சொல்வதும் தனிமனிதனின் பிறப்புரிமை, அதனைத் தடுக்கவோ தட்டிக் கேட்கவோ எவருக்கும் உரிமையில்லை. மனிதன் தடையின்றிச் சிந்திக்கிற நாட்டில்தான் உண்மையான மக்களாட்சி மலரும்.
கொண்ட கொள்கையில் உறுதியாய் இருங்கள். வாழ்வில் சிறந்த நிலையை அடைய விரும்பினால் உங்களிடம் கொள்கை, இலட்சியம் பிடிப்பு இருந்தாக வேண்டும். கொள்கையற்றவர் தாமும் நன்மை அடைவதில்லை, இந்தச் சமுதாயத்திற்கும் நன்மை செய்வதில்லை.