பழமொழிகள் - palamolikal in Tamil
உற்றார் தின்றால் புற்றாய் விளையும், ஊரார் தின்றால் பேராய் விளையும்.
விளக்கம்
உறவினர்களுக்கு உணவிட்டால் வீட்டைச்சுற்றி எறும்புப் புற்றுதான் வளரும். அதுவே ஊரார்குச் சோறிட்டால் அது நமக்கு நல்ல பெயரைத் தரும்.பழமொழிகள் பற்றி · About
பழமொழிகள் நம் முன்னோர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவத்திலிருந்து சுருக்கமாகச் சொல்லி வைத்த அறிவுச் செல்வங்கள். சில சொற்களில் ஆழமான உண்மையைச் சொல்லும் இவை, உழைப்பு, குடும்பம், உறவு, பணம், மனித இயல்பு எனப் பல்வேறு வாழ்க்கைப் பாடங்களைத் தருகின்றன. இந்தப் பக்கத்தில்…
190 பழமொழிகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பழமொழிகள்
வாழைப்பழம் கொண்டுபோனவள் வாசலில் இருந்தாள், வாயைக் கொண்டுபோனவள் நடுவீட்டில் இருந்தாள்.
ஆகாசத்தை வடுப்படாமல் கடிப்பேன் என்கிறான்.
துள்ளாதே துள்ளாதே குள்ளா! பக்கத்தில் பள்ளமடா!
பொரிமாவை மெச்சினான் பொக்கைவாயன்.
ஆண்டிக்குக் கொடுக்கிறாயோ, சுரைக் குடுக்கைக்குக் கொடுக்கிறாயோ?
சங்கிலே விட்டால் தீர்த்தம், மொந்தையிலே விட்டால் தண்ணீர்.