பழமொழிகள் - palamolikal in Tamil
குந்தித் தின்றால் குன்றும் மாளும்.
விளக்கம்
குன்றளவு சொத்து உள்ளவனும் வேலையில்லாமல் வெறுமனே உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தால் அவன் சொத்து விரைவில் கரைந்துவிடும்.பழமொழிகள் பற்றி · About
பழமொழிகள் நம் முன்னோர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவத்திலிருந்து சுருக்கமாகச் சொல்லி வைத்த அறிவுச் செல்வங்கள். சில சொற்களில் ஆழமான உண்மையைச் சொல்லும் இவை, உழைப்பு, குடும்பம், உறவு, பணம், மனித இயல்பு எனப் பல்வேறு வாழ்க்கைப் பாடங்களைத் தருகின்றன. இந்தப் பக்கத்தில்…
190 பழமொழிகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பழமொழிகள்
நடந்தால் நாடெல்லாம் உறவு, படுத்தால் பாயும் பகை.
கொட்டிக் கிழங்கு பறிக்கச்சொன்னாள் கோபித்துக்கொள்வார் பண்டாரம், அவித்து உரித்து முன்னே வைத்தால் அமுதுகொள்வார் பண்டாரம்.
தெண்டச் சோற்றுக்காரா, குண்டு போட்டு வா அடா!
ஞானமும் கல்வியும் நாழி அரிசியிலே.
உண்பது நாழி உடுப்பது நான்கு முழம், எண்பதுகோடி நினைந்து எண்ணும் மனம்.
உன்னைப் பிடி என்னைப் பிடி, உலகாத்தாள் தலையைப் பிடி.