அறிஞர் அண்ணா பொன்மொழிகள்-Annadurai Ponmolikal in Tamil
மோரை கடைந்து வெண்ணெய் எடுப்பதுபோல அறிவை வளர்த்துக்கொண்டு பலன் பெறவேண்டும்.
அறிஞர் அண்ணா பொன்மொழிகள் பற்றி · About
அறிஞர் அண்ணா என்று அன்புடன் அழைக்கப்படும் சி. என். அண்ணாதுரை, தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பணியாற்றிய அரசியல் தலைவரும், திராவிட முன்னேற்றக் கழகத்தை நிறுவியவரும் ஆவார். சிறந்த பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் தமிழ் மக்களிடம் நீங்காத இடம் பெற்றவர். இந்தப்…
23 அறிஞர் அண்ணா பொன்மொழிகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
விதியை நம்பி, மதியைப் பறிகொடுத்து, பகுத்தறிவற்ற மனிதர்களாய் வாழ்வது மிகமிகக் கேடு, தீங்கு.
ஒரு நாடு சுபிட்சத்துடன் வாழவேண்டுமானால் அந்நாட்டு மக்கள் ஒழுக்கமுள்ளவர்களாக இருத்தல் வேண்டும்.
அஞ்சாநெஞ்சு படைத்த இலட்சியவாதிகள் தான் ஒரு நாட்டிற்கு கிடைக்கக் கூடிய ஒப்பற்ற செல்வங்கள்.
சமூகப் புரட்சிப் பணியிலே ஈடுபட்டவர்களுடைய வாழ்க்கை துன்பமானதுதான். ஆனால் அவர்களது பெயர் வரலாற்றில் நிலைத்து நிற்கிறது.
பாடத்திட்டத்தில் பகுத்தறிவைப் புகுத்தினால்தான் மக்களுக்கு பழமையிடத்திலுள்ள பாசம் குறையும், மனத்திலுள்ள மாசு நீங்கும், காலத்திற்குத் தக்கதுபோல கருத்து வளரும்.