பெரியார் பொன்மொழிகள்-Periyar Ponmolikal in Tamil
மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு.
பெரியார் பொன்மொழிகள் பற்றி · About
தந்தை பெரியார் என்று அழைக்கப்படும் ஈ. வெ. ராமசாமி தமிழ்நாட்டின் சமூகச் சீர்திருத்தவாதி; சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கி சாதி ஏற்றத்தாழ்வுக்கும் மூடநம்பிக்கைக்கும் எதிராகக் குரல் கொடுத்தவர். அவரது பொன்மொழிகள் பகுத்தறிவு, சுயமரியாதை, சமத்துவம், பெண்ணுரிமை…
87 பெரியார் பொன்மொழிகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பெரியார் பொன்மொழிகள்
பொதுவுடைமை என்று கூறுவதன் தத்துவமே மனிதன் கவலையற்று வாழ வேண்டும் என்பதுதான்; சொந்தவுடைமை என்பது கவலை நிறைந்த வாழ்வேயாகும்.
பொதுத்தொண்டு செய்பவனுக்கு ஏற்படும் தொல்லை அவன் தனது லட்சியத்துக்குக் கொடுக்கும் விலை.
ஆணைத் தொழுதெழ வேண்டும் என்று பெண்ணுக்கு நிபந்தனையிருந்தால், பெண்ணைத் தொழுதெழ வேன்டும் என்று ஆணுக்கு நிபந்தனை இருக்க வேண்டும். இதுதான் ஆண்-பெண் சரிசமம் உரிமை என்பது.
திருக்குறள் ஒன்று போதும், இந்நாட்டு மக்களுக்கு அறிவை உண்டாக்க.
சர்வ சக்தியுள்ள கடவுள் ஒருவர் இருந்தால், கடவுள் இல்லை என்பவர்கள் உலகத்தில் எப்படி இருக்க முடியும்?
கல்லைக் கடவுள் என்று கும்பிடும் மனிதன், பார்ப்பனனைச் சுவாமி என்று கும்பிடுவதில் அதிசயமொன்றுமில்லை.