பெரியார் பொன்மொழிகள்-Periyar Ponmolikal in Tamil
பிரார்த்தனை என்பதற்கு வேறு பெயர் பேராசை. பேராசை என்றால் தகுதிக்கு மேல் விரும்புவது, வேலை செய்யாமல் கூலி பெறுவது என்பதே ஆகும்.
பெரியார் பொன்மொழிகள் பற்றி · About
தந்தை பெரியார் என்று அழைக்கப்படும் ஈ. வெ. ராமசாமி தமிழ்நாட்டின் சமூகச் சீர்திருத்தவாதி; சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கி சாதி ஏற்றத்தாழ்வுக்கும் மூடநம்பிக்கைக்கும் எதிராகக் குரல் கொடுத்தவர். அவரது பொன்மொழிகள் பகுத்தறிவு, சுயமரியாதை, சமத்துவம், பெண்ணுரிமை…
87 பெரியார் பொன்மொழிகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பெரியார் பொன்மொழிகள்
உலகிலுள்ள எப்படிப்பட்ட மதக்காரனும், கடவுள் நம்பிக்கைகாரனும் நம்பிக்கைவாதி ஆவானே ஒழிய, அறிவுவாதி ஆகவே மாட்டான்.
எதையும் முன்னோர் கூறியது என்றோ, முன்னோர் செய்தது என்றோ அப்படியே ஏற்றுக் கொள்ளாதீர்கள்.
பெண்கள் படித்துவிட்டால் ஆண்கள் ஒழுக்க சீலர்களாக இருப்பார்கள்.
கோவில்கள் சாமிக்காகக் கட்டியதல்ல; மற்றெதற்காக என்றால் ஜாதியைப் பிரித்துக் காட்டி மக்களைத் தாழ்த்தவும் பணம் பறித்து, ஒரு கூட்டத்தார் பிழைக்க மக்களை அறியாமையில் வைத்து அடிமைகளாகவே கட்டப்பட்டதாகும்.
பெண்களை வீட்டு வேலை செய்வது, கோலம் போடுவது, சாணி தட்டுவது, பாத்திரம் கழுவுவது, கும்மியடிப்பது, கோலாட்டம் போன்ற வேலைகளுக்குத் தயார் செய்யாதீர்கள்!.
கற்பு என்ற சொல், பெண் ஓர் அடிமை; சீவனற்ற ஒரு பொருள் என்று காட்டவே ஆகும்.