அம்பேத்கர் பொன்மொழிகள்-Ambedkar Ponmolikal in Tamil
மற்றவர்களின் விருப்பப்படி செயல்படாமல் எதனையும் சோதனைக்குட்படுத்தி அறிவு வெளிச்சத்தில் அலசி ஆராய்ந்து செயல்பட வேண்டும்.
அம்பேத்கர் பொன்மொழிகள் பற்றி · About
டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சிற்பியாகப் போற்றப்படும் சட்ட மேதையும் சமூகச் சீர்திருத்தவாதியுமாவார். சாதி ஒடுக்குமுறைக்கு எதிராகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் வாழ்நாள் முழுவதும் போராடியவர். அவரது பொன்மொழிகள்…
26 அம்பேத்கர் பொன்மொழிகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
அம்பேத்கர் பொன்மொழிகள்
உலகில் யாரும் தெய்விகக் குணங்களுடன் பிறப்பது இல்லை. ஒவ்வொருவருக்கும் அவரவர் மேற்கொள்ளும் முயற்சிகளைப் பொருத்துதான் முன்னேற்றமோ வீழ்ச்சியோ ஏற்படுகிறது!
குருட்டு பக்தி தன்னறிவை இழக்கச் செய்யும், பகுத்தறிவை பயன்படுத்தாமல் யாருடைய வாக்குறுதியையும் நம்பக்கூடாது.
இலட்சியங்களுக்கு விசுவாசமாக நடப்பதற்கு பதிலாக, கட்டளைக்கு இயங்க நடப்பதே வாழ்க்கை ஆகிவிடுகிறது.
சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விசம் பரவட்டும்.
சமூகத்தை உயர்த்த வேண்டும் என்ற விழுமிய நோக்கத்தில் உந்தப்படுபவரே உயர்ந்த மனிதர்.
மாபெரும் லட்சியத்தையும் வெற்றியில் நம்பிக்கையையும் வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டால், யாரும் உயர்ந்த நிலையை அடைய முடியும்!