புத்தர் பொன்மொழிகள்-Buddha Ponmolikal in Tamil
பயனில்லாத சொற்களைப் பேசுபவன் வாசமில்லாத மலருக்கு ஒன்று தான்.
புத்தர் பொன்மொழிகள் பற்றி · About
கௌதம புத்தர் பௌத்த சமயத்தை நிறுவிய ஞானி; அரச வாழ்வைத் துறந்து துன்பத்திலிருந்து விடுபடும் வழியை உலகுக்குப் போதித்தவர். அவரது பொன்மொழிகள் அமைதி, அன்பு, கருணை, ஆசையைத் துறத்தல், மனக் கட்டுப்பாடு ஆகியவற்றை எளிமையாக உணர்த்துகின்றன. மன அமைதி தேடும் நேரங்களிலும்,…
30 புத்தர் பொன்மொழிகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
புத்தர் பொன்மொழிகள்
நாம் இன்று என்ன நிலையில் இருக்கிறோமோ, அந்நிலையை நமக்கு அளித்தது நமது எண்ணங்கள்தான். நமது இன்றைய நிலை நமது எண்ணங்களாலேயே ஆக்கப்பட்டிருக்கிறது.
ஒரு பகைவனால் ஏற்ப்டும் தீமையை விட அடக்கம் இல்லாத மனமே ஒருவனுக்கு அதிகமான தீமையைச் செய்கிறது.
மலை புயலுக்கு அசைந்து கொடுப்பதில்லை, அறிவாளிகள் புகழ்ச்சிக்கு அடிமையாவதில்லை.
நறுமணம் காற்றடிக்கும் பக்கமாகத்தான் பரவும். காற்றுக்கு எதிராகப் போகாது. ஆனால் நல்ல மனிதருடைய வாசனை காற்றையும் எதிர்த்து எங்கும் எல்லா இடங்களுக்கும் செல்லும்.
எதனையும் ஆராய்ந்து பகுத்தறிவுக்குப் பொருத்தமானதாக இருந்தால் நம்பு; இல்லையேல் கடவுளே நேரில் வந்து கதறினாலும் பகுத்தறிவுக்குப் புறம்பான சொல்லையோ செயலையோ ஏற்காதே.
தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றி வரப்படும் பழக்கம் என்பதற்காகவோ, நமது முன்னோர்கள் சொல்லிவைத்து விட்டார்கள் என்பதற்காகவோ எந்த ஒரு கருத்தையும் நாம் சிந்தித்துத் தெளிவு பெறாமல் ஏற்றுக்கொள்ளக் கூடாது!