அப்துல்கலாம் பொன்மொழிகள்-Abdul kalam Ponmolikal in Tamil
கனவு காணுங்கள், கனவு காணுங்கள், கனவு காணுங்கள். கனவுதான் சிந்தனையாகவும், சிந்தனைதான் செயலாகவும் மாறுகிறது.
அப்துல்கலாம் பொன்மொழிகள் பற்றி · About
டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் இந்தியாவின் புகழ்பெற்ற விஞ்ஞானியும் முன்னாள் குடியரசுத் தலைவரும் ஆவார்; ராமேஸ்வரத்தில் பிறந்த அவர் ஏவுகணை நாயகன் என்றும் அழைக்கப்படுகிறார். அவரது பொன்மொழிகள் கனவு காணுதல், கடின உழைப்பு, கல்வி, தன்னம்பிக்கை ஆகியவற்றை…
61 அப்துல்கலாம் பொன்மொழிகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
அப்துல்கலாம் பொன்மொழிகள்
மாணவர்களின் மிக முக்கியமான இலக்கணம், கேள்வி கேட்பதே.
தோல்விகளை எதிர்கொள்ள கற்றுக் கொள்ளுங்கள். அதுதான் வெற்றிக்கான மிக முக்கியமான திறமை.
தவறான காரியங்களை ஒரு போதும் செய்யக்கூடாது. ஒரு இலக்கை நோக்கி செல்ல பலவழிகள் இருந்தாலும் நேர்மையான வழியே மிகச்சிறந்த வழி என்பதுடன் அது மட்டுமே வழியாக இருக்க வேண்டும்.
நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால், இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்!
சிந்திக்கத் தெரிந்தவனுக்கு ஆலோசனை தேவை இல்லை, துன்பங்களை சந்திக்கத் தெரிந்தவனுக்கு வாழ்க்கையில் தோல்வியே இல்லை.
உன் வாழ்வினுள் வரும் அனைத்து சங்கடங்களும் உன்னை அழிக்க வரவில்லை, உன் திறைமையயும் மற்றும் உள்மன சக்தியையும் வெளிபடுத்த ஒரு வாய்ப்பை அளித்து செல்கிறது.