இயற்கை கவிதைகள் - Iyarkai kavithaikal in Tamil
அவள் கீழே இறங்கி வந்தாள் இப்பூமி பெண்கள் பொறாமை கொள்வார்கள் என தெரிந்ததே.
இயற்கை கவிதைகள் பற்றி · About
நிலவு, வெயில், மழை, மண் எனப் பருவங்களையும் இயற்கையின் பல முகங்களையும் வர்ணிக்கும் கவிதைகள் இங்கே உள்ளன. இயற்கையின் அழகோடு, அதன் கடுமையையும் மண்ணின் மொழியில் இந்த வரிகள் படம்பிடிக்கின்றன. பருவ மாற்றங்களின் போதும் இயற்கையை ரசிக்கும் தருணங்களிலும் வாசகர்கள்…
153 இயற்கை கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
இயற்கை கவிதைகள்
ஒப்பனைகள் செய்து தன்னை அழகு என நினைக்கும் பெண்கள் மத்தியில் பல ஆண்களின் கனவு தேவதையும், கவிதை தேவதையும் ஒரு அழகான குண்டு நிலாவே.
காகித எழுத்தாய் கரையும் கனவுகளுக்கு உயிர் தர வந்தாயோ! இல்லை காணாமல் மறைந்த கனவுகளை தேடி தர வந்தாயோ!
பாதி நாள் கருப்பு, பாதி நாள் வெள்ளை, சில நாள் தேய்ந்து தேய்பிறையாய்! சிலநாள் பூரித்த தேகம் கொண்ட வளர்பிறையாய் நீ!
வட்ட முக பேரழகி கடவுளின் ஒப்பனையால் கருத்த முகம் வெளுத்து போனதே...
வானில் வரைந்த சித்திரம், வாடாத மலர்ந்த என் மலரோ, இரவு வானில் உலவுபவள் இன்முகம் காட்டும் நிலவு அவள்.
சொப்பனம் என்ற இரவில் கூட சொர்க்கமாக வந்தாயோ இல்லை, சொர்க்கமான வாழ்வு என்பதை சொப்பனம் ஆக்க வந்தாயோ.