அம்மா கவிதைகள் - Amma kavithaikal in Tamil
இவ்வுலகில் அன்பை மட்டுமே எதிர்பார்க்கும் ஒரு உறவு நீ மட்டுமே.
அம்மா கவிதைகள் பற்றி · About
தாயின் தியாகம், பாசம், அரவணைப்பு ஆகியவற்றைப் போற்றும் கவிதைகள் இந்தப் பக்கத்தில் உள்ளன. குழந்தைப் பருவ நினைவுகளையும், அம்மாவின் மடியில் கிடைக்கும் அமைதியையும் இவை நினைவூட்டுகின்றன. அன்னையர் தினம், அம்மாவின் பிறந்தநாள் போன்ற நாட்களில் நன்றியைச் சொல்ல…
73 அம்மா கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
அம்மா கவிதைகள்
கருவில் சுமந்த உன்னை என் வாழ்நாள் வரை மனதில் சுமந்து கொண்டிருக்கிறேன் ஏனெனில் உன் கடமைக்கு அல்ல உன் பாசத்திற்கு அம்மா.
நான் கடவுளிடம் மனதார வேண்டுகிறேன் மீண்டும் நீயே என்னை கருவில் சுமக்க.
என்ன தவம் செய்தேன் உனக்கு நான் மகனாய் பிறக்க! என்ன வரம் பெற்றேன் நீ என் தாயாய் வந்திட! அடுத்த பிறவியிலும் இதே வரம் பெற்றிட இறைவனிடம் வேண்டுகிறேன்.
நீ மண்ணில் உருவாகி மறைந்தாலும் கூட உன் ஆத்மா என்னை கவனித்துக் கொண்டே தானே இருக்கும் அம்மா.
நான் வாழ்க்கையில் தோற்றுக் கொண்டே இருந்தாலும் என்னை நீ ஜெயிக்க வைத்துக் கொண்டே தான் இருப்பாய் என் அம்மா.
நான் நோய் என்று படுத்து விட்டால் அந்த நோய்க்கே சாபம் விட்டவள் நீதானே அம்மா.