காதல் வலி கவிதைகள் - love Pain kavithaikal in Tamil
என்னை நிராகரிக்கவும் என்னை விட்டு செல்லவும் உனக்கு எப்போதும் உரிமை உண்டு.. நீ என்னை விட்டு பிரிவதால் என் மனம் வேதனை படும் என்று நீ வருத்தப்படாதே.. ஏன் என்றால் நீ என்னை மறுதலித்த போதே நான் இறந்து விட்டேன்.!
காதல் வலி கவிதைகள் பற்றி · About
பிரிவு, நிறைவேறாத எதிர்பார்ப்பு, உடைந்த காதல் ஆகியவற்றின் வலியைப் பேசும் கவிதைகள் இந்தப் பக்கத்தில் உள்ளன. மனதுக்குள் அடக்கி வைத்த சோகத்திற்கு இந்த வரிகள் குரல் கொடுக்கின்றன. காதல் தோல்வி அல்லது பிரிவின் நேரத்தில் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த வாசகர்கள்…
90 காதல் வலி கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
காதல் வலி கவிதைகள்
சந்தோஷமாக இருப்பது போல் பொய்யாக நடித்தே ஒவ்வொரு நாளும் கடந்து செல்கிறேன் உண்மையாகவே நான் சந்தோஷப்பட நீ என்னோடு இல்லை என்ற கவலை என்னோடே இருக்கிறது.
பிறப்பில் இருந்து இறப்பு வரை பிரிவில் தான் முடிகிறது காதல் மட்டுமே பிரிந்தும் பிரிய முடியாத வலியாய் தொடர்கிறது.!
எதிர்பாரா நேரத்தில் வெளிப்படுத்தப்படும் காதலுக்கு.. மதிப்பு கொஞ்சம் குறைவுதான்.!
பிரியமே பிரியத்தை கொடுத்து விட்டு.. நீ காணாமல் போவதால் நான் காணாமலே போய் விட்டேன்.
இன்னும் உன்னை தொலைக்கவில்லை உனக்கு வேறு வாழ்க்கை வந்த பிறகும் என் இதயம் உன்னை விட்டு போகவில்லை அன்பே.!
உனை விட்டு விலகுவதா எனத்தெரியவில்லை.. உனை பிரிந்து வாழமுடியும் என்ற நம்பிக்கை இல்லை.. என் வலியோ உனக்கு புரியவில்லை அந்த வலியை உனக்கு கொடுக்கவும் நான் விரும்பவில்லை.. பிரிகிறேன் உனக்காக வாழ்கிறேன் உன் காதல் நினைவுகளில் எரிந்து.!