காதல் வலி கவிதைகள் - love Pain kavithaikal in Tamil
விட்டு செல்லாதே உயிரே.. உன்னையும் இழந்து விட்டால் உயிர் வாழ்வதில் அர்த்தமில்லாமல் போய் விடும்.
காதல் வலி கவிதைகள் பற்றி · About
பிரிவு, நிறைவேறாத எதிர்பார்ப்பு, உடைந்த காதல் ஆகியவற்றின் வலியைப் பேசும் கவிதைகள் இந்தப் பக்கத்தில் உள்ளன. மனதுக்குள் அடக்கி வைத்த சோகத்திற்கு இந்த வரிகள் குரல் கொடுக்கின்றன. காதல் தோல்வி அல்லது பிரிவின் நேரத்தில் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த வாசகர்கள்…
90 காதல் வலி கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
காதல் வலி கவிதைகள்
உன்னுடைய பெயரை காதலித்தேன்.. உன்னுடைய வார்த்தைகளை காதலித்தேன்.. உன்னுடைய நம்பிக்கையை காதலித்தேன்.. இன்று நீ என்னுடன் இல்லை உன் பிரிவை கூட காதலிக்கிறேன்.!
மறுத்தும் மறந்தும் போன உன் இதய மலரில்.. தேனெடுக்க சுற்றிக்கொண்டிருக்கும் மதிகெட்ட தேனீ நான்.!
உன்னுள்ளே என்னைப் புதைத்து விட்டாய் காதலோடு என்னைத் தனிமையாக்கி பறந்து சென்றாய் வெளிவர முடியவில்லை.. உன் காதல் தோட்டா இல்லை என்னுள் இருந்து வெளியே எடுக்க.
காதல் தோல்வியை கொடுக்கும் போது தான் எத்தனையோ பேர் அருகில் இருந்தும் தனிமையில் சூழ்ந்து விடுகிறோம்.. இறக்காமலே நரகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
என்னை நிராகரிக்கவும் என்னை விட்டு செல்லவும் உனக்கு எப்போதும் உரிமை உண்டு.. நீ என்னை விட்டு பிரிவதால் என் மனம் வேதனை படும் என்று நீ வருத்தப்படாதே.. ஏன் என்றால் நீ என்னை மறுதலித்த போதே நான் இறந்து விட்டேன்.!
சந்தோஷமாக இருப்பது போல் பொய்யாக நடித்தே ஒவ்வொரு நாளும் கடந்து செல்கிறேன் உண்மையாகவே நான் சந்தோஷப்பட நீ என்னோடு இல்லை என்ற கவலை என்னோடே இருக்கிறது.